‘மெஹந்தி சர்க்கஸ்’ உருவானது எப்படி?

ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின்  கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது, விழாவில் …

Read More

வெள்ளைப் பூக்கள் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

காமெடி நடிகர் விவேக், சார்லி ஆகியோருடன்  பூஜா தேவரியா  ஹாலிவுட் நடிகையான Paige Henderson- போன்றோர் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கணிணி அறிவியல் பொறியாளர்கள் பலர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இத் திரைப்படத்தை ‘டெண்ட் கொட்டா’ என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் திகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 19ம் இப்படம் ரிலீஸாவதையடுத்து  வெள்ளைப்பூக்கள் பட டீம் பத்திரிகையாளளை சந்தித்து அளவளாவியது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் விவேக், சார்லி, தேவ், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் விவேக் இளங்கோவன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சார்லி பேசும்போது, “இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிக முக்கியக் காரணம் என் நண்பன் விவேக்தான். விவேக் எனக்கு தொடர்ச்சியாக பல உதவிகளைச் செய்து வருகிறார். பல…

Read More

தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!!

நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடிய வர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது, “இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்கு தான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம்…

Read More

கோடீஸ்வரர்களும், கேடிகளுமா நம் மக்கள் பிரதிநிதிகள்?

இந்தியாவில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டசபைகளிலும் கோடீஸ்வர எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பெருகிவிட்டார்கள். தற்போது நாடாளுமன்றத்தின் மக்களவையில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் கோடீஸ்வரர்களின் பங்கு 82 விழுக்காடு. இது, 2004இல் 36 விழுக்காடாகவும், 2009இல் 53 விழுக்காடாகவும் இருந்தது. இது போதாதென்று, குற்றவியல் வழக்குகளைக் கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. குற்றவியல் வழக்கும் இருந்து, பெரும் செல்வந்தராகவும் இருந்தால், தேர்தலில் அவரின் வெற்றி வாய்ப்பு, அவர் போட்டியிடும் தொகுதியில் குறைந்த சொத்து மதிப்புள்ள வேட்பாளரின் வெற்றி வாய்ப்பைவிடச் சராசரியாக 50 விழுக்காடு அதிகம் என்பதை When Crime Pays: Money and Muscle in Indian Politics எனும் புத்தகத்தில் மிலன் வைஷ்ணவ் என்பவர் புள்ளிவிவரங்களோடு நிறுவியுள்ளார். தமிழகத்தை எடுத்துக்கொண்டால், இந்த நூற்றாண்டில் நடந்துள்ள மூன்று பொதுத்தேர்தல்களில் கோடீஸ்வர எம்.பி.க்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்தது.…

Read More

சென்னை-சேலம் இடையிலான 8 வழி சாலை திட்டம் ரத்து! – ஐகோர்ட் தீர்ப்பு முழு விபரம்!

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்து வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 6 மாவட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது. இந்த திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட உள்ள இந்த 8 வழி சாலைக்கு காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட…

Read More

கோடை விடுமுறையில் குழந்தைகளை கவரும் ஒரு படம்தான் ‘ வாட்ச்மேன்’

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எங்கள் நிறுவனத்தில் மூன்று படங்கள் தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம் தான் வாட்ச்மேன். இயக்குனர் விஜய் எப்போதுமே நாயகிகளை அறிமுகப்படுத்துவார், அவர்கள் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளாக வலம் வந்திருக்கிறார்கள். அவர் இப்போது எங்களை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். எங்கள் முதல் படத்திலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்தது எங்களுக்கு கிடைத்த வரம், இந்த கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் அருண்மொழி…

Read More

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை படமாக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் ‘சசி லலிதா’. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறார்.  ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். இக்கதையை ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில் தான் இந்த படம் அமைந்திருக்கும்.சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை,  அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும். படத்தின் ஃபர்ஸ்ட்…

Read More

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 11ஆம் தேதியன்று தொடங்கவுள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 8) பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏழு கட்டமாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் 72,000 ரூபாய் வழங்குவது உட்படப் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 8) டெல்லியில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், நடைமுறையில் சாத்தியமுள்ள தேர்தல் அறிக்கையைத் தாங்கள் தயாரித்திருப்பதாகக் கூறினார். இந்த…

Read More

குப்பத்து ராஜா சீரியஸான ஒரு கேங்க்ஸ்டர் படம்

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் இதற்கு முன்பு பாடல் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர் என்றார் பாடலாசிரியர் லோகன்.நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரை போலவே நரேந்திரன் என்னை…

Read More