அரசியல் காமெடி தர்பாரை நடத்த திட்டமிட்டிருக்கும் ராதா ரவி- ரவி மரியா கூட்டணி

ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களான ராதா ரவி – ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழக சட்ட பேரவை தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்பை விட.. இந்த கூட்டணியின் அரசியல் காமெடி தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள். ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து,இயக்கிய இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, , கஞ்சா கருப்பு,இயக்குநர் பேரரசு ,நிழல்கள் ரவி , பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர்…

Read More

கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது. மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப்…

Read More

விஜயசாந்திக்கு பின் நான் தான் முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன் – சிந்தியா லூர்டே

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் சிந்தியா லூர்டே பேசும்போது, “வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு ‘அனலி’ என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமான இருக்கும். 90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் முதன் முறையாக ஒரு முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நான்…

Read More

ஆஸ்கர்‍-கிராமி நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ இந்திய சிம்பொனியை வெளியிட்டார்

இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்ப‌த்தை டிசம்பர் 27 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள பிக்வயலின்ஷாப்பில் தொடங்கி வைத்தார். ஏ.ஆர். ரஹ்மான் ஆல்பத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஸ்வரயோகா குழுவினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்கம் வாசிக்க, ‘த்ரிபின்னா’ ஆல்பத்தில் உள்ள இசையமைப்புகளை கணேஷ் ராஜகோபாலன் நேரடியாக வாசித்துக் காட்டினார். இந்நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான கிருஷ்ண குமார் மற்றும் பின்னி கிருஷ்ண குமார், வயலின் கலைஞர் குமரேஷ் மற்றும் வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் உள்ளிட்ட இசை மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ‘த்ரிபின்னா’ ஆல்பம், ஸ்வரங்களை…

Read More

பிரியங்கா மோகன் நடிக்கும், கன்னட படமான “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!

கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது. தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான ஒந்த் கதே ஹெல்லா Ondh Kathe…

Read More

ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம் !!

Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு பாடலை A R ரஹ்மான் பாடியிருந்தாலே ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மூன்வாக் மினி கேசட் அந்த அனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது. யூடுயூபில் ஒரே வீடியோவாக, ஆல்பத்தில் உள்ள அனைத்து 5 பாடல்களையும் தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் முழு ஆல்பத்தையும் தொடர்ச்சியாக, ஒரே அமர்வில் ரசிக்க முடிகிறது. இது இசை ரசிகர்களுக்கு…

Read More

குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

இனிகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’. இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இனிகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசியதாவது, “இந்தப் படம் எங்களுக்கு பெருமை. ஏனென்றால் சிங்கிள் பேரண்ட்டாக என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். பிற குழந்தைகளின் கல்விக்காகவும் நிறைய விஷயங்கள் செய்து வருகிறேன். இயக்குநர் நாராயணன் குழந்தைகளுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என 20 வித்தியாசமான கதாபாத்திரங்கள் எழுதியிருந்தார். அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்தான் ஸ்ரீனிகா. எந்தவிதமான சிக்கலும் இல்லாத எளிமையான கதை இது. 2 வயதில் இருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்லும்போது என்னென்ன கற்றுக் கொள்ள போகிறார்கள் என்பதுதான் கதை. நிறைய ஜாலியான விஷயங்கள் இதில் உண்டு.…

Read More

நடிகை ஸ்ருதிஹாசன்,  விஜய் சேதுபதிக்காக பாடிய பாடல் – 🎵டிரைன் படத்தின் கன்னக்குழிக்காரா !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது. விஜய் சேதுபதி…

Read More

இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடாக மட்டுமில்லாமல், பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூலைப் பெற்று இந்திய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனது இருப்பை தக்க வைத்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி பல படங்கள் வெளிவந்தாலும் அதை எல்லாம் தாண்டி, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாது, இரண்டாவது வார இறுதிக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் குடும்ப பார்வையாளர்களின் முதல் தேர்வாக உள்ளது. மேலும், பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை இந்தத் திரைப்படம் அனைத்து வயதினருக்கும் கொடுக்கிறது எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆன…

Read More

சிறை – திரைப்பட விமர்சனம்

கொலைக் குற்றவாளியாக கருதப்படும் இளைஞன் அப்துல் ரவூப் ஐந்து ஆண்டுகளாக விசாரணை கைதியாகவே இருக்கிறார். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது வழக்கம்போல வாய்தா போட்டு விடுவார்கள். இப்படி 5 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் தொடர் வாய்தாக்கள் அவரை விசாரணைக் கைதியாகவே வைத்திருக்கிறது. இந்த அப்துலுக்கும் கனவுகள் உண்டு. கண்ணான ஒரு காதலி உண்டு. ஒரு இரவில் தன் தாயை தாக்க வந்தவரை அப்துல் ஆவேசமாய் தள்ளிவிட, அவர் தலை கல்லில் நொறுங்கி உயிர் போய் விட… இந்த மோதலில் அப்துல் தாயும் மரணிக்க , இனி அவனுக்கென்று இருப்பது காதல் நிறைந்த உயிர்க் காதலி தான். காதலியின் தந்தை தான் இங்கே கொலை செய்யப்பட்டவர். கொலையாளி இந்த அப்துல் ரவூப். வழக்கம்போல விசாரணை கைதிகளை கோர்ட்டில்…

Read More