தெய்வ அருள்மனத்தோடு ‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!

தென் தமிழகத்தின் திருவிழாக்களையும் மக்களின் பண்பாட்டையும் தன் காந்தக் குரலினாலும் வில்லுப்பாட்டு இசையினாலும் கட்டிப்போட்ட கிராமத்துக் கலைஞர் மாதவி, முதன்முறையாகத் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அடியெடுத்து வைத்துள்ளார்! ‘பம்பர்’ படப்புகழ் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ (அக்டோபர் 30) வெளியாகி, பக்தியையும் கிராமத்து உணர்வுகளையும் நேசிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வில்லுப்பாட்டு கலையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்பு பெற்ற வில்லிசைக் கலைஞர் மாதவி, முதன்முறையாகச் சினிமாவில் பாடியுள்ள இந்த ஆன்மீகப் பாடல், கிராமத்துக் கோவில் திருவிழாவின் மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக அதிர்வை அப்படியே உங்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும்! இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாரம்பரியமிக்க நாட்டுப்புற இசையில் உருவாகியுள்ள 7 பாடல்களில், இந்தப் பாடல் திருவிழா…

Read More

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்த ராக்ஸ்டார் டிஎஸ்பி!

‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வேணு எல்தண்டி இயக்கத்தில், தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ‘எல்லம்மா’ திரைப்படம் வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

Read More

‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து- தர்ஷிகா நடிக்கும் ‘தி லாஸ்ட் கேஸ்’ (The Last Case) திரைப்படத்தின் தொடக்க விழா!

அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘ . அந்தப் படத்தை பிக்பாஸ் புகழ் முகங்கள் சித்து, தர்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் பாலாஜி இயக்கியிருந்தார். அது ஒரு கிரைம் திரில்லராக உருவாகியிருந்தது. அதே இயக்குநர் பாலாஜி தனது அடுத்த முயற்சியாக ‘தி லாஸ்ட் கேஸ்’ என்கிற படத்தைத் தொடங்குகிறார். இப்படத்தையும் அதே ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்திலும் முந்தைய படத்தில் நடித்த சித்துவே நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தர்ஷிகா நடிக்கிறார் .மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்கள் நடிக்கிறார்கள் .இந்தப் படத்தின் பூஜை இன்று பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்தப் புதிய படத்தின் போஸ்டர்களைப் பார்க்கும்போது ‘ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும் .அது குற்றவியல்…

Read More

வேட்டுவம்’ பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பொங்கல் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படம் – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்! இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தர்மன்’, ‘சேயோன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவற்றின் வெளியீட்டுத் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், பொங்கல் 2027 வெளியீட்டை முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ‘வேட்டுவம்’, பொங்கல் திரையரங்க வெளியீட்டுப் போட்டியில் களமிறங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.…

Read More

ENEMY OF THE SMUGGLER – விமர்சனம் 4/5..

கதை…. அப்பாவை இழந்த சரண் தன் தாய் ராதிகாவுடன் வசித்து வருகிறார்.. ஏற்கனவே குடும்பத்தில் கடன் பிரச்சினை அதிகமாக இருப்பதால் குறுக்குவழியில் அதிக பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.. இவருக்கு துணையாக இருக்கிறார் போலீஸ் இன்பார்மர் பால சரவணன்.. கடல் வழியாக இந்தியாவிற்கு வரும் ஹெராயன் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி அதன் மூலம் கோடி கணக்கில் சம்பாதிக்க திட்டமிடுகிறார் சரண்.. ஏற்கனவே இந்த தொழிலில் உலக அளவில் கொடிகட்டி பறக்கும் லால் மற்றும் ஜே.டி. சக்கரவர்த்தியிடம் இவர்களின் திட்டம் பலித்ததா.? இவர்களின் சதி திட்டத்தை அறிந்த போலீஸ் சமய முரளி அவர் ஒரு திட்டம் போடுகிறார்.. இறுதியில் என்ன ஆனது.? இந்த சதி திட்டத்தில் சிக்கியவர் யார்.? மீண்டது யார்..? என்பதெல்லாம் யூகிக்க முடியாத அதிரடியான சம்பவம்.. நடிகர்கள்… வடசென்னை படத்தில் ஐஸ்வர்யாவின் சகோதரனாக நடித்த சரண்…

Read More

பனி விழும் இரவு விமர்சனம்… 3/5

கதை … கொடைக்கானலில் இருக்கும் தன் மனைவியின் பங்களாவுக்கு வருகிறார் நாயகன் அருண் கார்த்திக்.. அடுத்த நாளே தன் மனைவியை காணவில்லை.. சிலர் தன்னை அடித்து மனைவியை கடத்தி விட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்.. இதனையடுத்து அந்த பங்களா செக்யூரிட்டி அக்கம் பக்கத்தினர் என அனைவரிடம் விசாரிக்கிறார் போலீஸ் சேரன் ராஜ் மற்றும் கருப்பு நம்பியார்.. ஆனால் அந்த செக்யூரிட்டி உள்ளிட்ட அனைவரும் அவர் மட்டும்தான் வந்தார்.. அப்படி ஒரு பெண்ணை நாங்கள் பார்க்கவில்லை என்கின்றனர்.. அப்படி என்றால் அவர் சொல்லும் அந்த பெண் யார்.? அவர் எங்கு சென்றார் என்பதை எல்லாம் யூகிக்க முடியாதபடி கற்பனை கலந்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.. நடிகர்கள்… ஒரு நொடி படத்தில் முக்கிய கேரக்டர் நடித்த அருண் கார்த்திக் இந்த படத்தின் கதை நாயகன்.. அலட்டிக்…

Read More

ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்ட தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தங்கப்புள்ள’ பாடல்

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாகத் தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை…

Read More

எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரையுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ஷெர்ரி அகர்வால். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும் இணைக்கும் உணர்வுப்பூர்வமான மியூசிக்கல் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சைக்கிள் கேப்’. இசை, காதல் மற்றும் அனைவருக்கும் நெருக்கமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இரண்டு தலைமுறைகளின் காதல் உணர்வுகளையும் ஒரே கதையில் இணைக்க முயல்கிறது. கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டெடுக்கும் அதேவேளையில், இன்றைய தலைமுறை ரசிகர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார். ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம்…

Read More

அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்!

‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்ட்டைல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் ‘அரிகொம்பன்’ திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டார். காட்டு யானையை மையமாகக் கொண்டு, அதே காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் எடுத்துரைக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். ‘திருடா திருடி’ படத்தின் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜய் இப்படத்தில்…

Read More

வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி: ‘லவ் 3. ஓ’ (Love 3. O ) புதுமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீருடன் உருக்கம்!

மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை  எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா  கதை ,திரைக்கதை, வசனம்,  பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு  என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில்  தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியமான வேடம் ஏற்று நடித்துள்ளார். நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த்  படத்தொகுப்பு செய்துள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளராக பிரசன்ன குமார் பங்கேற்றுள்ளார் . மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார்…

Read More