ஜெடூசி விமர்சனம்…

கதை… திருவண்ணாமலையை சுற்றி கதைகளம் நகர்கிறது..  அந்தப் பகுதியில் பிரபலமான ஒரு கல்லூரியில் உள்ள பல நபர்கள் கொல்லப்படுகின்றனர் முக்கியமாக.. கல்லூரி பிரின்ஸ்பால்.. ஒரு பேராசிரியை.. சில மாணவிகள் உள்ளிட்ட பலரும் பெண்கள் தலையில் குத்தப்படும் ஜெடூசியால் கொல்லப்படுகின்றனர்.. இந்த கொலைகளை செய்பவர் யார்? அதுவும் ஒரே கல்லூரியில் சேர்ந்த நபர்களைக் கொல்லும் கொலையாளி யார்.? நாயகனுக்கும் நாயகிக்கும் என்ன தொடர்பு.? என்பதெல்லாம் மீதி கதை.. நடிகர்கள்… நாயகன் ஸ்ரீதர்.. இவரின் மாமன் மகள் நாயகி ஸ்வேதா.. (இவர் சீரியலில் பிரபலமான நடிகை.) பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அந்த வேடங்கள் பக்கா பொருத்தம்.. முக்கியமாக ஸ்வேதா கல்லூரிக்கு சென்ற பின் மாடன் உடை.. வீட்டில் இருக்கும் போது பாவாடை தாவணி என இரண்டும் பொருத்தம்.. வழக்கம்போல பெண்களை மிரட்டும் வில்லன் வேடத்தில் கலக்கியிருக்கிறார் ஏ வெங்கடேஷ்..…

Read More

மௌன மொழிகள் விமர்சனம்

கதை… ஹீரோ ஷகீர் மனோ.. நண்பர் ஸ்ரீமன் இருவரும் ஒரு விளம்பர ஏஜென்ஸி நடத்தி அதன் மூலம் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.. ஒரு அழகான பெண்ணை தான் திருமணம் முடிக்க வேண்டும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் நாயகன்… ஒரு கட்டத்தில் கல்லூரி மாணவி அர்ச்சனாவையும் சந்திக்கிறார்.. அவர் பழகிப் போட்டியில் மிஸ் சென்னை பட்டம் வென்றவர்.. அவர் மேல் காதலும் கொள்கிறார்.. ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோயின் அர்ச்சனா ஒரு விபத்தில் சிக்கி தன் முக அழகை இழக்கிறார்.. அதன் பிறகு என்ன செய்தார் நாயகன்.. காதலித்து கரம் பிடித்தாரா.? மிஸ் சென்னை பட்டம் பெற்ற அர்ச்சனா அடுத்த என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… பிரபலமான பாடகர் மனோவின் மகன் தான்  ஷாகீர்.. அப்பாவைப் போலவே  அழகாக இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும்…

Read More

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும் ஏக்கத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் உணர்வுப்பூர்வமான மெலடிப் பாடலாக அமைந்துள்ள ‘அப்பா உன் ஆராரிரோ’, தந்தை – மகன் உறவின் உணர்வுகளை இசையின் வழியே அழகாகக் கடத்துகிறது. இப்பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர் சுந்தரய்யர் மற்றும் வெங்கட்ரமணன் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள். தந்தையின் அன்பையும், குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் மையப்படுத்திய இப்பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட…

Read More

“சிக்னல் அட் 11.30′ படத்தில் சர்ப்ரைஸ், எமோஷன், எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் இருக்கும்”- இயக்குநர் மலர்விழி நடேசன்!

மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் மற்றும் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் எதிர்பாராத திருப்பங்களும், உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு திரைக்கதை என்பது காகிதத்தில் இருக்கும் கற்பனை மட்டுமே. அதைத் திரைப்படமாக மாற்றுவது அதற்காக உழைக்கும் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும்தான். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி ஒவ்வொரு காட்சியையும் படமாக்கிய விதம் கதைக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. இசையமைப்பாளர் டி. இமானின் இசை படத்தின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உதவியுள்ளது. பின்னணி இசையும் பாடல்களும் ஒவ்வொரு காட்சிக்கும் உயிரோட்டம் கொடுத்துள்ளன. இந்தக் கதைக்கு உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடிய நடிப்பு தேவைப்பட்டது.…

Read More

சிக்னல் அட் 11.30′ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும்!”- நடிகை பவ்யா திரிகா

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகை பவ்யா திரிகா. இதுவரை அவர் நடித்த படங்கள் வெவ்வேறு கதைக்களங்களையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டிருந்தன. அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் அவருக்கு மறக்க முடியாத அனுபவம் தந்துள்ளது. சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னடா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை மலர்விழி நடேசன் இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை பவ்யா திரிகா பகிர்ந்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மலர்விழி மேமின் கதை சொல்லும் விதமும், படத்தின் மீதான அவரது பார்வையும்தான் முதலில் என்னை இந்தப் படத்துடன் இணைத்தது. பெண் இயக்குநருடன் பணிபுரிய போகிறோம் என்பதும், ‘சிக்னல் அட்…

Read More

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட்  நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமான மு. கார்த்திகேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்க, ராஜசிம்மன், கஜராஜ், அனுராமி, தீபா பாஸ்கர், கவிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பிரேம்குமார் முருகேசன், இசை – ரகு ஸ்ரவன் குமார், படத்தொகுப்பு கே.கே. விக்னேஷ்,பாடல்கள் கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி,நடனம் – ஏ.எம்.ஜே,கலை இயக்கம் – ஜோதின் விஷாக் – அனுப்ஷா, சண்டைக்காட்சிகள் டி.ஆர்,இணை இயக்குநர் ஜெயன். படத்தின் கதை குறித்து இயக்குநர் மு. கார்த்திகேசன்…

Read More

அருண் விஸ்வா தயாரிப்பில், தருண் தேஜா எழுதி இயக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தருண் தேஜா எழுதி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கிய ‘மாவீரன்’, ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘3BHK’ ஆகிய வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தொடர்ந்து புதிய முயற்சிகளுக்கும் திறமையான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகவுள்ளது. நடிகையாக மட்டுமின்றி, பாடகியாகவும் இசைக் கலைஞராகவும் பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ்,…

Read More

புத்தாண்டு வெளியீடாகத் பிரேம் குமார் – ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் திரைக்கு வரும் ‘அசரீரி’ – டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

2027-ஐத் தொடங்கி வைக்க வருகிறது பிரேம் குமார் – ஃபஹத் ஃபாசிலின் ‘அசரீரி’ – டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! ‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் இயல்பான நடிப்பால் இந்திய அளவில் கவனம் பெற்றுவரும் ஃபஹத் ஃபாசில், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத்…

Read More

நடிகர் சரத்குமார் நடிப்பில், பெர்ஜெயா குழுமம்- ரேடான் மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் அதிரடி ஆக்ஷன் எண்டர்டெயினர் திரைப்படம் ‘டாக்ஸி’!

பெர்ஜெயா குழும நிறுவனங்களும் ரேடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டாக்ஸி’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆலோசகரான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வின்சென்ட் டான், மஹா பெர்ஜெயா ஃப்ரோஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சப்ரினா சியாமலா பின்தி அப்துல்லா, புவான் ஸ்ரீ வோங் யோக் லியான் மற்றும் மலேசிய மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், கிரீன் பேக்கெட் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஷாஹுல் ஹமீத் பின் ஷேக் தாவூத் ஆகிய நால்வரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவுக்குத் தலைமை தாங்கினர். இயக்குநர் மணி ரத்னமும் இவ்விழாவில் பங்கேற்று…

Read More

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியீடு!

டாக்டர் டூமுக்கு எதிராக ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிரம்மாண்ட மோதலுக்கு தயாராகுங்கள்! அமெரிக்க வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது, டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம். மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்பதிவிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தின் புதிய டிரெய்லர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முன்னணி சூப்பர் ஹீரோக்கள் பலரும் ஒரே திரையில் ஒன்றிணைந்து, இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்திக்கத் தயாராகும் காட்சிகள் இறுதி டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. மார்வெல் உலகின் மிக வலிமையான…

Read More