வாக்களித்த, வாக்களிக்காத சினிமா பிரபலங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திரையுலக பிரபலங்கள் வாக்களிக்கும்போது சில சுவாரசியங்களும் நடைபெற்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு முடிந்தது. சின்ன பிரச்சினைகளைத் தாண்டி பெரிதாக எந்தவொரு பிரச்சினையுமின்றி இந்த வாக்குப்பதிவு முடிந்தது குறிப்பிடத்தக்கது. திரையுலக பிரபலங்கள் பலரும் காலையிலேயே முதல் நபராக வந்து தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்கள். ரசிகர்களால் டென்ஷனான அஜித் 7 மணியளவில் சென்றால் ரசிகர்கள் கூடுவார்கள் என்று காலை 6:30 மணிக்கு எல்லாம் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டார் அஜித் அங்கிருந்த ரசிகர்கள் பலரும் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். இதனால் அஜித் டென்ஷனாகிவிட்டார். ஒரு ரசிகரின் செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் ரசிகரிடம் செல்போனை மீண்டும் வழங்கினார். அதேபோல், அஜித் வாக்களிக்க வரும்போது கருப்பு,…

Read More

கறுப்பு சிவப்பு சைக்கிளில் விஜய் ரசிகர்களுக்கான சமிக்கையா

தேர்தல் காலங்களில் வாக்குப் பதிவு நாளன்று ஊடகங்கள் கவனம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களை கடந்து சினிமா பிரபலங்களை மையம் கொண்டு இருக்கும் இன்றைய வாக்குப் பதிவிலும் அரசியல் தலைவர்களை கடந்து சினிமா நட்சத்திரங்கள் வாக்களிப்பது ஊடகங்களில் பிரதானமாக நீண்ட நேரமாக ஆக்கிரமித்து கொண்டது வாக்குசாவடியில் வாக்குபதிவு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே மனைவி ஷாலினியுடன்வந்திருந்து வாக்களித்து சென்றார் நடிகர் அஜீத்குமார் ஆயிரம் விளக்கு தொகுதியில் 7 மணிக்கு பின்னர் வந்து வாக்கை பதிவு செய்தார் ரஜினிகாந்த் தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு செல்லவேண்டும் என்பதால் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிக்கருமான கமலஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் 8 மணிக்குள் தங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு புறப்பட்டு சென்றனர் அடுத்த கவனம் நடிகர் விஜய்யை நோக்கி திரும்பிய போது எந்த ஒரு நிகழ்வுக்கும்…

Read More

சாதி மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – விஜய்சேதுபதி

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினர். நடிகர்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், சித்தார்த், யோகி பாபு, பிரபு, விக்ரம் பிரபு, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மக்களோடு மக்களாக வாக்குச்சாவடிகளில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார். அவரைக் காண்பதற்காக அங்கு அவரது ரசிகர்கள் கூடிய நிலையில், அவர்களுடன் இணைந்து செல்ஃபி புகைப்படம்…

Read More

மதகராஜா எட்டு ஆண்டுகளுக்கு பின் வெளியாகிறது

நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி முதன் முதலாக இணைந்து நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது. இந்தப் படத்தில் விஷால், வரலட்சுமியுடன்சந்தனம், அஞ்சலி, நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், சோனு சூட், மொட்டை ராஜேந்திரன், கலாபவன்மணி, மணிவண்ணன், சிட்டிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படத்தை சுந்தர் சி குறிப்பிட்ட காலத்தில் இயக்கி முடித்தார் படத்தின் விளம்பரங்கள்ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. படம் முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது தயாரிப்பு நிறுவனமான  ஜெமினி பிலிம் சர்க்யூட்க்கு இருந்த பைனான்ஸ் பிரச்சினை, விஷாலுக்கு இருந்த பிரச்சினைகள் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது  படத்தின் பட்ஜெட்டுக்கு இணையாக வியாபாரம் இல்லை ஆனால் அதனை போன்று இரு மடங்கு பண பிரச்சினை இருந்தது அதன் காரணமாக மதகஜராஜா வெளியீட்டை பல முறை ஒத்திவைக்க வேண்டி இருந்தது ஒரு…

Read More

இயக்குனர் ஷங்கரை சுற்றி தொடரும் வழக்கு – சர்ச்சை

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரானா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான அறிவிப்பில், இயக்குநர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் தயாாரிப்பான ‘இந்தியன் -2’ படத்தை…

Read More

கர்னாடகாவில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதித்தது அரசு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரானாவின் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் திரையரங்குகள்  மூடப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருந்ததுகொரானாவின் தாக்கம் குறைந்ததும், ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு அது 100 சதவிகித அனுமதியாக மாற்றப்பட்டது. தமிழ் படங்களுக்கு வியாபார ரீதியாகவும், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பக்கபலமாக இருக்கும் மாநிலங்களில் கர்னாடகம் முக்கியமானது புதிய படங்கள் வெளியாகும்போது டிக்கட் கட்டணத்தை மாற்றியமைத்து கொள்ள அம்மாநில அரசு அனுமதிக்கிறது இந்த நிலையில் கொரானாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்கிற செய்தி பரவி வரும் சூழலில் கர்னாடக மாநிலத்தில்பெங்களூரு, மைசூரு, கலபுரகி, தட்சிண கன்னடா, உடுப்பி, பீதர் மற்றும் தர்வார் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் 50…

