நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல்லாயிரம் நொடிகளால் ஆனது. அதில் ஒரு நொடி நம் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றிப் போடும் ஆற்றல்மிக்கதாக இருக்கிறது என்கின்ற கருத்தை வலியுறுத்தும் திரைப்படமே இந்த “ஒரு நொடி” திரைப்படம். தன் கணவர் சேகரனை (எம்.எஸ்.பாஸ்கர்) காணவில்லை என்று ஒரு இரவு நேரத்தில் வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார் சகுந்தலா (ஸ்ரீரஞ்சனி). அதுமட்டுமின்றி தன் கணவருக்கும் கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) –வுக்கும் இடையில் நிலப்பத்திரம் தொடர்பான பிரச்சனை இருப்பதையும் கூறி தனக்கு அவர் மீது சந்தேகம் இருக்கிறது என்று கூறுகிறார். இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன்குமார்) சேகரன் காணாமல் போன வழக்கின், முதல் சந்தேகப் பார்வையை கரிமேடு தியாகுவின் மீது வைத்து அந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். அந்த விசாரணையின் போதே மற்றொரு இளம்பெண் ஒருவரும் மர்மமான முறையில்…
Read MoreCategory: விமர்சனம்
ஃபைண்டர் புராஜக்ட் 1 விமர்சனம்
எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிரபராதிகளை கண்டறிந்து அவர்கள் வழக்கை மீண்டும் துப்பறிந்து உண்மையை வெளிக் கொண்டு வருவதன் மூலமாக அவர்களுக்கு விடுதலைப் பெற்றுத் தர முதுகலை குற்றவியல் பட்டதாரி மாணவர்களால் ஃபைண்டர் என்கின்ற ஒரு அமைப்பு துவங்கப்படுகிறது. அவர்கள் தங்களது முதல் வழக்காக மீனவக் குப்பத்தை சேர்ந்த பீட்டர் என்பவரின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பீட்டர் யார்..? அவர் என்ன குற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்..? அவர் வழக்கின் பின்னணியில் உள்ள சதி என்ன என்பதை பேசுவதே இந்த “ஃபைண்டர் புராஜக்ட் – 1” திரைப்படத்தின் கதை. மீனவ குப்பத்தில் தன் மகளை வருங்காலத்தில் ஆட்சியராக மாற்றிப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையுடன் வாழும் பீட்டர் என்னும் மீனவ கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருக்கிறார். தான் கடன்பட்டதை எண்ணி மீனவக்…
Read Moreவல்லவன் வகுத்ததடா விமர்சனம்
ஐந்து வேறுவேறுவிதமான கதாபாத்திரங்களைக் கொண்டு ஹைபர் லிங்க் திரைக்கதை யுக்தியின் மூலமாக சொல்லப்பட்டிருக்கும் கதை தான் இந்த வல்லவன் வகுத்ததடா திரைப்படம். திருட்டை தொழிலாகக் கொண்ட இரண்டு இளைஞர்கள், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக காதலை பயன்படுத்தி ஏமாற்றும் இளம்பெண், லஞ்சப் பணத்தை கோயிலுக்கான உண்டியலில் செலுத்தச் சொல்லி வசூல் வேட்டை நடத்தும் போலீஸ் அதிகாரி, வட்டிக்கு பணம் கொடுத்து பணத்தை திரும்ப செலுத்தாதவர்களிடம் உடல் உறுப்புகளை உருவிக் கொள்ளும் பைனான்சியர், இவர்களோடு தன் குடும்பத்தையும், மருத்துவமனையில் இருக்கும் அப்பாவின் உயிரையும் காப்பாற்ற போராடும் மற்றொரு இளம்பெண். இந்த ஐவரும் வேறு வேறு சூழ்நிலைகளில் ஒருவரையொருவர் எதிர்கொள்ள அந்த சந்திப்பு அவர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை சிறப்பான திரைக்கதை உத்தியோடு பேசியிருக்கிறது ‘வல்லவன் வகுத்ததடா திரைப்படம். திருடர்களாக நடித்திருக்கும் தேஜ் சரண்ராஜ் மற்றும் ரஜின்…
Read Moreரோமியோ திரை விமர்சனம்
