கானா அரசரின் 50 வருட திரைத்துரை மற்றும் தன் பிறந்த நாளான இன்று ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை வெளியிட்டுள்ளார்

சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ” காத்து வாக்குல ஒரு காதல் “.கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும்சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த்,மேனக்சன் மிப்பு மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை சிறப்பாக பாடியும், தன் பிறந்த நாளான இன்று தேனிசை தென்றல் தேவா வெளியிடுள்ளார் இப்பாடலில் இயக்குநரும் நடிகருமான மாஸ் ரவி, சஞ்சனா சிங், தங்கதுரை, ஆதித்யா கதிர், பவர் ஸ்டார் நடனமாடியுள்ளனர். தற்போது இப்படத்தின் லிரிக் வீடியோவை இன்று ( 20.11.2024 ) 5 ஸ்டார்…

Read More

வடசென்னை கதைக் களத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சொர்க்கவாசல்’!!

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன் னோட்டத்தை தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல்…

Read More

ஜீப்ரா- திரை விமர்சனம்

வங்கியில் சேமிப்பது நல்லது என்ற கருத்தை உடைத்து நொறுக்கி இருக்கும் படம். நம் பணத்தை நcமக்கே தெரியாமல் வங்கி ஊழியர்களே எடுத்தாண்டு இருக்கும் காட்சிகள் அடி வயிறு வரை நம்மை கலங்க வைக்கின்றன. நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில் பணிபுரிகிறார். அங்கு தன் தேவைக்காக ரூ. 4 லட்சத்தை மோசடியாக எடுக்கிறார். அதே ரூட்டில் வங்கியில் 5 கோடி பணம் எடுக்கப்படுகிறது. அதை எடுத்தது யார்? அதன் மூலம் நாயகனுக்கு நேர்ந்த பாதிப்பு என்ன? கேள்விக்கான விடை பரபர கிளைமாக்ஸ். அவசர தேவைக்கு ஒரு தப்பை செய்துவிட்டு அதனால் ஏற்படும் இன் னல்களால் பாதிக்கப்படும் காட்சிகளில் சத்யதேவ் நடிப்பில் அனுபவம் பூத்துக் குலுங்குகிறது. நாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் கொஞ்சம் காதல் நிறைய பயம் என்று காட்சிகளில் நிரம்பி நிற்கிறார். நாயகனை சிக்கலில் மாட்டி விடும்…

Read More

லைன் மேன் – திரை விமர்சனம்

சாதனை படைக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானி சாதாரணனாக இருந்து விட்டால்… அவன் கனவு கடைசி வரை கனவு தானா… அல்லது நனவாகுமா? தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் உள்ள உப்பள மின் மையத்தில் லயன்மேனாக இருக்கிறார் சார்லி. மின் பொறியியல் பட்டதாரியான அவரது மகன் ஜெகன் பாலாஜி இளம் விஞ்ஞானி. தனது கண்டுபிடிப்புகள் மூலம் மக்களுக்கு உதவ எண்ணுகிறார். மின்விளக்குகளை கண்ட்ரோல் செய்ய தானியங்கி கருவி ஒன்றை கண்டு பிடிப்பவர், அதற்கு அரசு அங்கீகாரம் கிடைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார். ஆனால் அவரது அத்தனை முயற்சியும் பணால் ஆக, துவண்டு போகிறார். அவரது கண்டுபிடிப்புக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்க, சதிகளை தகர்த்து அவரால் தனது படைப்பை அரசு அங்கீகாரத்துடன்மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததா என்பது எதிர் பார்ப்புக்குரிய கதைக் களம். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு…

Read More

ஜாலியோ ஜிம்கானா – திரை விமர்சனம்

 சாதனை படைக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானி சாதாரணனாக இருந்து விட்டால்… அவன் கனவு கடைசி வரை கனவு தானா… அல்லது நனவாகுமா? தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் உள்ள உப்பள மின் மையத்தில் லயன்மேனாக இருக்கிறார் சார்லி. மின் பொறியியல் பட்டதாரியான அவரது மகன் ஜெகன் பாலாஜி இளம் விஞ்ஞானி. தனது கண்டுபிடிப்புகள் மூலம் மக்களுக்கு உதவ எண்ணுகிறார். மின்விளக்குகளை கண்ட்ரோல் செய்ய தானியங்கி கருவி ஒன்றை கண்டு பிடிப்பவர், அதற்கு அரசு அங்கீகாரம் கிடைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார். ஆனால் அவரது அத்தனை முயற்சியும் பணால் ஆக, துவண்டு போகிறார். அவரது கண்டுபிடிப்புக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்க, சதிகளை தகர்த்து அவரால் தனது படைப்பை அரசு அங்கீகாரத்துடன்மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததா என்பது எதிர் பார்ப்புக்குரிய கதைக் களம். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு…

