தமிழின் தொன்மை, கலை மற்றும் இலக்கியப் பண்பாட்டின் மீது பேரார்வம் கொண்ட நடிகரும்,தயாரிப்பாளருமான திரு. சிவகார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட நற்பணி இயக்கத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ சார்பில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ் தாத்தா’ உ.வே.சா நூலகத்திற்கு சிறப்பு ஆய்வு சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது. நமது செம்மொழி தமிழின் மாண்பையும், பழம்பெரும் வரலாற்றையும் இன்றைய தலைமுறையினரும், நற்பணி இயக்கத்தை சார்ந்த தோழர்களும் ஆழமாக உணர்ந்து அறிந்து கொள்ளும் உயரிய நோக்கத்தோடு இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இப்பயணத்தின் போது, சங்க இலக்கியங்களையும் அரிய ஓலைச்சுவடிகளையும் தேடித்தேடி தொகுத்து தமிழுக்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் அரிய நூல்கள், பழங்கால சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முறைகளை நூலக நிர்வாகிகள் நற்பணி இயக்கத்தின் கலை இலக்கிய பண்பாட்டுப்…
Read Moreமூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இந்தச் சிறப்பு வழிபாட்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இவர்களுடன் இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி அவர்களும் கலந்துகொண்டார். திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு, படக்குழுவினரின் இறைநம்பிக்கையையும் பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. சுந்தர்.சி இயக்கத்தில்,…
Read Moreசூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யா – ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜெயஸ்ரீ தாமோதரன்- ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
Read More33 வருடம் கழித்து மீண்டும் திரைக்கு வரும் ‘ஜென்டில்மேன்’ ! மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனின் மெகா பிளான்!!
இந்திய திரைப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றான படம் ‘ஜென்டில்மேன்’. மீண்டும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர மெகா தயாரிப்பாளர் குஞ்சுமோன் பிரமாண்டமாக முடிவு செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 11- ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த மறு வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் வகையில், புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளனர். 1993-ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படம், S.ஷங்கர் இயக்குநராக அறிமுகமான படைப்பாகும்; இவரது திரைக்கதை, பிரமாண்ட காட்சி அமைப்பு, பாடல்களை உருவாக்கிய விதம் என்று இப்படம் ஷங்கருக்கு சினிமாவில் தனி இடத்தை கொடுத்தது. இதன் மூலம் தனது பாணியில் கலைஞர்களை உருவாக்க முடியும் என்று நிரூபுத்து காட்டியவர் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். 800க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்த அனுபவங்கள்…
Read Moreமெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் #RC17 # RC2Sukku திரைப்படம் இன்று தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கிளாப்ஸ் அடித்தார். மேலும், தில் ராஜுவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையைப் படக்குழுவினரிடம் வழங்கினார். டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற இயக்குநர்கள் முதல் காட்சியை இயக்கினர். ராம் சரண், சுகுமார் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் தெலுங்கில் பெரும் வெற்றி…
Read Moreஇசைக் கடவுள் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!
ஒரு பாடலுக்கு ஆறுமாதம் போராடுகிறவர்களுக்கு மத்தியில், தனது “கடவுள் தந்த பரிசு” திரைப்படத்திற்காக ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்து, அடுத்த ஆறு நாட்களில் அற்புதமான ஆறு பாடல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் பதிவு செய்து கொடுத்த இசைக் கடவுள் இளையராஜாவை, மக்கள் நாயகன் ராமராஜன், ‘கடவுள் தந்த பரிசு’ இயக்குநர் காசிமாயன், வசனகர்த்தா ராஜகோபால், தயாரிப்பு நிர்வாகி ராம் பிரபு ஆகிய படக்குழுவினருடன் சந்தித்து, தனது நன்றியைத் தெரிவித்து, தான் கடவுளாக மதிக்கும் இளையராஜாவிடம் ஆசி பெற்றார் ராமராஜன்! காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். விரைவில் படப்பிடிப்பை துவங்கவிருக்கும் படக்குழுவினர், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்! கூடுதல் சிறப்பு செய்தி – ———————————— ‘கரகாட்டக்காரன்’…
Read Moreவேட்டுவம்’ பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பொங்கல் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படம் – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்! இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த வீடியோவிற்கு, இந்தியில் பங்கஜ் திரிபாதி, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் சௌபின் ஷாஹிர், கன்னடத்தில் கிச்சா சுதீப், தமிழில் இயக்குநர் பா. இரஞ்சித் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். அப்போகலிப்டிக் பின்னணியில் உருவாகியுள்ள…
Read Moreகதாப்பாத்திரங்கள் நிறைந்த மர்மமான போஸ்டர்… வெளியீட்டுத் தேதியுடன் களமிறங்கும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’!
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர், மர்மம் நிறைந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில், காவலர் சீருடையில் இருக்கும் அர்ஜுன் தாஸின் தோற்றம் மையமாக இடம்பெற்றுள்ளது. அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய தடயங்களை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கதாபாத்திரங்களின் முகபாவனைகளும், ஒன்றோடொன்று தொடர்புடையது போன்ற புகைப்படங்களின் தொகுப்பும் படத்தின் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ‘ஜான் டோ’ என்ற தலைப்புடன் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ள…
Read Moreநடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!
நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடலை லாஸ் ஏஞ்சல்ஸில் பார்த்ததன் மூலம், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஏழு வயதாகும் ஐரா மற்றும் இன்று (அக்டோபர் 30) தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடும் யதர்வ் ஆகியோருக்கு ‘ராமாயணா’ திரைப்படம் மறக்க முடியாத ஸ்பெஷல் நினைவாக எப்போதும் இருக்கும். இப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. அத்தோடு, ராவணன் கதாபாத்திரத்திலும் யஷ் நடித்துள்ளார். நடிகர் யஷ்ஷின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லான இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை அவரது குழந்தைகள் பார்த்திருப்பதும் நெகிழ்வான தருணமாக அமைந்துள்ளது. இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் ஐரா மற்றும் யதர்வ் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் காரணம்தான். ஐரா என்ற பெயர், மகாலட்சுமியின்…
Read Moreசிங்காரம் விமர்சனம்… 3.5/5..
கதை… எம் எஸ் பாஸ்கர் – தீபா இருவரும் தம்பதிகள்.. இவர்களின் மூத்த மகன் யோகி பாபு.. இவர்களுடன் ஜாவா சுந்தரேசன், கனேஷ்கர், கல்கி, மனோபாலா ஆகியோரும் உண்டு.. இவர்கள் குறவர் – குறத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள்.. ஆனைமலை என்ற பகுதியில் இவர்கள் கூடாரம் அமைத்து அங்கு வசித்து வருகின்றனர்.. இவர்களின் கூட்டத்தில் இருக்கும் பெண்கள் மீது காம ஆசை கொள்கிறார் எம்எல்ஏ தம்பி சென்ட்ராயன்.. ஒரு கட்டத்தில் இரவில் வந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதனால் அவர்களை கட்டி வைத்து அவமானப்படுத்துகிறார் யோகி பாபு.. இதனால் இருவருக்கும் பிரச்சனை வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.? எம்எல்ஏ தன் அதிகாரத்தால் இவர்களை என்ன செய்தார்.? ஏற்கனவே நிரந்தர இடம் இல்லாமல் வாழும் இவர்களின் நிலை என்ன ஆனது.? என்பதெல்லாம் நீதிக்கதை.. நடிகர்கள்… கதை நாயகனாக…
Read More