Watch the trailer now: https://youtu.be/wL3v1rvh1z4 ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில், இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தில் இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அசோக், ‘பிக் பாஸ்’ சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், ‘அருவி’ பாலா, யாசர், பிரதிக்ஷா, பசுபதி ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை எஸ்.என். ஃபாசில் கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்…
Read More‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது
Watch the trailer now: https://youtu.be/wL3v1rvh1z4 நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் பேனரில் குகன் சண்முகம் ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிட உள்ள நிலையில், படத்தின் டிரைலர் சென்னையில் இன்று (நவம்பர் 16) வெளியிடப்பட்டது. இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ படத்தில் அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ்,…
Read Moreஎல் கே சுதீஷ் எம் பி இல்லத் திருமண விழா..
தேமுதிகவின் பொருளாளரும் , திரைப்படத் தயாரிப்பாளரும்,ராஜ்யசபா எம்பியுமான எல் கே சுதீஷ் எம் பி மற்றும் பூர்ண ஜோதி சுதீஷ் அவர்களின் மூத்த மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ எம் பி பி எஸ் அவர்களுக்கு ஓசூரைச் சார்ந்த அகில் குமார் என்பவரோடு திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி காலை 8:30 மணி முதல் 10 மணி வரை திருமணம் நடைபெற உள்ளது.. வரவேற்பு நிகழ்ச்சியும் அதே ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நவம்பர் 21ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் நடைபெற உள்ளது.. இந்த திருமண நிகழ்ச்சியை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்குப் பிறகு அந்த குடும்பத்தில் நடக்கும் முதல் திருமண விழாவாக அனைவரும் கருதுவதால். தேமுதிகவின்…
Read Moreலார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், அந்நிறுவனத்தின் முந்தைய வெற்றிப் படங்களான ‘கருடன்’, ‘மாமன்’ ஆகியவற்றைத் தொடர்ந்து உருவாகிறது. ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் கவனம் ஈர்த்த ஹரிஹரன் ராம் இப்படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிப்பதுடன், இப்படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். இதில் அவர் கிரிக்கெட் வீரராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் தீவிரப் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ‘ஜோ’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த…
Read Moreதமிழக முதல்வர் விஜயுடன் மூன்று படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கௌசல்யா மீண்டும் அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘லவ் லாக்’
ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எட்வின் GJ இயக்கத்தில் ‘மொத ராத்திரி’ படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் D.K. கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘லவ் லாக்- Love Lock” படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எட்வின் GJ இயக்கத்தில் தயாராகும் ‘லவ் லாக் – Love Lock’ படத்தில் D.K. கார்த்திகேயன், கௌசல்யா, நடிகை லாவன்யா, ராஜ் MRK , அன்பழகன், ரமா, உதய் மகேஷ், அஜித் கோஷி, தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரசோமிகின் – (Razomikhln) ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மூன்ராக்ஸ் ( MoonRoxx) இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அர்ஜுன் மேற்கொள்ள கலை இயக்கத்தை எஸ் ஏ ராஜா கவனிக்கிறார். லவ்…
Read Moreசிவகார்த்திகேயனின் SK Productions மற்றும் Passion Studios இணைந்து தயாரித்துள்ள ‘தாய்க்கிழவி’ திரைப்படம், 57-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவான International Film Festival of India (IFFI) 2026-ன் இந்தியன் பனோரமா (Indian Panorama) பிரிவில் திரையிடுவதற்காக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான IFFI-யின் இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெற்றிருப்பது, தமிழ் சினிமாவுக்கும், ‘தாய்க்கிழவி’ திரைப்படத்திற்கும், அதன் தயாரிப்பு நிறுவனமான SK Productions-க்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும். இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் படக்குழுவினர் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர். ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய்க்கிழவி’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வயதான பெண்ணின் வாழ்க்கை, குடும்ப உறவுகள், சமூகத்தின் பார்வை, பெண்களின் சுயமரியாதை எனப் பல்வேறு அம்சங்களை நகைச்சுவையும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் கலந்து சொல்லியிருந்த இப்படம், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. உலகளவில் 90 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்ற இப்படம், 2026-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்தது. இப்படத்தில் பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்த ராதிகா…
Read Moreகனவு வெட்டிங் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை பவித்ரா லட்சுமி அறிவிப்பு!