Read More

பூஜையுடன் தொடங்கிய யோகிபாபு படம்

முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஒர்க்கிங் ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் (Working House Productions) நிறுவனம் சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் யோகி பாபுவு க்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பிரியா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.   கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருகேஸ்வர காந்தி இயக்கும் இப்படத்திற்கு கெளதம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெப்ரி இசையமைக்கிறார்.…

Read More

முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறைக்கு வரவேண்டும் — நெஞ்சு பொறுக்குதில்லையே படவிழாவில் தொல் திருமாவளவன் பேச்சு

நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”. மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா, படக்குழுவினர் திரை மற்றும் அரசியல் பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதுடன். படத்தின் இசைத் தகட்டை வெளியிட்டார்.   விழாவில் தயாரிப்பாளர் கிருஸ்துதாஸ் பேசியதாவது… நவசரகூடம் சார்பில் இங்கு வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். எனக்கு சிறு வயதிலிருந்து படம் பார்க்க வேண்டும், படம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் நாம் எடுக்கும் படம் சாதாரணமாக இருந்து…

Read More

பணி – திரை விமர்சனம்

மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான ஜோஜு ஜார்ஜ் இயக்குனர் ஆகியிருக்கும் முதல் படம்.முதல் படத்திலேயே வெற்றி முத்திரை பதித்திருக்கிறார். மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் இரு இளைஞர்கள் திடீரென புதிய தொழிலுக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆயுதம் ஏந்தி ஒரு கொலையை நடத்தி முடிக்கிறார்கள். அதற்காக கிடைக்கும் ரூ. பத்து லட்சம் அவர்களை வன்முறை பாதையில் தொடர வைக்கிறது. இதனால் ஏற்படும் புதிய துணிச்சலில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும் பிரபல தாதாவின் மனைவியை தைரியமாக சீண்டுகிறார்கள். இதில் ஆவேசமான தாதா இருவரையும் அடித்து துவைக்கிறார். இதனால் வெறியான இளம் கொலையாளிகள் இருவரும் தங்கள் பழி வாங்கும் படலத்தை தொடங்குகிறார்கள். தாதாவின் குடும்பத்தில் உள்ளவர்கள், தாத்தாவின் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் கடத்தல், கொலை என விபரீதம் தொடர்கிறது. இதற்கிடையே தாதாவின் மனைவி இவர்களிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகிறாள். இதன்…

Read More

நிறங்கள் மூன்று – திரை விமர்சனம்

மூன்று மனிதர்களின் முகம் வேறு. செயல் வேறு. அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி வைக்கிறது என்பதை சொல்லியிருக்கும் படம். இயக்குனர் ஆக வேண்டும் என்ற வெறியுடன் திரியும் ஒரு உதவி இயக்குனர். சாதாரண புகார் என்றாலும் அதில் காசு பார்க்க துடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு பொறுப்பான பள்ளி ஆசிரியரின் மறுபக்கம்…இந்த மூன்று கதாபாத்திரங்களோடு காணாமல் போன காதலியை தேடி அலையும் ஒரு மாணவனும் இணைந்து கொள்ள…போகிற போக்கில் இந்த மூன்று குடும்பங்களும் ஒரே புள்ளியில் எப்படி இணைகிறது என்பது கதை. உதவி இயக்குனர் கேரக்டரில் கச்சிதமாக பொருந் ந்தியிருக்கிறார் அதர்வா. தனது கதை தன் கண்முன்னே பிரபல இயக்குனர் இயக்கத்தில் படமாவது கண்டு கொதிக்கும் இடங்களில் அந்த கேரக்டருக்கான நடிப்பு நியாயம் செய்து விடுகிறார் அதர்வா. ஆனால் பல இடங்களில் இவரை போதை…

Read More

பராரி – திரை விமர்சனம்

இது காதல் கதை. அதை சமூகமும் இனமும் எப்படி பந்தாட முற்படுகின்றன என்பது இயல்பான திரைக் களம். தமிழ் சினிமாவில் சாதிச் சண்டைகள் தொடர்பான கதைகளுக்கு பஞ்சம் இல்லை. பராரியில் இப்படி சாதி சண்டைகள் தொடங்கி மொழிச் சண்டையாக வளர்ந்து முடிகிறது படம். இந்த இரு சண்டைக்குள்ளும் சிக்கி தவிக்கும் ஒரு ஆத்மார்த்தமான காதலை சொன்ன விதத்தில் இந்த பராரிமனதுக்குள் மத்தாப்பு. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளூர் கிராமத்தில் ஆதிக்க சக்தி மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இருப்பது ஒரே குலதெய்வம். வருடாவருடம் அதை கும்பிடக் கூட இரு தரப்பும் அடித்துக் கொள்கிறார்கள். இந்த இரு தரப்பின் மோதல் தெரிந்தும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹரி சங்கர் மீது காதல் ஆகிறாள் சங்கீதா. இந்தக் காதலை வேரறுக்க சங்கீதாவின் தந்தை தனது உறவு பையனுக்கு மகளை கொடுப்பதாக நிச்சயம் செய்து…

Read More