இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில், மறைந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இனிமையான குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடலான ‘வா சிவா’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயக்குநர் K.P. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில் K.P. ஜெகன், விஜய் வர்மா, எம். எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ், இயக்குனர் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுக. செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை மணிகண்டன் சிவக்குமார் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வீரசமர் கவனித்திருக்கிறார். தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாகத் தயாராகியுள்ள…
Read Moreசத்தியவான் சாவித்திரி விமர்சனம்
கதை.. சீனியர் வழக்கறிஞர் மிஷ்கினிடம் ஜூனியராக பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஒரு கட்டத்தில் அவரையே எதிர்க்க வேண்டிய சூழ்நிலை.. காரணம் கீர்த்தியின் கணவர் மீது கொலை பழி விழுகிறது.. கீர்த்தியின் கணவர் சாருகேசிதான் ஒரு பெண்ணை கொலை செய்தார் என்று மிஸ்கின் வாதாட தன் கணவர் குற்றமற்றவர் என நிரூபிக்க எதிர்த்து போராடுகிறார் கீர்த்தி சுரேஷ்.. இறுதியில் வழக்கு என்ன ஆனது.. ஷில்பா மஞ்சுநாத்தை கொன்றவர் யார்? சாருகேசி கொலை செய்யவில்லை என்றால் கொலையாளி யார்.? வாதாடி வழக்கில் ஜெயித்தது யார்.? என்பதெல்லாம் திரைக்கதை நடிகர்கள்… கதை நாயகி கீர்த்தி சுரேஷ்.. கணவனுக்காக வாதாடி வக்கீலை எதிர்த்து நிற்கும் துணிச்சல் பெற்ற கேரக்டரில் ஜொலிக்கிறார் கீர்த்தி.. அப்பாவி பெண் கேரக்டரில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் இல் அதிரடியான ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறார் கீர்த்தி.. தன்னிடம் பணிபுரிந்த ஜூனியர் தன்னையே…
Read Moreஅப்பா குட்டி விமர்சனம்..
கதை… உறவினர் மற்றும் மனைவி என யாரும் இல்லாத நிலையில் குழந்தையை வளர்த்து வருகிறார் விஜய் ஆண்டனி.. குழந்தை படிக்கும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார் ப்ரீத்திஅஸ்ராணி.. விஜய் ஆண்டனியின் கேரக்டர் பிடித்துப் போனதால் அவரிடம் தன் காதலை சொல்கிறார் பிரீத்தி.. ஆனால் காதலை ஏற்க மறுக்கிறார் விஜய் ஆண்டனி.. தன் மனைவி இறந்து விட்டதாக விஜய் ஆண்டனி சொன்னதை நம்பும் பிரீத்தி ஒரு கட்டத்தில் அவரை ஊட்டியில் சந்திக்கிறார்.. அப்படி என்றால் மனைவி இறந்து விட்டதாக விஜய் ஆண்டனி சொல்ல என்ன காரணம்.? குழந்தையை இவர் தானாக வளர்க்க என்ன காரணம்.? நடந்தது என்ன நடக்கப் போவது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… விஜய் ஆண்டனி நடிப்பில் வந்திருக்கும் மற்றொரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் இந்த அப்பா குட்டி.. தன் அப்பாவை அப்பா குட்டி என்று அழைக்கிறார்…
Read Moreஆகாயத்தில் ஒரு தாரகை விமர்சனம் 4.5/5
கதை… அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் சாத்விகாவை அவரது 16 வயதினிலே திருமணம் செய்து கொள்கிறார் துல்கர் சல்மான்.. முதலிரவு அன்றுதான் தன் மனைவி சாத்வீகாவுக்கு ஒரு லட்சியம் இருப்பதை அறிகிறார்.. விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் அதற்காக படிக்க வேண்டும் என்கிறார் மனைவி.. மனைவியின் விண்வெளி ஆசையை நிறைவேற்றினாரா கணவன்.? என்ன நடந்தது.? அந்த கிராமத்தில் இருந்து அவர்களால் தங்களுடைய லட்சியக் கனவு எட்ட முடிந்ததா.? என்பதெல்லாம் சிறப்பான திரைக்கதை.. நடிகர்கள்… நாயகன் – துல்கர் சல்மான்.. நாயகி – சாத்விகா வீரவல்லி (அறிமுகம்) பஞ்சு வசனங்கள் பேசி பறந்து பறந்து ஃபைட் செய்து என எந்த ஹீரோயிசம் இல்லாமல் மனைவிக்காக போராடும் கணவன் கேரக்டர்.. அதில் தூள் கிளப்பி இருக்கிறார் துல்கர் சல்மான்.. பல கணவர்களுக்கு துல்கர் கேரக்டர் பொறாமையை ஏற்படுத்தும்…
Read Moreஓம் – திரை விமர்சனம் 4.5/5
கதை… ஆந்திராவில் இருந்து விலைமதிப்பு மிக்க செம்மரங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் மம்முட்டி.. இவரின் கூட்டத்தை அடியோடு ஒழிக்க திட்டமிடுகிறார் போலீஸ் சாய் பல்லவி.. OM ஆப்ரேஷன் மோல் என்ற திட்டத்தின் மூலம் செயல்படும் சாய்பல்லவிக்கு உதவியாக தனுஷ் இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் மம்மூட்டியின் ரகசிய திட்டங்களை அறிந்து கொள்ள அவரிடம் தனுஷை சேர சொல்லி அதன் மூலம் கடத்தல் ரகசியங்களை அறிந்து கொள்கிறார்.. மம்மூட்டியின் கூட்டத்திற்குள் செல்லும் தனுஷ்.. அந்தக் கூட்டத்தின் திட்டங்களை அறிந்து கொண்டாரா.? ஆந்திர போலீஸ் சாய்பல்லவிக்கு அவர் எப்படி உதவினார்.? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… தனுஷ் மம்மூட்டி சாய் பல்லவி மூவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர் ஆனால் இரண்டு நடிகர்களை காட்டிலும் சாய் பல்லவி சபாஷ் பெறுகிறார்.. தனுஷ் வழக்கம் போல ஆட்டம் பாட்டம்…
Read More‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து HAVEN PICTURES, RK கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத் தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’!
