ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே படப்பிடிப்பு தளம் முழுக்க பிரமாண்டம் நிறைந்திருக்கிறது. இந்த படம் அதன் தனித்துவமான தலைப்பினாலும் மற்றும் அழகான நாயகன் ஹரீஷ் கல்யாண் நடிப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை இப்போதே ஏற்படுத்தியுள்ளது. மிகச்சரியான ஒரு முன் திட்டமிடலுடன் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கருவை அடிப்படையாக கொண்டு மிக பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படம் பிடித்து வருகிறார்கள். இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, “தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம். இந்த படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர், அதன் அடிப்படையில் தான் வாழ்க்கையில் எல்லா…
Read Moreஅரவிந்த்சாமி சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது!
ஒரு படத்தின் பூஜை நிகழ்வே பெரிய உற்சாகத்தைத் தந்தால் அந்தப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல கொண்டாட்டத்தை தரும் படமாகத்தான் அமையும். ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்குரிய படமாக பூஜை அன்றே உணரப்பட்டுள்ள படம் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடைக்டிவ் திரில்லர் படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. பூஜையில் படத்தின் ஹீரோ அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் P.ஜெயக்குமார், தயாரிப்பாளர் V.மதியழகன்,இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் படத்தின் பூஜையில் கலந்துகொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ஹன்சிகா நடிக்கும் ‘மகா’ படத்தின் இயக்குநர் U.R ஜமீல், இயக்குநர் ப்ரவின் காந்த், தயாரிப்பாளர்கள் ஸ்டுடியோ கிரீன்…
Read Moreஃபானி புயலை சிறப்பாக இந்தியா எதிர்கொண்டுள்ளது – ஐ.நா. பாராட்டு !
ஃபானி புயலை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. சபை பாராட்டு தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் நேற்று பிற்பகல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 200 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு புவனேஸ்வர் விமான நிலையமும் மூடப்பட்டது. மேலும் இன்று ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு புயல் கரையைக் கடந்த பின்னர் சூறாவளிக் காற்றும் பேய்மழையும் பெய்யத் தொடங்கியது. பஸ்கள் போன்ற கனரக வாகனங்களையே தூக்கி வீசும் வீடியோக் காட்சிகள் வெளியாகின. மேலும் கட்டிடங்கள் பல இடங்களில் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தும் மிகப்பெரிய சேதாரத்தை உருவாக்கியுள்ளன. இந்த புயலுக்கு இதுவரை 8…
Read Moreஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ‘ எனக்கு பெருமைக்குரிய படம் – நடிகர் தினேஷ்.
“அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் முக்கியமானவை “குக்கூ”, “விசாரணை” ஆகிய படங்கள் முக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குக்கூ மற்றும் விசாரணை படங்களைப் போல சவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் “திருடன் போலீஸ்”, ” அண்ணனுக்கு ஜே” என பக்காவான எண்டெர்டெயினிங் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.அந்த வரிசையில் தற்பொழுது இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. “குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும்…
Read Moreமே 5 தமிழாற்றுப்படை வரிசையில் பெரியார் கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்!
தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர் – அவ்வையார் – கபிலர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – செயங்கொண்டார் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் – வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – கால்டுவெல் – பாரதியார் – பாரதிதாசன் – அண்ணா – கலைஞர் – மறைமலையடிகள் – புதுமைப்பித்தன் – கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் – ஜெயகாந்தன் – அப்துல் ரகுமான் என்று 23 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். தமிழாற்றுப்படையின் நிறைவுக்கட்டுரையாக தந்தை பெரியாரை ஆய்வு செய்து திருச்சியில் அரங்கேற்றவிருக்கிறார். நாளை மே 5 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி, கலைஞர் அறிவாலயத்தில் விழா…
Read Morek 13 திரை விமர்சனம்!
