ஆர்கே சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கிக் கலக்கும் தமிழ் ,மலையாளப் படம் ‘ கொச்சின் ஷாதி அட் சென்னை 03’

வில்லனாக அறிமுகமாகி கதைநாயகனாக வளர்ந்திருக்கும்  ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கி  இரு மொழிப் படமொன்றில் நடித்திருக்கிறார்.. இது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .  அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.  படத்தின் கதை கேரளாவில் உள்ள கொச்சினிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது . இப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்கள் 70%  தமிழும் 30% மலையாளமும் பேசுகின்றன. ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் காதல் லீலைகளின் விளைவு அடுக்கடுக்கான காதல்கள்,  அவனிடம் காதலில் விழுந்து கருவுறுகிறாள் ஒரு ஏழை மகள் ஷாதி என்கிற ஷாதிகா.  தன் தாயிடம் சென்னைக்கு வேலைக்கு இண்டர்வியூவுக்குச் செல்வதாகக் கூறிக் கருவைக் கலைக்கச் செல்கிறாள். போகிற வழியிலும், சென்னை சென்ற…

Read More

Mr. லோக்கல் மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் – சிவகார்த்திகேயன்

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வியாபாரம் எனக்கு தெரியும். 2 மடங்கு லாபம் கொடுத்த ஒரு படம். அதில் இருந்து அவரின் ஒவ்வொரு படத்தின் வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன், மிகப்பெரிய உயரத்துக்கு போயிருக்கிறார். குழுந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஆல் செண்டர் ஹீரோவாகி இருக்கிறார்…

Read More

கீ – திரை விமர்சனம்

வெகு நாட்களாக கீ இல்லாமல் கிடப்பில் கிடந்த கீ படம்  வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை இந்தக் கீ முன்னாடி கொண்டுவரும் என்று பார்த்தால் பாவம் ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாடி தள்ளி விட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி தனிமனித சுதந்திரத்தை எப்படியெல்லாம் ஆக்கிரமிக்கும் என்பதையும், அந்த தொழிநுட்பத்தை அதிகமாக கத்துக்கிட்டவன் அதை வைத்து என்னவெல்லாம் பண்ணுவான் பண்ணலாம் என்ற பயமுறுத்தலும் தான் இப்படத்தின் கதை. விதை நெல்லாய் இருக்க வேண்டிய கதை உமிகளைப் போல போய்விட்டது. படத்தில் லாஜிக் என்பது ஊறுகாய் அளவிற்கு கூட இல்லை. ஜீவா என்ற நல்ல நடிகர் படத்திற்கு பெரும் எனர்ஜியாக இருந்து மொத்த உழைபையும் கொடுத்திருக்கிறார். ஆனால் இயக்குநர் அவரின் உழைப்பை அநியாயத்திற்கு தன் சொதப்பல் திரைக்கதையால் வீணடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி கதாபாத்திரத்தில் துளி அளவு கூட ஈர்ப்பில்லை. ஆர்.ஜே…

Read More

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு!

தமிழகத்தில் வரும் மே 19ஆம் தேதி நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தேர்தலன்று பொன்பரப்பியில் இரு தரப்புக்கு இடையே கலவரம் ஏற்பட்டதால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார். அதிக பணப்பட்டுவாடா காரணமாக மதுரை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் இரவு தேனி மாவட்டத்துக்கு…

Read More

தணிக்கை குழுவில் ‘U/A’ சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’

சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு U/A சான்றிதழை அளித்திருக்கிறார்கள். சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கூடுதலாக, அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, டூப் இல்லாமலும்,…

Read More

காவல்துறை கட்டுப்பாட்டு அறை பின்னணியில் நடக்கும் படம் 100!

தனது ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் புதுமையான மற்றும் புதிய விஷயங்களை வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி, தனது திறமையை மற்றும் தனித்துவத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டுக்குமே ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக, அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ளார். சமீபத்தில் அதர்வா முரளி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள “100” படத்தின் டிரைலரில் அவரின் இசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறும்போது, “என் இசையை பற்றி பலர் சொல்லும் நல்ல கருத்துக்களை கேட்க எப்போதுமே நன்றாக இருக்கும், குறிப்பாக எனது பின்னணி இசையை பற்றி. ஆனால் உண்மையில், மிகச்சிறந்த இசையை வழங்கும் அளவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும் படங்கள் எனக்கு அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது. “100”…

Read More

எலி எப்படி வில்லனாக வருகிறது? – மான்ஸ்டர் பாருங்க!

ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மாநகரம் படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு `மான்ஸ்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். வசனகர்த்தா ஷங்கர் பேசும்போது, இப்படத்தில், எழுத்தில் நான் இருந்திருக்கிறேன். பாடலாசிரியர் மற்றும் எழுத்து இரண்டிலும் என் பெயர் வந்ததற்கு நன்றி. இப்படம் எனக்கு இரண்டாவது படம். நெல்சன் என்னுடைய மாணவனாக இருந்தாலும் அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நெல்சன் இயக்கத்தில் கதாநாயகி பாதுகாப்பாக இருப்பார்கள். கதையை எப்படி அழகுப்படுத்துவதை எஸ்.ஜே.சூர்யாவிடம் கற்றுக் கொண்டேன். அனைவரிடமும்…

Read More

குழந்தை பாதுகாப்பு பற்றி லதா ரஜினிகாந்த்!

குழந்தைகள் பாதுகாப்பு பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது . அப்போது லதா ரஜினிகாந்த் கூறியவை :  Latha mam Speech at Peace for children event..m4aதற்போது அண்மையில் தமிழ்நாட்டில் , இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும் , கடத்தப்படுவதும் , ஆதரவற்று இருப்பதும் , கொல்லப்படுவதும்  இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் வரிசை படுத்தி எண்ண முடியவில்லை . இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை .நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும் , ஆதரவற்ற  குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை . உங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் வர வேண்டும் .…

Read More

பேரளிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுப்பார் – சுப்ரீம் கோர்ட்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிராக, அந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டதோடு, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக…

Read More