‘இந்தக் கோபம் எல்லாம் ஒரு காலத்தில் அன்பாக இருந்தது’ என்று தொடங்கிய ஒன்று… இப்போது உங்களை சொல்ல வைக்கிறது – அதுதான் கர்ஜனை. நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குநர் சௌர்யுவ் இயக்கும் #VDxSHOURYUV படத்தில் நடிக்கிறார். அது பிரம்மாண்டத்தையும், இலட்சியத்தையும் உலகளாவிய சினிமாவை நோக்கிய ஒரு துணிச்சலான வீறு நடையையும் குறிக்கிறது. நீங்கள் அவரை அறிந்த விதத்தில் அல்ல… மாறாக நீங்கள் கற்பனை செய்திராத விதத்தில்… அந்த அறிவிப்பு போஸ்டரில் …விஜய் தேவரகொண்டா உலோக பட்டைகளால் நான்கு நாய்களை பிடித்தபடி முன்னோக்கி நடந்து செல்வது காட்சிப்பபடுத்தப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் ஆறு அல்லது ஏழு பேர் அவருடன் நடந்து செல்கின்றனர். இதுதான் ட்ரீம் கலெக்டிவ். உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களின் சக்தி வாய்ந்த குழு… ஒவ்வொருவரும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் … ஒவ்வொருவரும் முக்கியமானவர் .. ஒவ்வொருவரும்…
Read Moreசஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 ஜனவரி 21 வெளியீடு !! ; இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்ட காதல் காவியம்!
இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் 2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த காதல் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடிக்கின்றனர். வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. https://www.instagram.com/p/DXOa43wCBeW/?igsh=MTFieDRjamRmczBtZA== பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஆழமான கதை சொல்லும் முறைப்படி, இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அனுபவத்தையும், ஆழமான உணர்ச்சியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமான அளவில் உருவாகும் “லவ் & வார்”, சஞ்சய் லீலா பன்சாலியின் மிகபெரும் கனவுப்படைப்பாக உருவாகி வரும், பிரம்மாண்டமான காதல் படைப்பாகும். கதை அமைப்பும்,…
Read More’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது, “படத்தின் தலைப்பு ‘பிரேக்ஃபாஸ்ட்’ என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது” என தெரிவித்தார். நடிகை அமிதா, “காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை…
Read Moreசீயான் விக்ரம் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படம் ஸ்டைலீஷ் புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்டது !!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இப்போதே ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் உயர்த்தியுள்ளது. தனித்துவமான கதைக்களம் மற்றும் ஸ்டைலிஷ் திரைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 ல் சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்கிய “இருமுகன்” படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த கூட்டணி…
Read Moreமிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்…
கதை… அணு ஆயுத பேரழிவை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர் கௌதம் கார்த்திக் குழுவினர்… அதற்கு எதிராக இந்திய உளவாளிகள் மஞ்சு வாரியார் மற்றும் ஆர்யா எதிர்த்து போராடுகின்றனர். இறுதியில் வென்றது யார்.? மிஸ்டர் எக்ஸ் யார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… – Arya – Gautham – Gautham Ram Karthik – Amaran – Sarath Kumar – Parameshwar – Manju warrier – Indira Verma – Anagha – Keerthana – Athulya – Aditi – Raiza Wilson – Nirmala – Kali Venkat – Ponnuswamy – Jayaprakash – Vamanamoorthy நீருக்கு அடியில் இருந்து அறிமுகமாகிறார் ஆர்யா.. அந்த காட்சி அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளது.. அந்த கேரக்டருக்கு இவரது உடல் பக்காவாக பொருந்தி போகிறது.. ஆர்யாவுக்கும் அனகாவுக்கும் உள்ள…
Read Moreஇரட்டை முகத்தில் மர்ம மிரட்டல் – ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’ கவனம் கவரும் திகில் முயற்சி!
