‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, ‘சாகர சங்கமம்’ மற்றும் ‘சுவாதி முத்யம்’ போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது. தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு அனுமுலா ரேவந்த் ரெட்டி அவர்கள், இந்த விருதை திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வழங்கினார். இன்று ‘பான்-இந்தியா சினிமா’ (Pan-India Cinema) கொண்டாடப்படும் வேளையில், பல மொழிகளில் கமல் ஹாசன் அவர்கள்…
Read Moreயூத் – விமர்சனம் . ஜாலியான ஸ்கூல் கலாட்டா [4.5/5]
கதை… கென் – அனிஷ்மா – மீனாட்சி – பிரியான்ஸி .. இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள்.. இதில் கென் படிக்கும் அதே வகுப்பில் படிக்கிறார் அனிஷ்மா.. இவர்தான் சிறை படத்தில் நாயகியாக நடித்தவர். மீனாட்சி – பிரியாண்ஸி .. இருவரும் அடுத்த வகுப்பு தோழிகள்.. இதில் மீனாட்சி காதலிக்கிறார் கென்.. ஒரு கட்டத்தில் மீனாட்சி ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை விட்டு வெளியூருக்கு செல்கிறார்.. அந்த சூழ்நிலையில் மற்றொரு பெண் மீது ஒரு ஈர்ப்பு கொள்கிறார் கென்.. இதனால் சில பிரச்சினைகள் வருகிறது.. இறுதியில் யாருடன் கென் காதல் கைகூடியது என்பதை சுவாரசியமாக வித்தியாசமாக அன்பாக சொல்லி இருக்கிறார் நடிகரும் இயக்குனருமான கென்.. நடிகர்கள்… Hero – Ken Karunas Heroin – Anishma Anilkumar, Meenakshi Dinesh, Priyanshi Yadav…
Read Moreஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்!!
Dev Cinemas Pvt Ltd சார்பில் கிருத்திகா தங்கபாண்டி S தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரின் தொடக்கமே தன் வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக மிகவும் உணர்ச்சிபூர்வமாகதோன்றுகிறார் யோகிபாபு. தன் வண்டியை மீட்க யோகிபாபு போராடுவதும் அதே வண்டியை பலர் உரிமை கொண்டாடுவதும் என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த டீஸர் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.. படம் வெளியானால் பழைய வண்டிகள் வாங்கி விற்பதில் நடக்கும் பெரும் மோசடிகள் அனைத்துமே மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடும் என அர்ஜுனன் பேர் பத்து படக்குழு தெரிவித்தனர்… மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.…
Read Moreஇருட்டு’, ‘தலைநகரம் 2’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது
‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z. இயக்குகிறார். ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார். திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், “சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்,” என்றார். யோகி பாபு,…
Read Moreநெட்ஃபிலிக்ஸ் தமிழில் வெளியான ‘மேட் இன் கொரியா’ படம் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து 24 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது!
