வசந்த மாளிகை ட்ரைலர் விழாவில் கலகலப்பு |

1972ல் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் வசந்த மாளிகை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ” வசந்த மாளிகை” திரைப்படம். பாலாஜி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது. இதில் கே. வி. மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, “மயக்கம் என்ன” “கலைமகள் கைபொருளே” “இரண்டு மனம் வேண்டும்” “ஏன் ஏன் ஏன் ” ஆகிய பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் அந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தை அன்று டி. ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். அப்படியாப்பட்ட…

Read More

கிரிமினல் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

நடக்க இருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 17வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.…

Read More

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை! – சுப்ரீம் கோர்ட்

தமிழகத்தில் எட்டு வருஷங்களுக்கு முன்னால் தலைப்பு செய்தியில் இடம் பிடித்த ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில், சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து இன்று காலையில் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலிடம் பணியாற்றியவரின் மகள் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். 2001ல் காணாமல் போனார். அவரது சடலம் கொடைக்கானல் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில், ராஜகோபால், ஜீவஜோதி மீது ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் இருவரையும் பிரிக்க முயன்றுள்ளார். முடியாததால், சாந்தகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதனால் ராஜகோபால் தூண்டுதலால் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில், சரவணபவன் ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், பட்டுராஜன்,…

Read More

டி டி வி தினகரனின் பரிசுப் பெட்டி சின்னத்தை எப்படியெல்லாம் பிரபலப்படுத்தறாங்க!

சுப்ரீம் கோர்ட்டில் ஏகப்பட்ட செலவு செய்து தொடர் சட்ட போராட்டத்திற்கு பின், டிடிவி தினகரனின் அ.ம.மு.க.,விற்கு, ‘கிப்ட் பாக்ஸ்’ என்ற பொதுவான சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. லேட்டானாலும் லேட்டஸ்டாக ‘பொது சின்னம்; அதுவும் கிப்ட் பாக்ஸ் கிடைத்தது, எங்கள் அரசியல் வாழ்க்கைக்கு லிப்ட் தரும்’ என தினகரன் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகள்; இடைத்தேர்தல் நடக்கும், 18 சட்டசபை தொகுதிகள்; புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி; இடைத்தேர்தல் நடக்கும் ஒரு சட்டசபை தொகுதிக்கும், வேட்பாளரை நிறுத்தி உள்ளார்.தன் கட்சிக்கு, ‘குக்கர்’ சின்னம் கோரி, உச்ச நீதிமன்றத்தில், தினகரன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கட்சியை பதிவு செய்யாததால், ‘குக்கர்’ சின்னம் வழங்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. எனினும், பொது சின்னம் ஒதுக்க, பரிந்துரை செய்தது. இதனால்,…

Read More

திருப்பரங்குன்றம் தொகுதியில் AK போஸ்-ஸூக்கு ஜெ. வைச்ச ரேகை பொய்; அதனால் அவரின் வெற்றி செல்லாது!

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றிப்பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது! கடந்த 2016-ஆம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரி திமுக-வின் சரவணன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்புமனுவோடு இணைக்கப்பட்ட படிவங்களில் பொதுச் செயலாளர் என்ற வகையில் ஜெயலலிதாவின் கையெழுத்திற்கு பதில் கைரேகை இடம்பெற்றிருந்தது. இந்த கைரேகை ஜெயலலிதாவிடம் இருந்து முறையாக பெறவில்லை என தெரிவித்து தொடரப்பட்ட இந்த வழக்கில், இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.கே.போஸின் வேட்புமனுவையும், அவரது…

Read More

நடிகர் சூர்யா ஏன் உறியடி 2 வை தயாரிக்க வேண்டும்? – சூர்யா பதில்

2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர் ராஜசேகர்  கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார். அவர் பேசுகையில்,“ உறியடி 2 எங்களுக்கு ஸ்பெஷலான படம். உறியடி படத்தின் இயக்குனர் விஜய்குமார்அவர்கள் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் சொன்ன ஒன்லைன் எங்களைக் கவர்ந்தது. உறியடி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது.…

Read More

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் “கீ”

நாடோடிகள் , ஈட்டி  ,மிருதன் , போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தயாரித்துள்ள  வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா  , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுகாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் .இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர் ஆவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.அபிநந்தன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பு நகூரன் . பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியவை :  வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என  எண்ணம் மனதில்…

Read More

குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது : நடிகர் சிவகுமார் பேச்சு !

குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது  .இதுவே பிலிம் நியூஸ் ஆனந்தனின் வாழ்க்கை சொல்லும் பாடம் என்று நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:-தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன்  பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு பத்திரிகையாளர்  அருள்செல்வன் தொகுத்துள்ள  ‘ஞாபகம் வருதே’  நினைவலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு  நடிகர் சிவகுமாரின் இல்லத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது .நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சலன் , மக்கள் குரல் ராம்ஜி , இந்து தமிழ் உதவி செய்தி ஆசிரியர் மானா பாஸ்கரன் ,திரைப்பட இயக்குநர் ஓவியர் ஏ.பி .ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட்…

Read More

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”

ஒரு சில தலைவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு தலைவர் தான் டாக்டர் எம். ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து வருகிறார். அவரின் பாடல்களும் காலத்தால் அழியாதவை. பல ஆண்டுகள் மற்றும் தலைமுறைகள் கடந்தாலும் இன்னும் ஆழமாக மனதில் நிற்கக் கூடியவை. தற்போதைய தலைமுறை நடிகர்களில் வணிக ரீதியில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனது கனா படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.தனது இரண்டாவது தயாரிப்பிற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று பெயரிட்டிருக்கிறார். பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். “எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். ஒரு நடிகர்…

Read More