சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார். ஏப்ரல்…

Read More

ஹேப்பி ராஜ் – விமர்சனம்

மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஹாப்பி ராஜ்.. கதை… ஜார்ஜ் மரியான் & கீதா கைலாசம் இவர்களின் மகன் ஜிவி பிரகாஷ்.. தந்தை ஆசிரியர் என்றாலும் சிறு வயது முதலே இவரை பலரும் உருவ கேலி செய்கின்றனர் குதிரை முட்டை என்பது இவரது பட்ட பெயராகும்.. ஒரு கட்டத்தில் இவரது மகனையும் குட்டி குதிரை முட்ட என சொல்ல ஆரம்பிக்கின்றனர்.. இதனால் தாழ்வு மனப்பான்மையில் வளர்கிறார்.. இவர் சைட் அடிக்க பெண்களும் இவரது தந்தையின் பெயரைச் சொல்லி அழைப்பதால் இன்னாரின் மகன் என்று சொல்லவே கூச்சப்படுகிறார் ஜிவி பிரகாஷ். ஒரு கட்டத்தில் வேலை காரணமாக பெங்களூர் செல்கிறார்.. அங்கு தன் திறமை மூலம் உயர்ந்த நிலையை அடைகிறார்.. நாயகி கௌரிப்பிரியாவை காதலிக்க அவரது அப்பா அப்பாஸ் அவர்களும் ஜிவி பிரகாஷின்…

Read More

Roll Time Studios* – தயாரிப்பில் ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

Roll Time Studios தயாரிப்பில் புதிய திரைப்படமான “movie title” இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் திபு நிநான் தாமஸ் இசை அமைக்கிறார். பிரவீன் போத்தன் பட ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மேலும் படத்தொகுப்பை லாரண்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். அறிமுக…

Read More

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா!

தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார். அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரமான படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில்…

Read More

`சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடப் போவதில்லை!’- கமல்ஹாசன் அறிவிப்பு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேட்டரி டார்ச் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுதி. பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இந்தச் சூழ்நிலையில், தமிழக மக்களின் நலன் கருதியும், மதவாத சக்திகளின் பிடியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் கடமையினை உணர்ந்தும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி…

Read More

நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் ‘Blood Followed The Flood’ எனும் டேக்லைன் கொண்ட புதிய படம் #சூரி07, #மைத்ரிதமிழ்03 அறிவிப்பு!

இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் #மைத்ரிதமிழ்03 என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் மர்மான முறையில் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.வலது கையில் கதாநாயகன் பிடித்திருக்கும் ஆயுதம் ஆபத்தையும் உயிர் தப்பி வாழ்வதற்கான போராட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அவரைச் சுற்றி உடைந்த…

Read More

‘Roar 26’ விழாவை சிறப்பாக நடத்திய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்!

பாணா காத்தாடி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஜாம்பவான்களுடன், தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்தினர். சைமா (SIIMA) மற்றும் மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற உயர்மட்ட நிகழ்ச்சிகளை இயக்கிய தனது அனுபவத்தைக் கொண்டு, பத்ரி வெங்கடேஷ் ‘ரோர் 26’ நிகழ்வை ஒரு மறக்க முடியாத இரவாக மாற்றினார். ஏற்கனவே…

Read More

*சென்னையில் “கேபி சேனா” கோலாகல தொடக்க விழா* – காப்பு, பலிஜா சமூகங்களின் ஒற்றுமைக்கு அழைப்பு

*சென்னை:* காப்பு மற்றும் பலிஜா சமூகங்களின் ஒற்றுமை மற்றும் सर्वांगीण வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு “கேபி சேனா” (காப்பு-பலிஜா சேனா) அமைப்பின் தொடக்க விழா இன்று சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த பல அரசியல், தொழில்துறை மற்றும் சினிமா ர்கள் கலந்துகொண்டு, சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினர். ஆந்திரப் பிரதேச கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் டாக்டர் பசுபுலேட்டி ஹரிபிரசாத் பேசுகையில், “ஒற்றுமையாக இருக்கும்போதுதான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். கேபி சேனா மூலம் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாத்து, அரசு த் திட்டங்கள் தகுதியுள்ள அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அழைப்பு விடுத்தார். பி.எம்.ஆர் (PMR) குழுமத்தின் தலைவர் திரு. முத்துவேல் ராஜ் பேசுகையில், “வர்த்தகம் மற்றும் வணிகத் துறைகளில்…

Read More

ஷர்வானந்த் நடிக்கும்  பைக்கர் ( BIKER)  பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது.., இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள…

Read More

வெளியீட்டுக்கு முன்பே சாதனை… “கான் சிட்டி” டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்குக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த மாபெரும் ஒப்பந்தம், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் “கான் சிட்டி”, ஏற்கனவே அதன் டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது. பட்டன் தட்டினால் கொட்டும் பணம்…

Read More