‘இசைஞானி’ இளையராஜா ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து, 50 ஆண்டுகளை நிறைவு செய்து 14.5.2026 இன்று 51-வது ஆண்டில் நுழைகிறார். அதையடுத்து அவருக்கு திரையுலகினரிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, ”ஆண்டுகள்தான் கடந்துபோகிறதே தவிர நான் முதல் படத்திற்காக எப்படி ஈடுபாட்டுடன் பணியாற்றினேனோ அதேபோல்தான் இப்போதும் பணிபுரிகிறேன். இப்போதுகூட (உடனிருந்த இயக்குநர் பால்கியை சுட்டிக்காட்டி) இவர் இயக்கும் படத்தின் பாடல் பதிவுக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார் உற்சாகமாய். பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, தான் இசையமைத்த முதல் படம் பற்றியும், அன்றைக்கும் இன்றைக்கும் ரசிகர்களின் மனதில் அசைக்கமுடியாத இடம்பெற்றிருக்கிற ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடலுக்கு இசையமைத்த விதம் பற்றியும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இளையராஜாவின் 51-ம் வருட இசைப்பயணத் துவக்கத்தையொட்டி வாழ்த்த வந்திருந்த இயக்குநர்…
Read Moreஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறைக்கப்பட்ட ரத்தினங்களையும் (Hidden Gems), சுயாதீன திரைப்படங்களையும் (Indie Films) அறிமுகப்படுத்தும் புதிய YouTube சேனல்!
இரண்டு முறை தேசிய விருது பெற்ற எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான G. தனஞ்ஜெயன் தலைமையிலான Creative Entertainers and Distributors நிறுவனம், FRIDAY PREMIERE என்ற புதிய YouTube சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக தரமான தமிழ் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் தனித்துவமான தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதிய திரைப்படம் இலவசமாக வெளியிடப்படும். திரையரங்குகளில் போதிய வரவேற்பைப் பெறாமல் தவறவிட்ட சிறந்த படைப்புகள், சுயாதீன திரைப்படங்கள், கல்ட் கிளாசிக் படங்கள் மற்றும் நினைவில் நிற்கும் கதைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், அனைத்து திரைப்படங்களும் HD தரத்தில் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடைய English Subtitles உடன் வெளியிடப்படும். FRIDAY PREMIERE — திரையரங்குகளைத் தாண்டி தரமான திரைப்படங்களை கண்டுபிடிக்க விரும்பும் ரசிகர்களுக்கான…
Read Moreசைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் இளையராஜா, “தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார். எடிட்டர் ராம் கோபி, ” வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்”. பாடலாசிரியர் ஜெயந்தி, ” இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”. கலை இயக்குநர் சம்பத் திலக், “வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி”. வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட்,…
Read Moreசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் ‘வேலும் மயிலும்’!
சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார். புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘தாய் கிழவி’ திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, ‘வேலும் மயிலும்’ வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார்.…
Read Moreபாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த திரைப்படத்தில் K.J.R கதையின் நாயகனாக…
Read More’எக்ஸாம்’ இணையத் தொடர் மூலம் பாராட்டு பெற்ற பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்!
கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். தப்பாட்டம் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார், மேலும் இப்படத்திற்க்காக x தலம் உரிமையாளர் எலன் மஸ்க்கிடம் பாராட்டையும் பெற்றவர் ஆவார். இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வந்த களவாணி 2 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சசிக்குமார் நடிப்பில் வெளி வந்து பல வெற்றிகளை கொண்டாடிய“நந்தன்” திரைப்படத்திலும் சிறந்த கதாப்பாத்திரதில் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பல திரைப்படங்களில் குனச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் மாறுப்பட்ட வேடங்களிலும் பட்டைய கிளப்பியுள்ளார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். தற்ப்போது இயக்குனர் சற்குணம் எழுதி இயக்கிய, புஷ்கர் மற்றும் காயத்ரி படைப்புத் தயாரிப்பாளர்களாகக் கொண்ட ‘எக்ஸாம்’, தைகாரா என்ற மலைப்பாங்கான, கற்பனையான ஊரில் நடக்கும்…
Read More‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் ‘வடசென்னை 2 ‘ படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான இன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்… தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து … இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார். இந்த பரபரப்பான அறிவிப்பை கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக பயணத்தை பற்றிய ஒரு அரிதான…
Read Moreஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026 – முதல் பதிப்பு
மலையாளத் திரைப்பட இசையின் மகத்தான இசை மேதையாக விளங்கிய G. Devarajan அவர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள முதல் “ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026”, புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக் கலைஞர் T. V. Gopalakrishnan அவர்களுக்கு, தேவராஜன் மாஸ்டரின் அன்புத் துணைவியார் திருமதி Leelamani Devarajan அவர்களால் வழங்கப்படுகிறது. 1927 முதல் 2006 வரை வாழ்ந்த தேவராஜன் மாஸ்டர், மலையாளத் திரைப்பட இசை வரலாற்றின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கவிஞர் Vayalar Ramavarma அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அற்புதப் பாடல்கள், மலையாளத் திரைப்பட இசையின் பொற்காலத்தை உருவாக்கியவை என்றும் கருதப்படுகின்றன. அவரது இசைப் பங்களிப்பிற்காக, கேரள அரசின் உயரிய திரைப்பட விருதான J. C. Daniel Award உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் Gangai Amaran…
Read Moreஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘லவ் பைட்’ திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ‘தாய் கிழவி’ புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ்…
Read Moreஉத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி :
பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி மோகன் அவர்களுக்கு பெருமைக்குரிய நான்காவது தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனுடன், பாடகி கெனீஷா வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சியும் விழாவை மேலும் சிறப்பித்தது. பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்தத் தேவி ரத்னா விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் பேராதரவை முன்னிட்டு ரவி…
Read More