கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!

இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில் மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதர்ஸ் படத்தில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர். டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, தீரன் அதிகாரம் ஒன்று, உத்தம வில்லன், துணிவு போன்ற புகழ்பெற்ற…

Read More

விழாவில்   இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் கதையை நான் படித்துப்பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்து வருவதால் கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை. இயக்குனர் தமயந்தி அவர்கள் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார்கள் அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை நாம் தயாரிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்ப்பட்டது. அப்படி துவங்கப்பட்டது தான் காயல் திரைப்படம். நடிகர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை இன்று தான் பார்க்கிறேன். ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானாக வந்தடையும் , இந்தக்கதையும் அப்படிப்பட ஒரு இடத்தை வந்தடைந்திருக்கிறது. இன்னும் நல்ல கதைகளை திரைப்படமாக்குவதில் ஜெ ஸ்டுடியோ தயாராக இருக்கிறது . இந்த காயல் திரைப்படம் தமிழில் பெரும் வரவேற்பை பெரும் என்று நம்புகிறேன். விழாவில் பேசிய இயக்குனர் தமயந்தி இந்தக்கதை எனது வாழ்வில் நடந்த கதைதான். சாதி வன்முறை…

Read More

அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிருஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் பைலிங்குவல் ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!

பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் பெண் சக்தியை கொண்டாடும் வகையில் நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிருஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் பைலிங்குவல் ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது! ‘பர்தா’ திரைப்படம் த்ரில், பாரம்பரியம், போராட்டம் மற்றும் பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது என்பது டிரைய்லரின் முதல் காட்சியிலேயே தெளிவாகியுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ள படத்தின் டிரைய்லரில் பழைய மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் தங்கள் சுதந்திரத்தை எப்படி விசாலப்படுத்தினார்கள் என்பதை சொல்கிறது. கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் தனிமனிதரின் உணர்வுகளுக்கும் இடையிலான உரையாடலையும் படம் எடுத்துரைக்கிறது. ‘சினிமா பண்டி’, ‘சுபம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி இருக்கும் ‘பர்தா’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இளம்பெண்ணான சுப்பு தனது…

Read More

மார்ஷல் ராபின்சனின் எதிர்பார்த்தேன் என்ற புதிய காதல் பாடல் வெளியீடு!!

அன்பு, காதல் , தளராத நம்பிக்கை – இந்த மூன்றும் ஒன்றிணையும் புதிய இசைப் படைப்பை இசையமைத்தும் , தயாரித்தும், எழுதியும், பாடியும் உள்ளார் மார்ஷல் ராபின்சன். வாழ்க்கையில் உறவுகளில் பிளவுகள் தோன்றும் நேரத்தில், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை அமைதியாகப் பேணும் தருணங்களை இந்த பாடல் பசுமையாக சித்தரிக்கிறது. நெஞ்சை நெகிழச் செய்யும் இசை அமைப்பும், ஆழமான குரல்களும், தீவிரமான காதலின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகின்றன Music Credits Music composed, produced, written & sung by Marshall Robinson Guitars – Keba Jeremiah Synths & Piano – Bhuvanesh Narayanan Flute – Lalith Talluri Vocals recorded at 20db sound studios by Hariharan Vocal Production – Sreekanth Hariharan Choir Section – Kavitha…

Read More

‘ஷாஹீத்’ திரைப்படம் திரையிட்டு தேசபக்தி விழா ஆரம்பம் !!

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (N.F.D.C.) மற்றும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் ஆகியவற்றால் ஆகஸ்ட் 11 முதல் 13 வரை தாகூர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசபக்தி திரைப்பட விழா ஆகஸ்ட் 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு எஸ். ராம் சர்மாவின் ஷாஹீத் (1965) திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர் வசந்த், நடனக் கலைஞர் கலா மாஸ்டர், தமிழ் வர்த்தக சபையைச் சேர்ந்த சோழ நாச்சியார், நடிகர் வீரா & நடிகை நமீதா மற்றும் சங்கீத வித்வான் டாக்டர் ஏ.வி.எஸ். சிவகுமார் ஆகியோர் பாரம்பரிய விளக்கு ஏற்றும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று விருந்தினர்களை உரையாற்றினர். சென்னை NFDCயின் துணைப் பொது மேலாளர் மகேஷ் யாதவ் விருந்தினர்களை வரவேற்று அவர்களுக்கும் ஏற்பாடு…

Read More

“நறுவீ” தமிழகமெங்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !!

ஹரீஷ் சினிமாஸ் வழங்கும், தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் M இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “நறுவீ”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், சமூக அக்கறை கருத்துக்களுடன், ரொமான்ஸ் காமெடி, கலந்து பரபரப்பான ஹாரர் திரில்லர் படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுபாரக் M. மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி,…

Read More

தமிழ்நாட்டு மக்கள் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள்! – ‘ஹவுஸ் மேட்ஸ்’ நாயகி அர்ஷா பைஜூ உற்சாகம்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ‘ஹவுஸ் மேட்ஸ்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதோடு, அர்ஷா சாந்தினி பைஜூவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறது. தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் விளம்பர நிகழச்சிகளுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து வரும் அர்ஷா சாந்தினி பைஜூ, தனது முதல் தமிழ்ப் படம் அனுபவம் மற்றும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார். மலையாள சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தாலும், தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எனது ஆசை தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. தமிழ்நாட்டு…

Read More

கல்யாணி (Kalyani) & நஸ்லென் (Naslen) இணைந்து நடிக்கும், “லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று திரைக்குவருகிறது

துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு, லோகா – சேப்டர் 1 : சந்திரா திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தத்திரைப்படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் ( Dominic Arun) எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து…

Read More

யோகி பாபு நடிக்கும் ‘சந்நிதானம் (P.O)’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘சந்நிதானம் (P.O)’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது. ‘Tootu Madike’ போன்ற படங்களை தயாரித்த கன்னடாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sarvata Cine Garage மற்றும் ‘Veerappan’, ‘Sooryavamsi’, ‘Vaanku’ (தயாரிப்பு), ‘Nalla Samayam’ (விநியோகம்), ‘Rudhiram’ (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) போன்ற வெற்றி படங்களை தந்த மலையாளத்தின் முன்னணி நிறுவனமான ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, அமுத சாரதி வசனம் எழுதி இயக்கியுள்ளார். நட்சத்திரப் பட்டாளத்தை கொண்ட இந்த படத்தில், 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

Read More

நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் பாடல் வெளியாகியுள்ளது!

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில் ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் சேர்த்து இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜானு சாந்தர். ‘மரியான்’ படத்தில் ‘எங்க போன ராசா…’ உள்ளிட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர் குட்டி ரேவதி உணர்வுப்பூர்வமான ஆழமான பாடல் வரிகளை இதில் கொடுத்துள்ளார். கூடுதல் பாடல் வரிகளை சிவம் மற்றும் தீபக் கார்த்திக் குமார் எழுதி, இந்தப் பாடலுக்கு மேலும் அழகூட்டியுள்ளனர். பிரதீப் குமார் மற்றும் என்கே பிரியங்காவின் உணர்ச்சிப்பூர்வமான குரல்கள் இந்தப் பாடலின் ஆன்மாவாக அமைந்துள்ளது. இவர்களின் மென்மையான குரலுக்கு துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் திரையில் ஜோடி…

Read More