மலேசியாவில் பெரிய தொழிலதிபராக இருக்கும் விஜய் ஆன்டனி தனது சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறார். 35 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். இதற்கிடையே துக்க நிகழ்வு ஒன்றில் உறவுக்கார பெண் மிருணாளினி கண்ணில் பட, அப்போதே காதல் . அதேவேகத்தில் அந்த பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரியாமலலே அவள் பெற்றோரிடம் பேசி திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது. திருமணமான மறுநாளே மிருணாளினி, ‘எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. சினிமாவில் ஹீரோயின் ஆவதுதான் எனது லட்சியம்’ என்று குண்டை தூக்கிப்போட… மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மனைவியை ஹீரோயினாக வைத்து, சொந்தப் படம் தயாரிக்கிறார் விஜய் ஆன்டனி. அதோடு, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்தப் படம் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ். .ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்கும் கதையில் தன்னால் என்ன முடியுமோ…
Read MoreDeAr விமர்சனம்
மேலோட்டமாக படத்தின் ட்ரைலரை மட்டும் வைத்துப் பார்த்தால் குறட்டை தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல் தான் இத்திரைப்படம் என்று தோன்றும். ஆனால் திரைப்படம் அதையும் தாண்டி குடும்பம் என்னும் அமைப்புக்குள் இருக்கும் ஆண்களின் பல்வேறுபட்ட குறைபாடுகளையும் ஓரளவிற்குப் பேசி இருக்கிறது. தீபீகாவான ஐஸ்வர்யா ராஜேஸுக்கு சிறுவயதில் இருந்தே குறட்டை விடும் பிரச்சனை இருந்து வருகிறது. இதை வெளிப்படையாக அவர் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் தெரிவிக்க, அவரின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தன் குறையை மறைத்து, பெண் பார்க்க வந்த அர்ஜூனாகிய ஜி.வியை மணமுடிக்கிறார். முதலிரவன்றே ஐஸ்வர்யாவின் குறட்டைப் பிரச்சனை வெளியே தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளுமே DeAr திரைப்படம். படத்திற்கு மிகப்பெரிய பலமே நடிகர் நடிகைகள் தேர்வு…
Read Moreஆலகாலம் – திரை விமர்சனம்
கிராமத்து ஏழைத்தாயின் ஒரே மகனான நாயகன் ஜெயகிருஷ்ணா சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். படிப்பு முடிந்ததும் தங்களது நிலை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயகிருஷ்ணாவின் தாய் ஈஸ்வரி ராவ். இதற்கிடையே ஜெயகிருஷ்ணாவின் நேர்மையான கேரக்டர் பார்த்து சக மாணவி சாந்தினி காதலாகிறார். சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக் கொள்கிறார். தாயிடம் அப்புறம் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் திருமணமும் செய்கிறார். இதன்பிறகு ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. இதனால், ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை நெகிழ்ச்சி பொங்க சொல்வது தான் இந்த ‘ஆலகாலம்’. நாயகனாக ஜெய கிருஷ்ணமூர்த்தி, கதாபாத்திரமாக மாற ஆரம்பத்தில் தடுமாறினாலும், போகப்போக கதையின் நாயகனாக தன்னை நிலைநிறுத்தி விடுகிறார். குடிக்கு அடிமையான பிறகு இவரது நடிப்பு வேறு…
Read Moreப்ளூ ஸ்டார் – விமர்சனம்
ஒரு விளையாட்டுத் தொடர்பான திரைப்படத்தில் என்னெல்லாம் இருக்க வேண்டும். ஒரு தோல்வி, அந்த தோல்வியால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தேடும் தேடல், விளையாட்டிற்குள் அரசியல், பாகுபாடு, வீரர்களுக்குள் முரண்பாடு, சிறிய சறுக்கல், ஒரு பெரிய போட்டி, அந்தப் போட்டியில் வெற்றி, இவைகளுக்கு நடுவே தேவைப்பட்டால் சிற்சில காமெடிகள், காதல் காட்சிகள் இவைகளெல்லாம் இருக்கும் தானே. “வெண்ணிலா கபடிக் குழு” துவங்கி ‘பிகில்’ வரை விளையாட்டு தொடர்பான எல்லாப் படங்களும் இந்த டெம்ப்ளெட்டில் தான் அமைக்கப்படும். அதில் இருந்து சற்றும் சறுக்காமல் அமைக்கப்பட்டு இருக்கிறது “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் திரைக்கதை. எக்ஸ்டிரா-வாக வர்க்கம் அரசியலுடன் சற்று சாதிய அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது திரைக்கதை. அரக்கோணத்தில் நடக்கும் கதை. அவ்வூரின் காலனிப் பையன்களுக்கும், ஊர்க்காரப் பையன்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் நெடுநாளைய பகை இருக்கிறது. ஒரு சின்ன சீண்டலில் தங்களுக்குள்…