மும்பை, மார்ச் 18, 2026: சில திரைப்படங்கள் முடிந்த பிறகும் பார்வையாளர்களின் மனதை விட்டு அகலாது. மனதை தொடும் கதையோடு, இருவேறு கலாச்சாரங்களை அழகாக காட்சிப்படுத்திய ‘மேட் இன் கொரியா’ திரைப்படமும் அதுபோன்ற தாக்கத்தைத்தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திக் இயக்கத்தில்,பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான இந்த படம் நெட்ஃப்லிக்ஸின் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து 24 நாடுகளில் டிரெண்டிங்கில் உள்ளது. குறிப்பாக, உரிமம் பெற்ற மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த ஒரே தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் மார்ச் 12 அன்று ப்ரீமியர் ஆன ‘மேட் இன் கொரியா’ அதன் கவரும் கதைக்களத்தால் அதிக பார்வையாளர்களை ஈர்த்தது. தமிழ்நாட்டில் இருந்து சியோல் வரை செல்லும் செண்பாவின் பயணத்தை மையமாகக் கொண்ட…
Read Moreரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் ஹாரர் திரைப்படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் தமிழில் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருப்பது ‘தி லைப்ரரியன்’ என்ற மர்மமான கதாபாத்திரம். புத்தாண்டு தினத்தில் சஸ்பென்சாக வைக்கப்பட்ட, இரண்டாம் பாகத்தின் மர்மமான ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் இப்போது யார் நடிக்கிறார் என்பது படக்குழு வெளிப்படுத்தியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள…
Read Moreநான்கு நாட்களில் 3.1 மில்லியன் பார்வைகள் – இசையமைப்பாளர் ராலே ராஜனின் “Feel the Spark” வைரல் சாதனை
சென்னை / பார்சிலோனா – சர்வதேச இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ராலே ராஜன் (Raleigh Rajan) உருவாக்கியுள்ள “Feel the Spark” பாடல், இணைய தளங்களில் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட இந்த ‘American Pop’ பாடல், வெளியான நான்கு நாட்களிலேயே 3.1 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுயாதீனக் கலைஞராக (Independent Artist) இருக்கும் ராலே ராஜன், இந்தப் பாடலின் இசை மற்றும் வரிகளை தானே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன இசைத் துடிப்பும் சர்வதேச தரமும் இணைந்துள்ள இந்தப் பாடல், இசை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள நவீன ஒலியமைப்பு உலகளாவிய இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வெற்றி குறித்து ராலே ராஜன் கூறுகையில், “உலகெங்கிலும்…
Read Moreயுனிவர்சல் மியூசிக் இந்தியா, அனிருத் ரவிச்சந்தரின் புதிய இசைப்பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் பிரத்யேக கூட்டாண்மையை அமைத்துள்ளது
முன்னோடி கலைஞரான அனிருத் ரவிச்சந்தர் திரைப்படங்கள் அல்லாத மற்ற இசை வெளியீடுகளுக்காகத் தொடங்கியுள்ள அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் எனும் புதிய நிறுவனத்தின் பிரத்யேக கூட்டாளராக யுனிவர்சல் மியூசிக் இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய ஒப்பந்தம், தென்னிந்திய சந்தையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெயர்களுடன் தொடர்புடைய பாப், ஹிப்-ஹாப் ஆகிய இசை வகைகளில் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவின் வளர்ந்து வரும் இருப்பை வலுப்படுத்துகிறது. மும்பை, 17 மார்ச் 2026 – இசை சார்ந்த பொழுதுபோக்குத் துறையில் உலக முன்னணி நிறுவனமாகத் திகழும் யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவான யுனிவர்சல் மியூசிக் இந்தியா, பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் சமீபத்தில் தொடங்கியுள்ள சுயாதீன இசைப் பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் (Albuquerque Records) உடன் ஒரு பிரத்யேக கூட்டாண்மை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், அனிருத்…
Read Moreசர்வதேச தரத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ராஜாதிராஜ் யாத்ரா’ நாடகம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் நடைபெறுகிறது
‘ராஜாதிராஜ் யாத்ரா’ எனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளையும் தெய்வீக வாழ்க்கையையும் போற்றும் பிரம்மாண்டமான நாடகம் சென்னையில் நடைபெறவுள்ளது. பல்வேறு நகரங்களில் அரங்கேற்றப்பட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்நாடகம் முதல் முறையாக சென்னையில் நிகழவுள்ளது. திரு தன்ராஜ் நத்வானியின் கருத்துருவாக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ராஜாதிராஜ் யாத்ரா’ நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது. அமெரிக்காவின் பிராட்வே மியூசிக்கல்ஸ் நிகழ்ச்சிகளைப் போல அதிக பொருட்செலவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட அரங்குகளோடு இசை, நடனம், விஷுவல் எஃபெக்ட்ஸ் என பார்வையாளர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் ரசனைக்கும் விருந்து படைக்கும் வகையில் இந்த நாடகம் திகழும். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் மார்ச் 27, 28 மற்றும் 29…
Read Moreவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி…
Read More