Amitabh Bachchan Releases Teaser Video for #KalyanNavratri Celebrations at Kalyanaraman Residence

Bollywood megastar and Kalyan Jewellers’ brand ambassador, Amitabh Bachchan, has unveiled the much-anticipated teaser video for the #KalyanNavratri celebrations hosted at the Kalyanaraman family’s residence in Thrissur. The festivities, steeped in tradition and devotion, are now in full swing, marking a special spiritual occasion. The 3-minute teaser, which has captivated audiences, features Amitabh Bachchan reciting a powerful Sanskrit shloka from the Devi Mahatmyam — “Yaa Devi Sarva Bhuteshu, Shakti Roopena Samsthita, Namas Tasyai, Namo Namaha.” This hymn, dedicated to Goddess Durga, is a part of the Markandeya Purana and praises…

Read More

மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா, மீண்டும் ஐந்தாம் வேதம்  எனும் ஒரு அதிரடி புராண சாகச திரில்லருடன் வருகிறார்!

ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.  90களின் புகழ்பெற்ற  புராண சாகச  திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும்,  ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின்  அசத்தலான  டீசரை ZEE5  வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரிஸின் டீசர், சீரிஸின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது. அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக,…

Read More

நடிகர் நட்டி முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு (அக்-9) துவங்கியது

நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சார்லஸ். அடுத்ததாக தனது லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் சார்பில் ‘ஆண்டவன் அவதாரம்’ என்கிற படத்தை தயாரித்து இயக்குகிறார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து, படத்திற்கு படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நடிகர் நட்டி நட்ராஜ் இந்த படத்தில் கதாநாயகனாக அதிலும் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நடிகர் ராகவ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகி மற்றும் இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு இன்னொரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் (அக்-9) இந்த படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படம் குறித்து இயக்குநர் சார்லஸ் கூறும்போது,…

Read More

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய…

Read More

கல்வியின் அவசியத்தைப் பேசும் அற்புதமான படம் சார் – சீமான் புகழாரம் !!

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “சார்”.  இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் படம் குறித்துக் கூறியதாவது.. என் அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கட் அவர்கள், அவரை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். என்னுடைய அப்பா பாரதிராஜாவின் ஈரநிலம் திரைப்படத்தில் நன்றாக  நடித்திருந்தார், ஆனால் இயக்குநராக அவரது இரண்டாவது படம் “சார்”.  SSS Pictures நிறுவனத்தின் சார்பில் இளைஞர்கள் இணைந்து, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.  கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று,  இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.  பல கிராமங்களில்…

Read More

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”!

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை தயாரிக்க, RK துக்கல் வழங்குகிறார். RKD Studios இந்தியாவின் முன்னணி மோஷன் பிக்சர் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கையகப்படுத்தும் நிறுவனமாகும், இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பில் களமிறங்குகிறது. கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் வர்மா எழுத, பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இப்படத்தை இயக்குகிறார். ஆன்மீகம் மற்றும் புராணங்களை சமகால சிக்கல்களுடன் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து வரும் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் மற்றும் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் அசத்தலான சூப்பர் ஹீரோவாகும். இப்படத்திற்கு வங்காளத்தின்…

Read More

l80-களில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’ அக்-18ல் ரிலீஸ்

வடலூர் J சுதா ராஜலட்சுமி தயாரிப்பில் ஜனா ஜாய் மூவீஸ் மற்றும் குழுவின் சார்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யமாலா’. ‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். எண்பதுகளில் நடக்கும் விதமாக தெருக்கூத்து கலையை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான் நடிகர்களான பி.யு.சின்னப்பா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோர் நடித்து பிரபலமான ஆர்யமாலா-காத்தவராயன் என்கிற புராண நாடகத்தை பின்னணியாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஆர்யமாலா என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மனிஷா ஜித். இவர் சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் அவரது மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் விந்தை, பிழை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த…

Read More

ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது ! தசரா பண்டிகை நாளில், கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள் !

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, அக்டோபர் 10 அன்று ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தினை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது. ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தினை, முன்னணி இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார். இந்த அதிரடி திரைப்படத்தில், நடிகர் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘வேதா’ ஒரு உறுதியான தலித் பெண்ணின் பயணத்தை விவரிக்கிறது மற்றும் சாதி அடிப்படையிலான அநீதிகள் மற்றும் குற்றங்களின் அழுத்தமான பிரச்சினைகளைத் தைரியமாகப் பேசுகிறது. இந்த தசரா பண்டிகையில், அக்டோபர் 10 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகத் தொடங்கும், ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ இன் இந்த உற்சாகமூட்டும்…

Read More

வேட்டையன் – திரை விமர்சனம் – 4/5

நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நபர்களின் பேராசையை கிழித்து தொங்க விட்டு இருக்கிற திரைக்கதை படத்தின் முதல் பலம். அடுத்து இந்தக் கதைக்கான நாயகன் ரஜினி . கதையின் நாயகனான அவர் கேரக்டராகவே மாறி முழு படத்தையும் தாங்கியிருப்பது இன்னொரு சிறப்பு. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரவுடிகளை சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா விஜயன்) தனியார் நீட் கோச்சிங் சென்டரின் அப்பட்டமான மோசடியை எதிர்த்து துணிச்சலாக போராடுகிறார். அப்பாவிகளை எமாற்றி கோடிகளில் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் காரர்கள் சும்மா இருப்பார்களா? ஆம், அதே தான் நடக்கிறது. சரண்யா கொலையாகிறார், அதுவும் பாலியல் பலாத்கார அடையாளத்துடன். அந்த வழக்கு விசாரணையில்…

Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “1000 பேபிஸ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது !!

மலையாள ஒரிஜினல் படைப்புகளைச் சிறப்பிக்கும் வகையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஐந்தாவது ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸ் “1000 பேபிஸ்” சீரிஸை வழங்குகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சீரிஸின் புதிய டிரெய்லர், தனித்துவமான கதை சொல்லல் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் என, ஆவலைத்தூண்டும் பரபரப்பான உலகை நமக்குக் காட்டுகிறது. இந்த சீரிஸ் அக்டோபர் 18 முதல் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது. இந்த பரபரப்பான சீரிஸில், புகழ்பெற்ற நடிகர்களான நீனா குப்தா மற்றும் ரகுமான் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சஞ்சு சிவராம், அஷ்வின் குமார், அடில் இப்ராஹிம், ஷாஜு ஸ்ரீதர், இர்ஷாத் அலி, ஜாய் மேத்யூ, வி.கே.பி, மனு எம் லால், ஷாலு ரஹீம், சிராஜுதீன், நாசர், டெயின் டேவிஸ், ராதிகா ராதாகிருஷ்ணன், விவியா சாந்த், நஸ்லின், திலீப் மேனன், தனேஷ் ஆனந்த், ஸ்ரீகாந்த் முரளி, ஸ்ரீகாந்த்…

Read More