இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதியர்!!

இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இயக்குநர் – தயாரிப்பாளர் அட்லீ – திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக அட்லீ அப்பாவாகி இருக்கிறார். இது தொடர்பாக பிரியா அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” எங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைகிறார். ஆம்! நான் மீண்டும் கருவுற்று இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளையும், அன்பையும் எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டு, பிரத்யேக புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம்-  அட்லீயின் விவரிக்க முடியாத தந்தையின் பாசத்தையும்,…

Read More

‘லாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு ‘அறுவடை’ திரைப்படம்.

இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை , படத்தொகுப்பு – கே .கே . விக்னேஷ். பாடல்கள் – கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார். கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் ‘அறுவடை’ படத்தின் சார்பில் கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடிப் படப்பிடிப்பை முடித்துள்ளனர். அறுவடைத் திருநாள்…

Read More

பிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !!

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம்,  தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.…

Read More

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும்…

Read More

“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது, வரலாற்றுப் படமான ‘திரௌபதி 2’ மூலம் இதுவரை காணாத வீரத் தோற்றத்தில் ரசிகர்களை திரையில் சந்திக்க உள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ’திரெளபதி 2’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான அனுபவங்களை ரிச்சர்ட் ரிஷி பகிர்ந்து கொண்டார். “’திரௌபதி 2’ படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த…

Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘மான சங்கர வர பிரசாத் ‘திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து உணர்ச்சி பூர்வமான செய்தி வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி

உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மான சங்கர வர பிரசாத் ‘ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி தனது இதய பூர்வமான -ஆழமான – உணர்ச்சி பூர்வமான- செய்தியை வெளியிட்டிருப்பதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுடனான தன்னுடைய பிரிக்க முடியாத பிணைப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஒரு தெலுங்குத் திரைப்படம் இந்த இலக்கை அடைவது இதுவே அதிவேகமான சாதனையாகும். இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் மூன்று மில்லியன் டாலர் வசூல் என்ற மைல் கல்லையும் கடந்து, சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் அனில் ரவி புடி கூட்டணியின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாகவுப் உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி எட்டாவது நாளில் வலிமையான வசூலை பதிவு செய்த MSG- பெரும் முன் பதிவுகளின் ஆதரவுடன் ஒன்பதாவது நாளில் கூடுதல் வலிமையையும்…

Read More

விஸ்வராகம் – சுமதி ராம் வழங்கும், மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கான இதயப்பூர்வ இசை அஞ்சலி !!

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan (எம். எஸ். விஸ்வநாதன்) அவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு ஆன்மார்த்தமான இசைத் துதியாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த இசை யாத்திரை, தமிழர்களின் பாரம்பரியமும் குடும்ப உறவுகளும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் – 2026 ஜனவரி 14 அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞரும் பன்முகக் கலைஞருமான சுமதி ராம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தனது கவிதைத் தொகுப்பை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சமர்ப்பித்தார். அந்த சந்திப்பு, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ஒரு வாழ்நாள் இசைப் பயணத்தின் தொடக்கமாக மாறியது. அந்த ஜாம்பவான் விதைத்த இசை விதை, இன்று இசையின் மீதான தூய காதலாக…

Read More

இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது!

தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மெருகேற்றி வருபவர் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார். அவரது நடிப்பில் வரவிருக்கும் ’மெஜந்தா’ படத்தின் டீசரில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ‘சாந்தனு 2.0’ என கொண்டாடி வருகின்றனர். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சாந்தனுவை பார்க்கும் விதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்துள்ளது. கதாநாயகனுக்கான சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் பரத் மோகன் வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை அஞ்சலி நாயரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உயர்ந்துள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி ஆகியவை விரைவில்…

Read More

ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு : வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!

தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக ‘ஒளடதம்’  படத்தின் மூலம் அறிமுகமானார்  நேதாஜி பிரபு.மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். ‘ஒளடதம்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு. சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில்  அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில்  30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார். இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார். இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது…

Read More

பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும், இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது!

தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மெருகேற்றி வருபவர் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார். அவரது நடிப்பில் வரவிருக்கும் ’மெஜந்தா’ படத்தின் டீசரில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ‘சாந்தனு 2.0’ என கொண்டாடி வருகின்றனர். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சாந்தனுவை பார்க்கும் விதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்துள்ளது. கதாநாயகனுக்கான சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் பரத் மோகன் வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை அஞ்சலி நாயரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உயர்ந்துள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி ஆகியவை விரைவில்…

Read More