டி. விக்னேஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம், நவீன விளம்பர உலகமும் மார்க்கெட்டிங் தந்திரங்களும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “ஒரு பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது” (You don’t buy a product, product buys you) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கதைச் சுருக்கம்: தேவி — கணவர் மற்றும் மகனுடன் வாழும் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பப் பெண். தினமும் வேலை, குடும்பப் பொறுப்பு என ஓடிக்கொண்டிருக்கும் அவளுக்கு, தன் தோற்றத்தைப் பற்றி பெரிதாக கவலை இல்லை. ஆனால் தொடர்ந்து அவள் கண்முன்னே தோன்றும்…
Read Moreமொத ராத்திரி’ திரைப்படத்தில் அன்பும் பல உணர்வுகளும் நிறைந்தது எனது கதாபாத்திரம்”…நடிகை அனிஷ்மா அனில்குமார்!
‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்படும் குழப்பங்கள் என கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து நடிகை அனிஷ்மா அனில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைதான் என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய கதாபாத்திரம் தனக்குள் நிறைய எண்ணங்களையும் உணர்வுகளையும் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு பெண் அல்ல. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதில் அழகு இருப்பதாக நான்…
Read Moreவெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையிலான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார். எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில்: “இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த பிறகு, திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவைச் சந்தித்தேன். இதுபோன்ற உலக சாதனை…
Read MoreMGM Healthcare Malar Removes Massive 890-Gram Brain Tumour, One of the Largest Ever Reported
The tumour was removed through a meticulous craniotomy, an open brain surgical procedure in which a section of the skull is temporarily removed to provide access to the brain. Before surgery, doctors performed specialised preoperative embolisation, an advanced, minimally invasive neurointerventional technique, to significantly reduce the tumour’s blood supply. Chennai, August 18, 2026: In a remarkable feat of modern neurosurgery and interventional neurology, a multidisciplinary team at MGM Healthcare Malar, Adyar, successfully removed a massive 890-gram brain tumour, one of the largest ever reported in clinical practice worldwide. The doctors…
Read Moreதமிழ் ஒரிஜினல் தொடரின் மொத்த பார்வை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது!
சென்னை, ஆகஸ்ட் 18, 2026: ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உள்ளது. ஒளிபரப்பான நாள் முதல், எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பார்வையாளர்களிடமும் ‘ரிசார்ட்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான கதைக்களங்கள், தங்களது சொந்த மொழி மற்றும் சந்தையைத் தாண்டியும் ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை ’ரிசார்ட்’ மீண்டும் நிரூபித்துள்ளது. ‘ரிசார்ட்’ தொடரின் மொத்த வாட்ச் டைமில் 53% தமிழக பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது. மீதமுள்ள…
Read Moreஎம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் அரிதான சாதனை ; மூளையில் 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய கட்டி வெற்றிகரமாக அகற்றம்!
மூளைக்குச் செல்லும் வழியை உருவாக்குவதற்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதியை தற்காலிகமாக அகற்றும் ஒரு நுட்பமான மண்டையோட்டுத் திறப்பு அறுவைசிகிச்சை (கிரானியோடமி) மூலம் இந்த மிகப்பெரிய கட்டி அகற்றப்பட்டது. • அறுவைசிகிச்சைக்கு முன்பு, கட்டியின் இரத்த ஓட்டத்தை கணிசமாகக் குறைப்பதற்காக குறைந்தபட்ச ஊடுருவலுடன் கட்டியை சுருங்கச்செய்வதற்கு இரத்தக்குழாய்களை அடைப்பதற்கான (எம்போலை சேஷன்) செய்யபட்டது. சிகிச்சை சென்னை, ஆகஸ்ட் 18, 2026: நவீன நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் தலையீட்டு மருத்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, அடையாறில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் பல்துறை நிபுணர்கள் குழு, மருத்துவ வரலாற்றில் உலக அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய கட்டிகளில் ஒன்றான, 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய மூளைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. சிக்கலான மண்டையோட்டுத்திறப்பு அறுவைசிகிச்சையின் மூலம் இந்தக் கட்டியை அகற்றுவதற்கு முன்னதாக, கட்டியை சுருங்கச்செய்வதற்கு…
Read Moreகுரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சராஜ் சீலன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கே அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ஜி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருதை வென்ற விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் அவர்கள் பேசும் போது, பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம் ஆனா ஒரு ஸ்ட்ராங்…
Read More“எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்த தனது பயணம், நடிகர்கள் தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் தனது முதல் படத்தை இயக்கிய அனுபவம் குறித்து வளர்ந்து வரும் புதிய தலைமுறை இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்துகொள்கிறார். தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை இயக்குநர்களின் வருகை தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. சிவகுமார் முருகேசன், அபிஷன் ஜீவிந்த், பாரி இளவழகன் உள்ளிட்ட புதிய தலைமுறை படைப்பாளிகள் தங்களுக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள ராஜா கருப்பசாமி, ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வித்தியாசமான திருமணத்தை மையமாகக் கொண்டு, அதைச் சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை கதைக்களமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மொத ராத்திரி’ உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன்…
Read More“திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!
சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. சில கதாபாத்திரங்கள் ஒரு நடிகரிடம் எதை எதிர்பார்க்கின்றன என்பதனால் மட்டுமல்லாமல், அவை தங்களுடன் கொண்டுவரும் உலகத்தினாலும் சிறப்பானதாக மாறுகின்றன. பிரியா பவானி சங்கரைப் பொறுத்தவரை, ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அத்தகைய மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில்…
Read More“ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!
அரசுப் பள்ளி மாணவர்களை ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தைப் பார்க்க அழைத்துச் செல்லுமாறு தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைக்க உள்ளதாக சபாநாயகர் தகவல்! புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் அசாதாரண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஜி.டி.என்.’ தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் பாராட்டைப் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள NFDC-யில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, சபாநாயகர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்தத் திரையிடலில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, அமைச்சர் கில்லி சரத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திரைப்படத்தைப் பார்த்து நெகிழ்ந்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தைப் பார்த்து, ஜி.டி. நாயுடுவின் சாதனைகள் மற்றும் அவரது வாழ்க்கைப்…
Read More