சென்னையில், சொகுசுத் திருமண அனுபவத்தை வழங்கும் முன்னணி நிறுவனமான ‘கனவு வெட்டிங்’ பிராண்ட், டிசம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள RK கன்வென்ஷன் சென்டரில் மூன்று நாள் பிரம்மாண்ட திருமணக் கண்காட்சியை நடத்தவுள்ளது. ஒவ்வொரு கொண்டாட்டமும் மறக்க முடியாத ஓர் அனுபவமாக அமைய வேண்டும். இந்த நோக்கத்துடன், தமிழில் ‘கனவு’ என்ற அழகான அர்த்தத்தைக் கொண்ட ‘கனவு வெட்டிங்’ என்ற சொகுசுத் திருமண அனுபவத்தை வழங்கும் பிராண்டின் அதிகாரப்பூர்வ லோகோ, சென்னையில் உள்ள ஹோட்டல் அக்கார்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லோகோவை நடிகர் கணேஷ் வெங்கட்ராம், பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், டாக்டர் சாம் பால், நடிகை பவித்ரா லட்சுமி மற்றும் உபாசனா உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த…
Read More‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வாலி மோகன் தாஸ் தயாரித்து இயக்குகிறார். படத்தின் எழுத்துப் பணிகளை வாலி மோகன் தாஸ் மற்றும் உமர் எஸ். இணைந்து மேற்கொண்டுள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஒளிப்பதிவுப் பணிகளை ஆர்தர் ஏ. வில்சன் கவனிக்கிறார். இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இயக்குநர் வாலி மோகன் தாஸ், கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ரங்கோலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள நடிகர்…
Read Moreஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘கிளிக்’
ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனம் சார்பில் ராஜாபிரபு தயாரித்து, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில், ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘கிளிக்’ எனும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டைனர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தைத் தயாரிப்பதுடன் ராஜாபிரபுவே கதாநாயகனாகவும் நடிக்கிறார். துள்ளலான இளமை, சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு புதுமையான கதையாக, இன்றைய தலைமுறையினருடன் எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஜென் சி (Gen-Z) கதைக்களத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் உருவாகும் ‘கிளிக்’, உறவுகளின் உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளின் எதிர்பாராத திருப்புமுனைகளை அழகாக வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கலகலப்பான திரை அனுபவத்தை வழங்க உள்ளது. *நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்* ஓவியா, ராஜாபிரபு, சுந்தர் மஹாஸ்ரீ , அஸ்மிதா, அமுதவாணன், ‘லொள்ளு சபா’…
Read More‘யானைமரம்’ திரைப்பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான சேரன், ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘யானைமரம்’ படத்தின் டிரைலரை பார்த்து, பாராட்டியது மட்டுமல்லாமல், ‘யானைமரம்’ படத்தின் போஸ்டரையும் வெளியிட்டார். உரிமைக்காக போராடும் சிறுவனின் முயற்சி கண்கலங்க வைக்கும். பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம் ‘யானை மரம்’. படத்தின் இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் ஆர்.சசிகலா இருவரையும் பாராட்டினார் சேரன். மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், ஜெயிலர் சீனு, ராணி, மஞ்சு, லீலா ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இசை அரவிந்த் சித்தார்தா, கலை ஆர்.அபிராம், படத்தொகுப்பு கோபால், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சசிகலா தயாரித்துள்ளார். விரைவில் திரைக்கு வருகிறது ‘யானை மரம்’.
Read More