மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் ஷிவானி சுப்ரமணி, ” இயக்குநர்கள் பேரரசு சார், உதயகுமார் சார் இவர்களது படங்கள் பார்த்துதான் சினிமா மீது ஆர்வமே வந்தது. தனஞ்செயன் சாருடன் பேசும்பொழுது எப்பொழுதுமே ஒரு பாசிட்டிவ் வைப் இருக்கும். டி. இமான் எங்கள் படத்திற்கு பெரும் பலம். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இயக்குநராக என் அம்மா படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். நிச்சயம்…
Read More‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது இரண்டாவது திரைப்படமான ‘டெத் ரயில்வே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளை தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படத்தை இயக்குகிறார் தரணி ராசேந்திரன். இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த 1944 ஆம் ஆண்டில், ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை இப்படம் பின்னணியாகக் கொண்டுள்ளது என்பதை கிளிம்ப்ஸ் நமக்கு காட்டுகிறது. இந்தியா தனது சொந்த மண்ணில் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அதே வேளையில், இந்திய வீரர்கள் தொலைதூர எல்லைகளில் அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகம் அறியப்படாத இந்த வரலாற்றுப் பக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Read Moreதமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் தனித்துவமான ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சியை அறிவித்துள்ளது தமிழ் ZEE5!
அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அசல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடுமையான போட்டிகள் மூலம் வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் ஹிப்-ஹாப் கலைஞர்களின் திறமைகளைக் கொண்டாடுகிறது. தேசியம், XX 2026: தமிழ் ஹிப்-ஹாப்பின் ஆற்றலையும் வளர்ந்து வரும் இசை வடிவத்தையும் கொண்டாடும் வகையில், தமிழ் ZEE5, ZEE மியூசிக் உடன் இணைந்து ‘தீக்குரல்’ என்ற புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் கலைஞர்களை ஒன்றிணைத்து, அடுத்த தலைமுறை தமிழ் ராப்பின் குரலாக உருவெடுப்பதற்கான போட்டியை இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கிறது. கருப்பொருள் சார்ந்த இசை நிகழ்ச்சிகள், படைப்பாற்றல் சவால்கள், தீவிரமான போட்டிகள் மற்றும் பார்வையாளர்களின் பங்கேற்பு எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, தனித்துவம், பாடல் வரிகளின்…
Read Moreஉண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ – நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாருக்கும் தெரியாத பெரிய நிழல் வணிகம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், கதைக்களம், நட்சத்திரங்களின் பங்களிப்பு மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் எம். மூர்த்தி பேசியதாவது, “நான் முதலில் நடிகராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். இன்று தயாரிப்பாளராக…
Read More‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘தர்மன்’ படக்குழுவில் மற்றொரு அசாத்திய திறமைசாலியான ஸ்ரீலீலா இணைந்திருப்பது, இத்திரைப்படத்தின் உலகம் பிரகாசமாகவும், பிரம்மாண்டமாகவும் விரிவடைவதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கம், அனிருத் ரவிச்சந்தரின் இசை, அன்பரிவின் சண்டை பயிற்சி என புகழ்பெற்ற கலைஞர்களின் சக்திவாய்ந்த கூட்டணி, தொலைநோக்கு பார்வை கொண்ட கதைசொல்லல் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவற்றோடு உருவாகும் ‘தர்மன்’, திரை ரசிகர்களுக்கு பெருவிருந்தாக தயாராகி வருகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் ‘தர்மன்’, தொடர்ந்து பல நட்சத்திரங்களை கூட்டணியாக இணைத்து தன் பயணத்தைத் தொடர்கிறது.
Read Moreஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!
தேசியம், நவம்பர் 3, 2026: தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் ஒரு நகரத்தில், சில விஷயங்களை விட்டுப் பிரிவது மற்றவற்றை விட மிகவும் கடினமானது. மனோஜ் பாஜ்பாய், போமன் இரானி மற்றும் திவ்யா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’, தான் நேசிக்கும் வீட்டைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கத்திற்கும் எதிராகத் தனி மனிதராகப் போராடும் ஒருவரின் கதையைச் சொல்கிறது. மும்பையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பை காலி செய்ய மறுக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியரைப் பற்றிய விறுவிறுப்பான இந்தத் திரைப்படம், மறுமேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பெரும் தொகையைப் பொருட்படுத்தாமல் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை மையமாகக் கொண்டுள்ளது. இத்திரைப்படம் நவம்பர் 6, 2026 அன்று ஹிந்தி ZEE5-ல் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளது. ராணா டகுபதி அவர்களின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பில், பென் ரேகி…
Read Moreமர்ம முடிச்சுகளுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’! – நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!
அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe) வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில்… *நடிகை அனுபமா பேசியதாவது:* “‘ஜான் டோ’ மிகவும் முக்கியமான, ஆழமான உளவியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குள் செல்லும்போது நீங்கள் ஒரு நபராக இருப்பீர்கள். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிச்சயமாக இன்னொரு நபராக மாறியிருப்பீர்கள். அந்த அளவுக்கு இப்படம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார். *நடிகர் படவா கோபி பேசியதாவது:* “இந்தப் படத்தில் என்னுடைய குரலைப் பற்றிப்…
Read Moreஇந்தியத் திரையுலகமே திரும்பிப் பார்த்த பிரம்மாண்டக் கொண்டாட்டம்! KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழாவில் குவிந்த முன்னணி நட்சத்திரங்கள்!
திரையுலக நட்சத்திரங்கள் திரள, பிரம்மாண்டமாக நடைபெற்ற KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழா! இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் சங்கமித்த KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமணம்! கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமண விழா! KRG Group of Companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி – KRD Hospitality நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபா ரவி தம்பதியினரின் மகனும், KRG Productions நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளருமான தீபக் ரவி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் D.M. கதிர் ஆனந்த் – கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கீதா கதிர் ஆனந்த் தம்பதியினரின் மகள் கே. செந்தாமரை ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் 31-ம் தேதியும், திருமணம் நவம்பர் 1-ம் தேதியும் சென்னையில் வெகு…
Read More‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!
4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமா நிகழ்வுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் வெளியீட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோற்றம் இந்தப் போஸ்டர்கள் மூலம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணி, மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதைக்களம்…
Read Moreதமிழ்த் திரையுலகிற்கு சமமான வாய்ப்பை ஏற்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி. – தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)
*தமிழ் திரைப்படங்களுக்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்த் திரையுலகிற்கு சமமான வாய்ப்பை ஏற்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி. தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதிகளில் தமிழ் திரைப்படங்களின் காட்சிகளை காலை 6 மணிக்குத் தொடங்கி, அதிகாலை 2.30 மணி வரை ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. 2023 ஜனவரி மாதத்தில் பிரபலமான ஒரு திரையரங்கில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலை 5 மணி மற்றும் 6 மணி காட்சிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா/தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தமிழ் திரைப்படங்கள் காலை 6 மணிக்கே…
Read More