மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. Arowana Pictures Pvt. Ltd. சார்பில் தீபா சிவாஜி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள CKN கல்லூரியில் நடைபெற்றது. நாகா. KMI எழுதி இயக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் தீபா சிவாஜியின் மகன் சத்யா சிவாஜி, சி. கந்தசாமி நாயுடுவின் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். இன்றைய படபூஜை விழாவில் தயாரிப்பாளர் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன், பிரியங்கா, ரோபோ சங்கர், சோனியா, போஸ் வெங்கட் மற்றும் கந்தசாமி நாயுடு குடும்பத்தினர் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர். 1885ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்த சி. கந்தசாமி நாயுடு, சிறுவயதில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறாத நிலையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்ந்தவர். சென்னைக்கு…
Read Moreமர்மம், எதிர்பாராத திருப்பங்கள், ஆழமான உணர்வுகள் என அனைத்தும் கலந்த திரைப்படமாக ‘சிக்னல் அட் 11.30’ உருவாகியுள்ளதாக இசையமைப்பாளர் டி. இமான் பாராட்டியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பின்னணி இசைப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே படத்தைப் பார்த்த டி. இமான், அதன் கதைக்களமும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 27ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அவரது பாராட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு திரைப்படத்தின் பின்னணி இசையை உருவாக்குவதற்கு முன்பாகவே அதைப் பார்த்து, கதையின் தன்மையையும் காட்சிகளின் உணர்வையும் புரிந்துகொள்வது இசையமைப்பாளர்களுக்கு முக்கியமானது. அந்த வகையில், ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் தனக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்ததாக டி. இமான் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வணிக ரீதியான பொழுதுபோக்குப் படங்கள் முதல் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்கள் வரை பல்வேறு வகையான படங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், ‘சிக்னல் அட் 11.30’…
Read Moreமருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ – முகேன் ராவ் நடிப்பில் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது!
K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை ஜிதேஷ் சாய் வழங்குகிறார். “மருத்துவத் துறையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு” உருவாகியுள்ள இப்படம், மருத்துவப் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. மருத்துவத் துறையில் நிகழும் முக்கியமான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். விவேகா…
Read Moreயுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது!
சிட்பண்ட் மோசடியை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதுர மோசடி’. யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சங்கரநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தை வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜய் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவதர்ஷினி, காதல் சுகுமார், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வையும், குடும்ப உணர்வுகளையும் இணைத்து உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள்: – தயாரிப்பு: எஸ். சங்கரநாராயணன் – ( Yuva Films ) – இயக்கம்: வி.கே. விஜயகண்ணா – ஒளிப்பதிவு: எஸ். கார்த்திக் – இசை: பானு ஜேக்கப் – படத்தொகுப்பு: அல் ரமேஷ்
Read More’சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்பட இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை முத்து நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சேரநாட்டு யானைதந்தம்’. எதார்த்தமான கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ராஜசிம்மன், பாண்டி அக்கா, விஜயன் தியாகராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏ.சி.குமரேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்ய, யுகபாரதி மற்றும் தோழன் பாடல்கள் எழுதியுள்ளனர். ஆக்ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, வெங்கல் ரவி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பாலகுமாரன் ரேவத் நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். வையாபுரி குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, அஸ்வசக்தி முத்து பழனிசாமி, லத்திகா புரொடக்ஷன்ஸ் சசி, ஏ.கே.கோவிந்தராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். வரும் டிசம்பர் 4 ஆம்…
Read More’சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்பட இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை முத்து நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சேரநாட்டு யானைதந்தம்’. எதார்த்தமான கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ராஜசிம்மன், பாண்டி அக்கா, விஜயன் தியாகராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏ.சி.குமரேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்ய, யுகபாரதி மற்றும் தோழன் பாடல்கள் எழுதியுள்ளனர். ஆக்ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, வெங்கல் ரவி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பாலகுமாரன் ரேவத் நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். வையாபுரி குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, அஸ்வசக்தி முத்து பழனிசாமி, லத்திகா புரொடக்ஷன்ஸ் சசி, ஏ.கே.கோவிந்தராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். வரும் டிசம்பர் 4 ஆம்…
Read Moreஅமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள் இணைந்து நடத்தும் 8′ ஆவது ‘உலக முத்தமிழ் மாநாடு – 2026’ சென்னையில் நடைப்பெற்றது!
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள் இணைந்து நடத்தும் 8′ ஆவது ‘உலக முத்தமிழ் மாநாடு – 2026’ சென்னையில் நடைப்பெற்றது! தமிழ் இலக்கியப்பரப்பில் கவியரசர் கண்ணதாசன் என்ற தலைப்பில் அனைவரும் உரையாற்றினார்கள். அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை நிறுவன தலைவர் இரா.உதயநேசன், காந்தி கண்ணதாசன், முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், முனைவர் ஆரூர் தமிழ்நாடன், கலையரசி உதயநேசன், இயக்குநர்கள் யார் கண்ணன், வீர அன்பரசு, பிருந்தா சாரதி, அமுத பாரதி, ஜெய பாஸ்கரன்,: முனைவர் இரா.பிரபா ஆகியோர் கலந்துக் கொண்டு, சிறப்பு தமிழ் உரையாற்றினார்கள்!
Read Moreபிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!
‘ஹனு-மேன்’ திரைப்படத்தை உருவாக்கியவர்களின் பிரம்மாண்டமான கற்பனைப் படைப்பில், ஹனு-மேன் யுனிவர்ஸின் (HanuMan Universe) புதிய அத்தியாயம் விரிவடைகிறது! இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கற்பனையைக் கவர்ந்த ‘ஹனு-மேன்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது ஃபேண்டஸி யுனிவர்ஸை (Fantasy Universe) புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லத் தயாராகியுள்ளது. திறமையான இளம் நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் (Panja Vaisshnav Tej) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தனது அடுத்த பிரம்மாண்டமான முயற்சியான ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) திரைப்படத்தை இந்தத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு பிரம்மாண்டமான கற்பனைப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படம், புராணங்கள், கற்பனை மற்றும்…
Read Moreபுதுமணத் தம்பதிகளின் காதல், ரொமான்ஸ் மற்றும் அழகான இல்லற வாழ்க்கையை மெலடியாகச் சொல்லும் பாடல்!
நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது பாடல் (Second Single) வெளியாகியுள்ளது. மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு மோகன் ராஜன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ முதல் பாடல் தந்தை – மகன் உறவின் அன்பையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல் கணவன் – மனைவி இடையிலான காதலையும் ரொமான்ஸையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. மென்மையான இசையுடன் அழகான மெலடியாக உருவாகியுள்ள இப்பாடல், புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான காதல், நெருக்கம், ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் அன்பு மற்றும் அவர்களுடைய அழகான இல்லற வாழ்க்கையைப் பேசுகிறது. கணவன் – மனைவி…
Read Moreலியோ சிவக்குமார் நடிப்பில் ‘டெலிவரி பாய்’ நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது!!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் மற்றும் அசசி கிரியேசன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்வெளியீட்டு விழா இன்று திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் தங்களது அனுபவங்களையும் படத்தைப் பற்றிய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்.., அமுதா லியோனி பேசியதாவது, எனது மகன் லியோ சிவக்குமார் ‘டெலிவரி பாய்’ படத்திற்காக மிகவும் கடினமாக…
Read More