Read Moreசிங்கப்பூர் சலூன் விமர்சனம்
தன் சிறுவயதிலேயே தான் ஒரு ஹேர் ஸ்டைலிஷ்ட் ஆக வேண்டும் என்கின்ற ஆசையை தனக்குள் வைத்துக் கொண்டு வளரும் ஒரு சிறுவன், தன் லட்சியத்தை அடைய எவ்வளவு தடைகளையும் சிக்கல்களையும் கடக்கிறான் என்பதே “சிங்கப்பூர் சலூன்” சிறுவயதில் ஒரு மனிதனின் ஒட்டு மொத்த தோற்றத்தையும் ஒரு சிகை அலங்கார நிபுணர் நினைத்தால் மாற்றி அந்த மனிதனுக்கான அந்தஸ்தத்தை சமூகத்தில் உயர்த்திவிட முடியும் என்பதை கண்கூடாக காணும் சிறுவன், அந்த சிகை அலங்கார நிபுணர் “சாச்சா”வாக வரும் லால் மீதும் அவர் செய்யும் தொழில் மீதும் மிகுந்த நேசம் கொண்டு, அந்தத் தொழிலை கற்றுக் கொள்ள முனைகிறான். அதைக் கற்றுக் கொள்ளும் புள்ளியில் அந்த தொழில் மீது காதல் கொண்டு, படித்த வேலைக்குப் போவதை விட பிடித்த வேலையை செய்வதே மேல் என்று முடிவு செய்கிறான். சிறுபிராயத்தில்…
Read Moreதூக்குதுரை விமர்சனம்
கற்காலத்தின் காதல் கதையையும், கலியுகத்தில் டேமேஜ் ஆகிக் கிடக்கும் பேய் கதையையும் ஒன்றாக சேர்த்து பேக் செய்து டெலிவரி செய்தால் அதுதான் தூக்குதுரையின் கதை. பணக்கார நாயகி, ஏழை நாயகன் காதல், கெளரவக் கொலை, பேயாக வந்து பழி வாங்குவது. இறுதியில் சுபமான முடிவு. இவ்வளவுதான்… இவ்வளவே தான் இந்த தூக்குதுரை. யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், செண்ட்ராயன் , இனியா, மாரிமுத்து, மகேஷ், நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத், தங்கராஜு, சிந்தலப்பட்டி சுகி, ராஜா வெற்றிபிரபு என்று பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் நடிகர் நடிகைகள் பட்டாளத்தில் காமெடி நடிகர்களே அரை டஜன் கணக்கில் இருந்தாலும், படத்தில் காமெடி கிலோ என்ன விலை என்று நம்மை கேட்கிறார்கள். யோகிபாபு படத்தில் இருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. இனியா அப்படியே. எப்பேர்ப்பட்ட நடிகை. இந்தப்…
Read Moreமெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்
கிறிஸ்துமஸ் தினத்தின் முன்னிரவு நேரத்தில் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள் இடையே மெல்லிய புரிதல் ஏற்படுகிறது. அந்தப் புரிதலைத் தொடர்ந்து நடக்கும் சம்பவஙகள் அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் எப்படி தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது, என்பதை த்ரில்லும் மர்மமும் கலந்து பேசியிருக்கும் திரைப்படமே “மெரி கிறிஸ்துமஸ்”. ஆல்பர்ட் என்கின்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவருடைய திரைப்பயண வரலாற்றில் இப்படி ஒரு கதாபாத்திரம் அவர் செய்ததாக நினைவில்லை. புதிரான மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரம். தன் பாக்கெட்டில் எப்பொழுதும் இருக்கும் மோதிரத்தை எடுத்துக் காட்டி, தன் காதலியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் தருணம் அலாதியானது. அதுபோல் இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு சந்தித்த மரியாவாகிய கத்ரீனா கைஃப் பேராபத்தில் சிக்கிக் கொள்ளும் போது, தன்னிலை மறந்து போய் உதவ முன்வந்து, பின்னர் தடுமாறி பின் தங்கும் இடத்தில்…
Read More