இரட்டை அர்த்த பேச்சை தொடரும் ராதாரவி

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானவர் நடிகர் ராதாரவி. நடிகர் சங்க செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் உள்ளவர் திரைப்பட விழாக்களில் இவர் மைக் பிடித்தாலே நக்கல், நையாண்டி பேச்சுகளுக்கு குறையிருக்காது யாரை பற்றி பேசுகிறோம் அது சரியா தவறா என்பதை பற்றியெல்லாம் யோசிப்பது கிடையாது அந்த நேர கைதட்டலுக்கு பேசிவிட்டு கடந்து செல்வது இவரது வாடிக்கை இதுபோன்றுதான்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  திமுகவில் இருந்தபோது சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை குறிப்பிடும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவியின் சர்ச்சை பேச்சு குறித்து திரையுலக சங்கங்கள் மௌனம்…

Read More

ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் விருது

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆகிறது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது: “இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.” இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பழம்பெரும் பாலிவுட் நடிகர்கள்…

Read More

தமிழக கலைஞர்களின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஏப்ரல்1) மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதை அறிவித்திருக்கிறார். 2020 ஜூலை 17 ஆம் தேதி, தமிழ் சினிமாவில்இயக்குநர் இமயம் என்று புகழப்படும் மூத்தஇயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள்.அதையொட்டி தமிழ்த்திரை உலகத்திலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில்….. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல், ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் – தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கோரிக்கை. மாண்புமிகு திரு ஜவடேகர் அவர்களுக்கு, பெருமைமிகு…

Read More

தளபதி65 படப்பிடிப்புடன் இன்று தொடங்கியது

தமிழ் சினிமாவில் வசூலில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜய். படத்துக்கு படம் வசூலில் சாதனை படைத்துவருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் ரிலீஸான மாஸ்டரும் வசூலில் சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். விஜய் 65 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், தேர்தல் காரணமாக தள்ளிப் போய் மே 13ஆம் தேதி ரம்ஜானுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படம்…

Read More

அனுஷ்கா மீண்டு வருவாரா

நாயகன் முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களைப் போலவே, கதாநாயகி முக்கியத்துவமுள்ள படங்கள் இப்பொழுது அதிகமாக வெளியாகிவருகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே அப்படி வெளியாகும். ஆனால் இப்பொழுது அதிகமாக வெளியாக தொடங்கிவிட்டது. ஹீரோக்களுடன் டூயட் பாடவும், லூசு ஹீரோயினாகவும் தோன்றும் கதாபாத்திரங்கள் இல்லாமல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களை நம்ம ஹீரோயின்கள் தேர்ந்தெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நாயகிகளுக்கு முன்னுதாரணமாக, கதாநாயகி முக்கியத்துவமுள்ளப் படங்களை முதலில் தேர்ந்தெடுத்து, ஹிட்டும் கொடுத்தவர் அனுஷ்கா தான். அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் பெரியளவில் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இப்படத்துக்குப் பிறகுதான், நடிகைகள் பலரும் ஹீரோயின் முக்கியத்துவம் கொண்டப் படங்களில் நடிக்கத் துவங்கினார்கள். அப்படியான பெருமைக்குரிய அனுஷ்காவுக்கு இப்போது பெரிதளவில் படவாய்ப்பே இல்லை என்பதே சோகமான செய்தி. அனுஷ்கா நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் இஞ்சி இடுப்பழகி.…

Read More

நானே வருவேன் படப்பிடிப்பு எப்போது

தனுஷை நடிகராக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவும், கொண்டாடித் தீர்க்கவும் மிக முக்கியக் காரணம் செல்வராகவன். தனுஷ் – செல்வா கூட்டணியில் வெளியான படங்களே அதற்கு உதாரணம். காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய மூன்று படங்களைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் – செல்வராகவன் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாக இருக்கும் படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வைரலனது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக திரைக்கதை வசனத்தை எழுதிமுடிக்கும் வேலைகளில் இருந்தார் செல்வராகவன். தற்பொழுது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் செல்வராகவன். திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே படத்தை துவங்குகிறார்களாம். ஏனெனில், படத்தின் வேலைகள் வேகவேகமாக நடந்துமுடிகிறதாம். தற்பொழுது, ரூஸோ…

