23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்

  தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேஷன் சார்பில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது. இந்த திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான தமிழ் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 திரைப்படங்கள் தேர்வாகியிருந்தது. விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட விழாவின் இறுதி நாளில் நடைப்பெற்றது. ராமின் இயக்கத்தில் வெளிவந்த ‘பறந்து போ’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வுக்குழுவினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. விழாவில் இயக்குநர் ராம், டிஸ்னி + ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் திரு. ப்ரதீப் மில்ராய் மற்றும் ஜி கே எஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் திரு. கருப்புசாமி அவர்களுடன் விருதை பெற்றுக்கொண்டார்.

Read More

துல்கர் சல்மானின்  “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி !!

துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.  படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை –…

Read More

யார் தீயசக்தி? பொதுவெளியில் பேச ஒத்தையா வரேன்! நீங்க தயாரா மிஸ்டர் விஜய்!

–மன்சூர் அலிகான் சரமாரியாக கேள்வி!! பாஜக தீயசக்தி. 2014 இல் இருந்து E.V.M. வச்சு பதவியவிட்டு இறங்காம, பாசிச ஆட்சி நடத்துறாங்களே கண்ணுக்கு தெரியலையா விஜய்! இல்ல, எஜமான விசுவாசமா? நீட்’ட யாரு கொண்டு வந்தா? தீய சக்தி பாஜாக இல்லயா விஜய்? 100 நாள் வேலை திட்டத்துல இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்து, நிதியும் ஒதுக்காம களவாணித்தனம் செய்யுற பிஜேபி தீய சக்தி இல்லயா விஜய்? திருப்பரங்குன்றத்துல கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்ட கபளீகரம் பண்ணி ரத்த ஆறு ஓட வைக்க நினைத்த பிஜேபி தீய சக்தி இல்லையா? பாதுகாத்த தி.மு.க அரசு உன் கண்ணுக்கு தீய சக்தியா விஜய்? எல்லாப் பொதுத்துறையையும் வித்து ஏப்பம் விட்டுட்டு, இந்தியாவுக்குன்னு சொந்தமா ஒரு ஏர்லைன்ஸ் கூட இல்லாத நாடா, மக்கள பிச்சை காரங்களா தொங்கவிட்டுட்ட பிஜேபி தீய…

Read More

‘பாட்ஷா ‘- ‘பறந்து போ’- ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025

தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெள்ளித்திரை -சின்னத்திரை- டிஜிட்டல் திரை- ஆகிய திரையுலகில் வெளியான தரமிக்க படைப்புகளையும் , கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆட் ஃபிலிம் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் – தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் ஈஸ்வர் மற்றும் ரோகிணி சினிமாஸ் ஆகியோர் இணைந்து சாதனை படைத்த வெற்றியாளர்களுக்கு ‘ 7 ஸ்டார் அவார்ட்ஸ் 2025 ‘ எனும் விருதினை வழங்கி கௌரவிக்க தீர்மானித்தனர். இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கலை விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் – சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட வழக்கமான விருதுடன் ரீ ரிலிஸ் அவார்ட்- பெஸ்ட் ஸ்டோரிடெல்லர் அவார்ட் – பெஸ்ட் ட்ரெண்ட் செட்டர் தியேட்டர்…

Read More

ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா – பத்திரிகையாளர் சந்திப்பு!

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் டூரிங் டாக்கீஸ். தமிழ் திரைப்பட வரலாற்றை டிஜிட்டல் ஆவணமாகப் பாதுகாப்பது, அதே நேரத்தில் வதந்தி மற்றும் சர்ச்சைகளைத் தவிர்த்து, சினிமாவைப் பற்றிய ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் ஆய்வுத் தன்மையுடைய உரையாடல்களை வழங்குவது இந்த சேனலின் பிரதான நோக்கமாகும். இந்த சேனலில் பல தசாப்தங்களாக தமிழ் திரைப்படத் துறையில் நேரடியாகச் செயல்பட்ட அனுபவத்தின் மூலம், திரு. சித்ரா லட்சுமணன் அவர்கள் உண்மைத்தன்மை கொண்ட தகவல்களையும் ஆழமான பார்வைகளையும் பகிர்ந்து வருகிறார். மற்ற எங்கும் பதிவு செய்யப்படாத பல அரிய நினைவுகள், அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் இந்த சேனலின் மூலம் ஆவணப்படுத்தப்படுகின்றன. பரபரப்பையும் ஊகங்களையும் தவிர்த்து, சினிமாவின் கலை, பண்பாடு,…

Read More

ஹாட் ஸ்பாட் 2much – முதல் பாகத்தை விட எதிர்பாராத மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட ஃபேமிலி என்டர்டெய்னர்

நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை யூ. முத்தையன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகம்…

Read More

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி திரையரங்கில் தான் ஒரு குழந்தையாக மாறி குதூகலித்ததாக கூறினார்!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் ராஜமௌலியின் ஃபிலிம் செட் பார்வையிட விருப்பம் தெரிவித்துள்ளார்! சினிமாவின் போக்கை மாற்றிய முக்கிய ஜாம்பவான்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி ஆகிய இருவரின் பார்வையில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பற்றிய கலந்துரையாடல். உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி இருவரும் இணைந்து ‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்து வெளிவரவிருக்கும் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ பற்றி கலந்துரையாடினர். கதைசொல்லலின் நுணுக்கங்கள், தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் மற்றும் பட வெளியீட்டின்போது ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து இரண்டு இயக்குநர்களும் வெளிப்படையாக உரையாடினர். உலகளாவிய அரங்கில் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்யும் இரண்டு அற்புதமான இயக்குநர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இந்த உரையாடல் உதவியது. காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை…

Read More

தென்னிந்தியாவின் இசை தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது!

சென்னை, டிசம்பர் 16, 2025: தென்னிந்தியாவின் இசைத் தலைவராக அசோக் பர்வானியை நியமித்ததாக வார்னர் மியூசிக் இந்தியா இன்று அறிவித்துள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா மற்றும் இசை நிறுவனங்களில் ஒன்றான டிவோவை வார்னர் மியூசிக் இந்தியா பெரும்பான்மையாக கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பிராந்திய பட்டியல் விரிவாக்கத்தை விரைவுபடுத்துதல், படைப்பாளர் மற்றும் பார்ட்னர் உறவுகளை வலுப்படுத்துதல், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுபடுத்துதல் போன்றவற்றில் வார்னர் மியூசிக் இந்தியாவும் டிவோவும் இணைந்து கவனம் செலுத்துகின்றன. இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நாற்பது வருடங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்தை கொண்டுள்ளார் பர்வானி. குறிப்பாக, சோனி மியூசிக் இந்தியாவில் தனது இருபது வருடகால பதவிக்காலத்தில், பிராந்தியத்தில் சோனி மியூசிக் சவுத்…

Read More

யுவன் சங்கர் ராஜா குரலில், ஜஸ்டின் பிரபாகர் இசையில், வெளியிட்ட சிறை படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி” பாடல் வெளியானது

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி” பாடல் சென்னை VIT கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடையேயும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான…

Read More

நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்வு !!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”. வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது , திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குனர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார் எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் திறமைசாலி, இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு தெரியும். இந்தப் படத்திற்கு அது சரியாக பொருந்தியுள்ளது. கூடிய விரைவில் என்னுடைய தயாரிப்பிலும் ஒரு…

Read More