சூனியம், கருமம், மர்ம நம்பிக்கைகள் போன்ற அடிப்படையில் உருவாகும் திகில்–மர்ம திரைப்படமாக ‘சூனியம்’ உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகும் இந்த படம், ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களின் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. பல பரிமாணங்களில் தன்னை நிரூபித்துள்ள நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி, இந்த படத்தில் இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் தோன்றுகிறார். ஹீரோவும் வில்லனுமாக இரட்டை கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இந்த படத்தின் முக்கிய பலமாகும். இந்த ‘டுவல் ரோல்’ அணுகுமுறை, கதைக்கு கூடுதல் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. M3 மீடியா மற்றும் மஹா மூவீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை சூர்யாஸ் இயக்குகிறார். மகர்ஷி கொண்ட்லா வழங்கும் இப்படத்திற்கு மகேந்திர நாத் கொண்ட்லா தயாரிப்பாளராக உள்ளார். இசையமைப்பாளராக அச்சு ராஜாமணி பணியாற்ற, ஆஸ்கர் விருது பெற்ற சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுதுகிறார். தொழில்நுட்ப அணியிலும் வலுவான…
Read Moreரூம் பாய் – விமர்சனம்..
கதை… நாயகன் நிகில் ஏலகிரியில் உள்ள ஒரு விடுதியில் ரூம்பாயாக வேலைக்கு சேர்கிறார்.. அங்கு சேர்ந்த பின் தான் அவருக்கு அங்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் தெரிய வருகிறது.. இதனையடுத்து நேர்மையாக செயல்பட நினைக்கிறார் நிகில். அங்கு நடக்கும் அத்துமீறல்களை வெளியே கொண்டு வருகிறார்.. இதனால் அந்த அங்கு உள்ளவர்களுக்கும் நிகில்க்கும் பிரச்சினை ஏற்படுகிறது.. அதன் பிறகு நடந்தது என்ன.? நிகில் இந்த குற்றச்சாட்டுகளை வெளியே கொண்டு வந்தாரா.? காவல்துறை என்ன செய்தது.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் C.நிகில் (சஞ்சய்), நாயகி ஹர்ஷா (நிஷா) இமான் அண்ணாச்சி (Sunny Funny அண்ணாச்சி), பிர்லா போஸ் (சந்துரு), youtube புகழ் காத்து கருப்பு கலை (பிச்சாண்டி), இன்ஸ்டா புகழ் கற்பகம் (சுமதி), கவிதா விஜயன் (இனியா), சமீர் (James Zakiria), சிட்டி ராஜா (TPT Guna), அருண்ராஜா…
Read Moreசு. காளிங்கன் இயக்கத்தில் மித்தாலஜிகல் திரில்லராக உருவாகி இருக்கும் ” பகவான் “
அம்மன்யா மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில், சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், பிரபல நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் கணேசன் எடிட்டிங் செய்திருக்கிறார். சம்பத் ஜியின் பாடல்வரிகளுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார். கலா மாஸ்டர் நடன அமைப்பையும், பாலையா கலை…
Read Moreபத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் *பினு. டி. ஜான் போஸ்கோ* நடிப்பிலும் படிப்பிலும் அசத்தும் சிறுவன்!
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த *பினு. டி. ஜான் போஸ்கோ* பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பிற்கு முதல் நிலை மதிப்பெண்களுடன் வெற்றிகரமாகப் பயணம் செய்வதுடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் . இவர் சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் மற்றும் ஜி5 நிறுவனம் தயாரிக்கும் இணையத்தொடர்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணி புரிந்த *பிஜு V டான் போஸ்கோவின்* மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத் தொகுப்பாளரின் மகன் நடிப்பிலும் படிப்பிலும் கவனம் செலுத்தி வெற்றிப் பாதையில் செல்வதை இயக்குநர்கள்.. இயக்குனர் பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எஸ் .ஆர். பிரபாகரன், யூகி சேது, இசைக் கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி, ஸ்ரீகாந்த் தேவா, வடிவேல் முருகன், ஜாக்குவார் தங்கம், போன்ற திரைப் பிரபலங்கள் பாராட்டி வாழ்த்தி இருக்கிறார்கள்.
Read More“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரைலோக்கல் குத்துப்பாணியில் முழுக்க முழுக்க உற்சாகத்தைக் கொட்டுகிறது. பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்சியமைப்பும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும்…
Read More