முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர் ‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின்…
Read Moreவெள்ளக் குதிர — திரை விமர்சனம்
நடுத்தர குடும்பத்தின் அனுதின போராட்ட வாழ்க்கையில் நொந்து போகும் நாயகன், ராங் ரூட்டில் போயாவது சீக்கிரமே செட்டில் ஆக வேண்டும் என்றஎண்ணத்தில் இருக்கிறார். அதற்காக தவறான பாதையை தேர்ந்தெடுத்து மாட்டிக் கொண்டதில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதாகிறது. இந்த நிலையில் தனது மனைவி மகனுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறார். அவர் நேரம் மீண்டும் சட்ட விரோதமான தொழிலை செய்யத் தொடங்குகிறார். விசேஷங்களுக்காக மட்டுமே அங்கே தயாரிக்கப்படும் போதை தரும் மூலிகை ரசத்தை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார். இதற்கிடையே, அந்த மலைக் கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரிக்கும் வேலையை ரகசியமாக செய்து வருகிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை…
Read Moreரிவால்வர் ரீட்டா — திரை விமர்சனம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷ் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தை தாங்குகிறார். அப்பா இல்லாத நிலையில் அம்மா, திருமணமான அக்கா, தங்கை என எல்லோரையும் பராமரிக்கும் பொறுப்பு அவருடையது. .புதுச்சேரியைக் கதிகலங்க வைக்கும் தாதா சூப்பர் சுப்பராயன். அவருக்குப் பெண் மோகம் உண்டு. அதை பயன்படுத்தி அவரை கொல்ல திட்டமிடுகிறது ஒரு கூட்டம். ஒரு நாள் வழக்கமான புரோக்கர் ஒருவரின் அழைப்பில் விலைமாதுவை சந்திக்க வரும் இடத்தில் அவரைப் போட்டுத் தள்ள திட்டம் தயாராகிறது. ஆனால் நடந்தது வேறு. தவறுதலாக அவர் கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். அப்போது கீர்த்தி சுரேஷும் அவரது குடும்பமும் சேர்ந்து அவரை தாக்க, தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரை விடுகிறார் சூப்பர் சுப்பராயன். கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, சட்ட விரோதமாக சடலத்தை அப்புறப்படுத்த மொத்த குடும்பமும்…
Read Moreஇயக்குனர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே பாபு வெளியிட்ட “அனலி” ஃபர்ஸ்ட் லுக்
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் டாடா, கராத்தே பாபு படங்களின் இயக்குனர் திரு.கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர். இயக்குனர் தினேஷ் தீனா அனலி படத்தை பற்றி கூறியதாவது, “இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. காட்டு மிருகங்களை விட மிகவும் மோசமானவன் மனிதன் அதில் மிகவும் முக்கியமானவன் இந்த லால்…
Read Moreகே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான…
Read More’யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா
டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீராம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தீனா, ராதிகா, சிவாஜி ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கார்த்திக் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார். சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், இயக்குநர் வி.இசட்.துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.…
Read MoreIFFI 2025 – கோவாவில் “லால் சலாம்” படத்திற்கு சிறப்புத் திரையிடல் மரியாதை
உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் *56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI)* வில், லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் சிறப்புத் திரையிடலுக்காக தேர்வு செய்யப்பட்டு பெருமையுடன் திரையிடப்பட்டது. இந்த சிறப்புத் திரையிடல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வில்,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,லைகா புரொடக்ஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு GKM தமிழ்க்குமரன்,இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,உட்பட பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். லைகா புரொடக்ஷன்ஸின் படைப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச மேடைகளில் கவனம் பெறுவது பெருமைக்குரிய சாதனையாகும். மேலும், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள லைகா புரொடக்ஷன்ஸின் ‘லாக்டவுன்’ திரைப்படமும் இரண்டு நாட்களுக்கு முன்பு IFFI மேடையில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read Moreஃப்ரைடே — திரை விமர்சனம்
வழக்கமான கூலிப்படை கதை. அதை வழக்கத்துக்கு மாறாக திரில்லருடன் சுவாரஸ்யம் இணைத்து தந்திருக்கிறார்கள். மைம் கோபி கூலிப்படை வைத்துக்கொண்டு தாராளமாக அதிரடி தடாலடி என வலம் வருபவர். தனக்குப் பணியாதவர்கள் எதிரிகள் என யாராயிருந்தாலும் தனது ஆட்களை அனுப்பி காலி பண்ணி விடுவார். அதே நேரம் அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருக்கிறார். வரும் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கிறது. இதனால் கட்சி எம் எல் ஏ வேட்பாளராக தேர்ந்தெடுத்த ஒருவரை இவரே ஆள் வைத்து போட்டுத் தள்ளுகிறார். அவரது நம்பிக்கைக்குரிய அடியாள் தான் கதையின் நாயகன். நேர்மையான போலீசாக இருந்த தன் தந்தையை கொன்றவனை சிறுவயதிலேயே போட்டு தள்ளியவன், அதற்குப் பிறகு எடுத்த கத்தியை கீழே போட முடியாமல் மைம் கோபியிடம் அடியாளாக சேர்கிறார். தனது…
Read Moreடிஸ்னியின் சிறந்த அனிமேஷன் படமாக 93% ராட்டன் டொமேட்டோஸ் மதிப்பெண்களுடன் ‘ஜூடோபியா 2’ திரைப்படம் உள்ளது!
வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் பில்லியன் டாலர் ஃபிரான்சிஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வலான ‘ஜூடோபியா 2’ திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ராட்டன் டொமேட்டோஸில் 93% விமர்சகர்களின் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது மட்டுமல்லாது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் டிஸ்னி அனிமேஷன் வெளியீட்டில் சிறந்த படமாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் பல மொழிகளில் வெளியாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் புத்திசாலித்தனமான, வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதை களத்திற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்று வருகிறது. படம் குழந்தைகளுக்காக மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் பெரியவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் நிரூபித்துள்ளது. நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் இணையவெளியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய அனிமேஷன் வெற்றிப் படங்களில் ஒன்றாக ‘ஜூடோபியா’ இருக்கும். வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நவம்பர் 28 ஆம் தேதி…
Read Moreவேல்ஸ் – டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் கைகோர்த்த டி ஸ்டுடியோஸ் போஸ்ட் “
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது. இதன் மூலம், இனி ‘வேல்ஸ் – டி ஸ்டுடியோ’ என்ற பெயரில் செயல்படுமென்பது குறிபிடத்தக்கது, இந்நிறுவனங்கள் தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்படும். நவீனத்தொழில்நுட்ப வசதிகளுடன் அமையப்பெற்ற டி ஸ்டுடியோஸ் போஸ்ட் நிறுவனம் முன்னணி இயக்குநர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. டாக்டர் ஐசரி கே. கணேஷ், இயக்குநர் விஜய்யுடன் இணைந்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறை தயாரிப்பிலும் தொழில்நுட்பத்திலும் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெருமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து இயக்குநர் விஜய் பகிர்ந்து கொண்டதாவது, “இந்திய சினிமாவின் இதயத்துடிப்பு சென்னைதான். திரைப்படத் தயாரிப்பின் சில துறைகளில் மும்பை எவ்வாறு முன்னணியில் உள்ளது என்பதை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். அதுதான் இங்கு உலகத் தரம் வாய்ந்த…
Read More