Read More

அஜீத்குமார் சம்பளத்துக்காக வியாபாரம் செய்யப்பட்ட வலிமை

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும் மே 1 ஆம் தேதி அஜித்தின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்றும், அதன் பின் படத்தின் வியாபாரம், புரமோஷன் வேலைகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 29ஆம் தேதி இரவு வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்கள் வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் மதுரை கோபுரம் சினிமாஸ் ஆகியோருக்கு கொடுத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார். நேர்கொண்ட பார்வை…

Read More

நேர்கொண்ட பார்வை வக்கில் சாப் ஆக தெலுங்கில் ரீமேக்கானது

ஒரு மொழியில் பெரிய வெற்றியைப் பெரும் படங்கள் மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அப்படி, இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான திரைப்படம் பிங்க். பாலிவுட்டில் மிகப்பெரியளவில் கவனம் ஈர்த்தது. மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இந்தக் கதையை தமிழுக்கு எடுத்துவந்தார். சர்ப்ரைஸ் விஷயம் என்னவென்றால், ஒரு ரீமேக் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, அஜித், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் நேர்கொண்டப் பார்வை திரைப்படம் உருவானது. வயதான லுக்கில் அஜித் நடித்திருந்தார். பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா மிரட்டியிருப்பார். படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். தமிழுலும் பெரிய வெற்றியைப் பெற்றது. பிங்க் படத்துக்கும் நேர்கொண்டப் பார்வைப் படத்துக்கும் இடையே திரைக்கதையில் சில வித்தியாசங்கள் இருந்தது. தமிழின் உச்ச நடிகர் அஜித் என்பதால், அவருக்கென ஒரு காதல்…

Read More

வலிமை படத்தில் சில மாற்றங்கள்

அஜித் ரசிகர்கள் மத்தியில் வலிமை படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திலிருந்து ஒரு ஸ்டில்லாவது வெளியாகிவிடாதா என தவியாய் தவித்து வருகிறார்கள். சமீபத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அஜித் 50வது பிறந்த தினமான மே 1ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். அதன்பிறகு, படம் குறித்த அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலுக்கு பிறகே, அஜித் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். படத்துக்கான 90சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும், ஸ்பெயின் நாட்டில் எடுக்க வேண்டிய ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டால் மொத்தப் படமும் முடிந்துவிடும். இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான ஃபைனல் எடிட்டையும் முடித்துவிட்டார்கள் படக்குழுவினர். சமீபத்தில், டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு செய்யப்படாத முழு படத்தையும் படக்குழுவினர்கள் பார்த்திருக்கிறார்கள். அதோடு, நெருங்கிய வட்டாரத்தினர் சிலரும் படத்தைப்…

Read More

தேசிய விருதை எதிர்நோக்கும் நடிகை அபர்ணதி

தமிழ் சினிமாவில் விமர்சகர்களால் பாரபட்சம் இன்றி பாராட்டப்படும் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருகின்றன. அந்த விதத்தில் இந்த மாதம் வெளிவந்த ஒரு படம் ‘தேன்’. மலைக்கிராம மக்களின் வாழ்வியலைத் திரைக்கதையாகக் கொண்டு வெளிவந்த இந்தப் படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் அபர்ணதி நடித்திருந்தார். அவருடைய நடிப்பிற்கு விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அப்படம் பற்றிய தனது அனுபவத்தை பத்திரிகையாளர்களிடம் அபர்ணதி பகிர்ந்து கொண்டார். ’ “தேன்” படத்திற்குக் கிடைத்து வரும் நேர்மறையான பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் அவர்களையே சேரும். இந்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய முழுக்காரணமும் அவர்கள் தான்.  மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் பொருட்டு, படப்பிடிப்பு முடியும் வரை ஷாம்பு, மேக்கப் என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று…

Read More