ஒரு அபார்ட்மென்ட்-ல் உடல் கட்டப்பட்டு இருக்கிறார் அருள்நிதி. அவருக்குப் பின்னால் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம்? இப்படியான சூழலில் இருந்து அருள்நிதி எப்படித் தப்பித்தார் என்பதே படத்தின் திரில்லர் கதை. வெற்றிபெற்ற, பெறும் கலைகளின் ஆகப்பெரும் பலமே எளிமை தான். எளிமை இல்லாத கலை எளிய மனிதர்களை ஈர்ப்பதே இல்லை. அந்த வகையில் பெரும் குழப்பமான திரைக்கதையை K13-ல் கூடுமான வரையில் எளிமைப்படுத்தி தந்திருக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். எந்தவொரு பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத படம் தான். கொஞ்சமேனும் ஒரு திரில்லிங்கான அனுபவத்தைத் தருவதால் படத்தோடு ஒன்ற முடிகிறது. மெளனகுருவையும் இரவுக்கு ஆயிரம் கண்களையும் இணைத்து தன் நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் அருள்நிதி. கதாநாயகிக்கு அடிச்சி அந்தர் பன்ற அளவிற்கான கேரக்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். குற்றவுணர்ச்சியோடு மல்லுக்கட்டும் காட்சிகளில் ஹீரோயினோடு முட்டி…
Read Moreதேவராட்டம்- விமர்சனம்
மறுபடியும் முத்தையாவிடம் இருந்து வந்திருக்கும் ஒரு சாதிப்படம் தான் தேவராட்டம். முதலில் இவரிடம் இருந்து மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை மீட்டெடுக்க வேண்டும். வெட்டுவது, குத்துவது, குடிப்பது தவிர அங்குள்ளவர்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா? ஏன் எல்லாப்படங்களிலும் இப்படியே சித்தரிக்க வேண்டும். நிறைய விமர்சனங்களைப் பார்த்தால் இப்படத்தில் சாதி நெடி இல்லை என்று சொல்லி இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் படம் நெடுக சாதிய உள்குத்து இருக்கிறது. உதாரணத்திற்கு படத்தில் கெளதம் கார்த்தி அக்கா மகளின் தோழி ஒருவர் பாலியல் வன் புணர்வு செய்யப்படுவார். அந்தப்பெண்ணின் தாய் தகப்பன் போலீஸ் வரை சென்று நீதி கிடைக்காததால் கெளதம் கார்த்தியிடம் வந்து உதவி கேட்பார்கள். அவர்கள் கெளதம் கார்த்திக்கை அய்யா அய்யா என்றே அழைப்பார்கள். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் பையனும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது போன்ற குறியீடுகளை அந்தப்பையனின்…
Read MoreNGK – டிரைலர்!
தயாரிப்பாளர் சங்கத்தைக் அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து விஷால் முறையீடு..!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினை கலைத்துவிட்டு அதன் நிர்வாகியாக பதிவாளர் ஆர்.சேகரை நியமித்ததை எதிர்த்து, நீக்கப்பட்ட தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகர் விஷால் தலைமையிலான குழுவினர் கடந்த முறை நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தனர். இவர்கள் பொறுப்புக்கு வந்தததில் இருந்தே விஷால் குழுவினர் மீது பல்வேறு புகார்கள் பகிரங்கமாச் சொல்லப்பட்டு வந்தன. சங்கத்திற்குத் தேவையில்லாமல் வேறொரு அலுவலகம் அமைத்தது. சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து 7 கோடி ரூபாயை பொதுக் குழுவின் அனுமதியில்லாமல் எடுத்தது.. சங்க உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே ஓய்வூதியத்தையும், தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கியது.. சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.. சங்கத்தில் கொடுக்கும் புகார்களுக்கு பதிலே அளிக்காமல் இருந்தது.…
Read Moreஹரீஷ் கல்யாண் ஜோடியான ரெபா மோனிகா ஜான்!
நவநாகரீக தோற்றமும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அம்சம். ரெபா மோனிகா ஜான் இந்த இரு அம்சங்களிலும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக நடிக்கிறார். நிவின் பாலியின் ஜாக்கோபிண்டே ஸ்வர்க்கராஜ்ஜியம் படத்திற்கு பிறகு அவரது புகழ் கேரளா தாண்டியும் பரவலாகி இருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் கணிசமான படங்களில் நடித்து வரும் ரெபா, தற்போது ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ரியா சக்ரவர்த்தியை சமீபத்தில் அறிவித்தது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. தயாரிப்பாளர் மலையாளத்தில் நான் நடித்த படங்களை பற்றி அறிந்திருக்கிறார். அதனால் இந்த…
Read More