ஏ.வி.எல்.டி புரொடக்ஷன் (AVLT PRODUCTION) சார்பில் | ஜெகன் ஜான் பீட்டர் (Jegen John Peter) தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’. புலனாய்வு க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த தமிழ்ப்படம் விரைவில் தமிழகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. ‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் HAVEN PICTURES RK. கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத் தமிழ்ப்படம் இது. நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘கோட்’ திரைப்படங்களின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்ற இர்ஃபான் ஜைனி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ். வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி G , கலைமாமணி கே. எஸ் மணியம், நிஷா மற்றும்…
Read Moreகோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Scroll’ திரைப்படம்
K16 Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கும் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேலும் 7 பிற நாட்டு திரைப்படங்களோடு தேர்வு ஆன ஒரே தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ‘Password’ என்ற தமிழ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கண்ணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ‘Screen movie’ வகையைச் சார்ந்த இந்த திரைப்படம், கதை முழுக்க நாயகனின் செல்போன் திரை வழியே சொல்லபடுகின்ற வித்தியாசமான முயற்சியாக உருவாகி இருக்கிறது. Smartphone addiction என்பதை மையப்படுத்தி இதன் திரைக்கதை அமைந்துள்ளது. அந்த செவ்வக சாதனத்திற்கு ஒருவர் அடிமையாவதன் …
Read More“கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!
ஒரு கனவை நனவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கப் பணம் அவசியமில்லை. சில நேரங்களில் ஒரு யோசனையின் மீது நம்பிக்கை வைத்து, அதைச் செயல்படுத்தும் துணிச்சலும் விடாமுயற்சியும் இருந்தால் போதும். அத்தகைய எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் பீட்சா பாய்ஸ். வாழ்வாதாரத்தைத் தேடி கிராமப்புறத் தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு வரும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர்கள் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு சவால்களை எதிர்கொள்ளும் சூழலையும் இப்படம் பேசுகிறது. நட்பு, லட்சியம், நகைச்சுவை, மனித உணர்வுகள் என அனைத்தையும் கலந்து, அறிமுகமில்லாத நகரத்தில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கப் போராடும் இளைஞர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமான கோணத்தில் இப்படம் எடுத்துரைக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி பெங்களூருவுக்குச் செல்கின்றனர். அங்கு ஒரு பீட்சா உணவகத்தில் பணிபுரியத் தொடங்கும் அவர்களின் வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கிறது. முதலாளியுடன் ஏற்படும்…
Read Moreதிக்..திக்..திருப்பங்களோடு மிரள வைக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரைப்படம் ‘வயலெட் கனவு’ நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், குறைந்த முதலீட்டில், அறிமுக இயக்குநர் மற்றும் நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில், கிரைம் நாவல் மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில், இயக்குநர் பி.நித்தியானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வயலெட் கனவு’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஹாலிவுட் எழுத்தாளர்களைப் போல் ஒரு திரைப்படத்திற்கு தேவையான சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்புடன் தனது நாவல்களை எழுதக்கூடிய திறன் படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமாரின், மிகவும் புகழ்பெற்ற நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டட இயக்குநர் பி.நித்தியானந்தம் D.F.T, திரை மொழியில் பார்வையாளர்கள் மிரளும் வகையில் ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார். அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் D.F.T…
Read Moreநடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!
தமிழ்த் திரையிசையுலகில் தனித்துவமான இசையமைப்பாளராகத் திகழும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள மனதைத் தொடும் ‘இற இறகாக..’ எனத் தொடங்கும் காதல் பாடலை பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. ‘மக்கள் காவலன்’ படத்தில் இடம்பெற்ற ‘இக்னோர்’ (IGNORE) எனும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ படத்திலிருந்து ‘இற இறகாக..’ எனும் இரண்டாவது பாடலை பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. பாடலாசிரியர் ஜோதி கண்ணாவின் வரிகளில், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடல், நாயகன் தனது கடினமான உலகத்திலிருந்து விடுபட்டு, காதலியின் (திவ்யா ஸ்ரீ பாதா – இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்)அன்பின் மூலம்…
Read More