வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமான வாழ்க்கை பதிவு!!

இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், சிவகங்கை அரசியாகவும் இந்தியாவின் முதல் பெண்சுதந்திரப் போராளிகளில் ஒருவராகவும் திகழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமான வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. அவரது கணவர் முத்துவடுகநாத தேவர், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கொல்லப்பட்ட பிறகு, வேலுநாச்சியார் துன்பத்துக்கு அடங்காமல் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்குகிறார். போர்க்கலை, ஆயுதப் பயிற்சி மற்றும் அரசியல் தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற அவர், ஹைதர் அலி மற்றும் டிப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து, பெண்களால் உருவான சக்திவாய்ந்த படையை உருவாக்குகிறார். குயிலி என்ற வீரமங்கை மேற்கொண்ட தியாகச் செயல் மூலம் சிவகங்கையை மீட்டெடுக்கும் வரலாற்றுச் சம்பவம் திரைப்படத்தின் முக்கிய அம்சமாகும். இந்தக் கதை, தைரியம், தியாகம், தலைமைத் திறன் மற்றும் பெண்சாதிகானத்தின் அடையாளமாக வேலுநாச்சியாரை உயர்த்திக் காட்டுகிறது.

Read More

THALAIVAR173 – இயக்குநர் அறிவிப்பு

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படமான ‘#THALAIVAR173’ படத்தினை இயக்கும் இயக்குநரை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிக்கும், இந்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் தயாரிப்பு பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். #THALAIVAR173 திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று பிரம்மாண்டமான வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Read More

2005-ஆம் ஆண்டின் காதல் கதை “மாயபிம்பம்” – ஜனவரி 23 அன்று திரைக்கு வருகிறது !!

“மாயபிம்பம்” 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சிறப்பம்சமாக, நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர். 2005-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னியமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும்,…

Read More

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்” !!

RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன், ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். அம்மா எனும் உறவை கொண்டாடும் சமூகம், அம்மாவின் பாசத்தை, தியாகத்தை போற்றும் சமூகம் அப்பாவை பற்றிப் பேசுவதே இல்லை. அப்பாவின் பாசம், பெருமை, வலிகள், எதுவும் எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும்…

Read More

போதிய திரையரங்கங்கள் கிடைக்காததால் சல்லியர்கள் படம் ஓடிடியில் வெளியாகிறது

CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்ஷனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் சத்யாதேவி நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து, கிட்டு பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு சேது கருணாஸ், அவரது மகன் நடிகர் கென் கருணாஸ் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மூலமாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். அதேசமயம் இப்படம் ஜனவரி முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திரையரங்குகளில் இப்படம் வெளியாக முடியாத…

Read More

திரௌபதி 2’ திரைப்படத்தில் நடிகர் சிராக் ஜானி வில்லனாக நடித்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது!

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை பல மொழிகளில் திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) U/A சான்றிதழைப் பெற்றுள்ளது ‘திரெளபதி2’ திரைப்படம். ரிச்சர்ட் ரிஷியின் கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அற்புதமான பாடல்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று வலுவான வில்லன் கதாபாத்திரங்களில்…

Read More

மார்க் – திரைவிமர்சனம்

  முதலமைச்சர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். கட்சித் தலைமை அனுபவம் ஆற்றல் வாய்ந்த சீனியர் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க, இறந்து போன முதலமைச்சரின் மகனோ, ‘நாளை நானே முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும்’ என்கிறார், அதிரடி பிளஸ் அடாவடியாக. எதிர்த்து கேட்பவர்களின் வாயை பணத்தால் அடைக்கிறார். இதே நாளில் 16 சிறுவர்கள் கடத்தப் படுகிறார்கள். அவர்களை மீட்பதற்கு காவல்துறையில் இடைநீக்கம் செய்யப்பட்ட சுதீப் போராடுகிறார். அவரிடம் முதலமைச்சரின் கொலைக்கு ஆதாரமான வீடியோ இருக்கும் தகவல் சொல்லப்பட்டு, அதைத் தேடி கண்டுபிடிக்கும் பணியும் தரப்படுகிறது. ஒரு பக்கம் கடத்தப்பட்ட குழந்தைகளையும் மறுபக்கம் முக்கியமான ஆதாரமான வீடியோவையும் தேடி சாகச பயணம் மேற்கொள்கிறார் கிச்சா சுதீப். இந்த இரண்டு சம்பவங்கள் இடையிலான தொடர்பையும் கண்டு பிடிக்கும் கிச்சா, அதில்…

Read More

சல்லியர்கள் – திரை விமர்சனம்

  விடுதலைப் புலிகளின் மருத்துவ அணிக்குத்தான் சல்லியர்கள் என்று பெயர். போர் சமயத்தில் காயம் பட்ட வீரர்களை காப்பாற்றும் மருத்துவர்களின் பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது இந்த சல்லியர்கள். இந்தப் போரில் குண்டடி பட்டு உயிருக்கு போராடும் விடுதலை புலிகளை மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்றினர் என்பது தான் மனிதநேயத்தின் மகத்துவம் சொல்லும் வரலாறு. இப்படி உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது ஆளும் அரசின் அதிகாரப்பார்வை விழுகிறது. அவர்களை அழிக்க முயல்கிறது.அந்தத் தாக்குதல்களை மருத்துவமனை சல்லியர்கள் குழு எப்படி எதிர்கொண்டது என்பது கிளைமாக்ஸ். சிங்களப் படையை எதிர்த்து போரிடும் புலிகள் காயமடைந்தால், அவர்களுக்கு மருத்துவம் செய்ய போர்க்களத்தில் பதுங்குகுழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.அப்படி அமைக்கப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி,ஓய்வு ஒழிச்சலின்றி அதே நேரம் கொஞ்சமும் சலிப்பின்றி…

Read More

டியர் ரதி – திரை விமர்சனம்

ஐடியில் வேலை பார்க்கும் நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசி பழகுவதில் ஒருவித தயக்கம். எந்த பெண்ணிடமாவது பேச முயன்றால் அவருக்கே உரிய கூச்ச சுபாவம் குறுக்கே வந்து தடை பண்ணி விடும். இப்படி பயந்த சுபாவம் கொண்டதாலோ என்னவோ அவரை தேடி வந்த 2 காதல் கூட பிரேக் அப்பில் முடிகிறது. இப்படி இரண்டு காதல் கைவிட்டு போனதில் விரக்தியின் எல்லைக்கே போய் விடுகிறார். பெண்களிடம் அவருக்கு இருக்கும் இப்படியான கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக அவரது அலுவலக நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு முதன் முதலாக கூச்ச சுபாவம் விலகி நட்பு பாராட்ட தோன்றுகிறது. அதனால், அந்தப் பெண்ணுடன் நட்பை தொடர விரும்புபவர், அவருடன்…

Read More

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள், இசை, கதை என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இது பற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் பேசுகையில், “ஒரு படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஒவ்வொரு துறையும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அந்தவகையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எங்கள் இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தை திட்டமிட்டு வருகிறோம். பார்வையாளர்களிடம் படம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்கான மார்க்கெட்டிங், புரோமோஷன் பணிகள் போன்றவற்றையும் தெளிவாக…

Read More