Read More

பேட்டி எடுக்கதேர்வு வைக்கும் ரஹ்மான் மேனேஜர் நேயல்

ஒரு பாடலோ, படமோ வெளிவரும் முன் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுவது ஊடகங்கள்தான் அதனால் அந்த படைப்பு வெளியிடுவதற்கு முன் பத்திரிகையாளர்களிடம் பணிவாகவும், எல்லா நேரங்களிலும் தொடர்பு கொள்ளும் எல்லைக்குள் இருப்பார்கள் படைப்புபெரும் வெற்றி அடைந்து விட்டால் பத்திரிகையாளர்களை கண்டு கொள்ளாத போக்கு சமீபகாலமாக சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில்மாஜா தளம் மூலம் வெளியிடப்பட்ட பாடல் ‛என்ஜாய் என்சாமி. பாடகி தீ மற்றும் அறிவு பாடிய இந்தப்பாடல் தான் இப்போது எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பாடலை ரசித்து வருகின்றனர். யு-டியூப்பில் மட்டும் இந்த பாடல் 98 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் பாடலை பாராட்டி டுவீட் செய்ததோடு, அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இதனிடையே இப்பாடலுக்கான வரவேற்பு பற்றி…

Read More

தமிழ் சினிமாவிற்கு சுவாசம் தந்த சுல்தான்

தமிழகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கு படங்களுக்கு குறைவில்லாமல் வெளியானாலும் மாஸ்டர் படத்திற்கு பின் எந்த படமும் தியேட்டர்களில் கலகலப்பான கூட்டத்தையும்,கல்லாவை நிரப்புகின்ற நிலைமையை ஏற்படுத்தவில்லை இந்த சூழலில் திரையரங்குகள் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் சுல்தான், கர்ணன் இதில் சுல்தான் ஏப்ரல் 6 அன்று உலகம் முழுமையும் 2500 திரைகளில் திரையிடப்பட்டிருக்கிறது கார்த்தி, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. தெலுங்கில் வெளியான நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு வசூலில் தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளதுசுல்தான்’. வெள்ளிக்கிழமை  நாகார்ஜுனா நடிப்பில் வெளியான நேரடி தெலுங்கு படமானவைல்டு டாக்’ படம் 1 கோடியே 20 லட்சம் வசூலித்த நிலையில், ‘சுல்தான்’ படம் 1 கோடியே 15 லட்சம் வசூலித்துள்ளதுஇதனிடையே, படத்திற்குக் கிடைத்த சில எதிர்மறை விமர்சனங்களை ஏற்பதாக படத்தின் தயாரிப்பாளர்…

Read More

தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக தமிழ்சினிமா பிரபலங்கள்

தமிழ் சினிமாவும் – தமிழக அரசியலும் 1957 முதல் பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பதை போன்றுதான் சினிமா மூலம் அரசியல் வளர்ச்சியா அரசியல் மூலம் சினிமா வளர்ச்சியா என்பதற்கு தெளிவான விடை இங்கு காணமுடியாது அரசியல்வாதியாக இருந்த மு. கருணாநிதி திமுகவின் கொள்கைகளை திரைமொழி மூலம் மக்களிடம் அடர்த்தியாக கொண்டு சென்றார் இதற்கு சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமசந்திரன் இருவர் நடித்த படங்களை முழுமையாக பயன்படுத்தினார் நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல்களில் பெயரளவில் சிலருக்கு போட்டியிடவும் வாய்ப்புகளை திமுக வழங்கியது அப்படித்தான் 1962 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் , எம்.ஜி.ராமசந்திரன் ஆகியோர் 1962 முதல்தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்றனர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை தொடங்கி ஆட்சி அதிகாரத்தை…

Read More

விருது கிடைத்ததில் ரஜினி மகிழ்ச்சி கொள்ளலாமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் .

திரைத்துறையில் நெடுங்காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். எளிமையும், இனிமையும் கொண்ட அலட்டல் இல்லாத,குழந்தை மனம் கொண்ட குதூகலத்தோடு நிஜ வாழ்விலும் சரி,திரை வாழ்விலும் சரி உற்சாகத்தோடு வலம்வரும் நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழகம் தாண்டி உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டிருக்கும் தலைசிறந்த நடிகர் அவர்.எது வந்தாலும் கலங்காத மனமும், நல்ல குணமும் அவருக்கு இந்த விருதை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். கடின உழைப்பு மிகப்பெரிய சாம்ராஜ்ய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு இந்த சாமானிய மனிதர் அடையாளமாய் நிற்கிறார். எனவே இவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்வில் உழைப்பை நம்பினால் உயரலாம், உயரத்தை எட்டலாம் என்பதற்கு கண்முன்னே நிற்கும் மிகப்பெரிய…

Read More