மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

சென்னை, மே 13, 2025: ’ஹார்ட் பீட்’ வெப்சீரிஸில் தேஜூ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் பிரேக்அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை யோகலட்சுமி, ’ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப்சீரிஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு தேதியை தற்செயலாக வெளியிட்டுள்ளார். ஜியோஹாட்ஸ்டாரால் நடத்தப்பட்ட ரசிகர்கள் உரையாடலின் போது வெளியீட்டுத் தேதியை யோகலட்சுமி தெரியப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீசன் 2 டீசர் வெளியீட்டைக் கொண்டாடும் விதமாகவும், படக்குழுவினருடனான உரையாடலாகவும் இருக்கும்படியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதில் யோகலட்சுமி வெளியீட்டு தேதியை மே 22 என்று குறிப்பிட்டபோது ரசிகர்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இந்த செய்தி வைரலானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஜியோஹாட்ஸ்டார் வெளியீட்டு தேதியுடன் புதிய டைட்டில் டிராக் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள ’ஹார்ட்பீட்…

Read More

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!

கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஆதித்ய ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர். பாடல்கள் மதன் கார்க்கி, கிருத்திகா நெல்சன், ராகவன்,நைனார் எழுதியுள்ளனர்.கலை மற்றும் உடைகள் நந்தினி முத்தியம். அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் -என் கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். ஜகதா எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இப்படத்தை வெளியிடுகிறது. இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்…

Read More

‘நரி வேட்டை’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் சேரன்.!

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது; தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் பிரமாண்டமான முறையில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் வருகிற மே 23-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ‘சாகித்ய அகாடமி விருது’ பெற்ற அபின் ஜோசப் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அழுத்தமான கதை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான கதைசொல்லலுடன் தரமான நடிப்பை வழங்கும் கலைஞர்களுடன் சிறப்பான அனுபவத்தை வழங்கவுள்ளது. ‘நரிவேட்டை’ திரைப்படத்தில் டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சராமூடு, முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குனர் சேரன் ஆகியோருடன் பிரியம்வதா…

Read More

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் விதமாக உருவாகியுள்ள சீமானின் ‘தர்மயுத்தம்’

‘தப்பாட்டம்’, ‘ஆண்டி இண்டியன்’, ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் “தர்மயுத்தம்” ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார்.. இத்திரைப்படத்தில் செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன், சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில், இயக்குநர்கள் சேரன், சுந்தர்.சி, சீனு ராமசாமி, எச்.வினோத், சசிகுமார், தயாரிப்பாளர்…

Read More

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி…

Read More

லோகேஷ் & லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவது எளிதானது கிடையாது. அதற்கான சரியான திரைக்கதையும் அதை சரியாக படமாக்குவதும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘LCU’ (Lokesh Cinematic Universe) என்ற புதிய சினிமா உலகத்தை உருவாக்கியுள்ளார். அதை சுற்றி சிறு செய்திகள் வந்தால் கூட ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த சினிமாடிக் யுனிவர்ஸில் அடுத்த புதிய என்ட்ரிக்கான நேரம் இது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (MAY 12, 2025) சென்னையில் தொடங்கியது. நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் படக்குழுவினர் இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் மற்ற இரு முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி கதாநாயகர்களும்…

Read More

AR ரஹ்மான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகும் ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது.

சென்னை, மே 12, 2025: பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் பெருமையாக அறிவிக்கிறது — பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து ஒன்றிணைகிறார்கள். இப்படத்தை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மனோஜ் NS இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் அறிவிப்பிலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன்…

Read More

தொடரும் – திரை விமர்சனம்

ஒரு அப்பாவி மனிதனை காலமும் சூழலும் அடப்பாவி ஆக்கிப் பார்க்கிற கதை. மனைவி, மகன், மகள் என அழகான சின்ன குடும்பம் டாக்ஸி டிரைவர் சண்முகத்துக்கு. குடும்பத்தை விட அவர் அதிகமாக நேசிப்பது அவரது காரை.இது எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை மகனும் தோழர்களும் இவருக்கு தெரியாமல் டாக்ஸியை எடுத்துச் சென்று லேசான விபத்து ஏற்படுத்திய போது மகனையே அடிக்கும் அளவிற்கு டாக்ஸி மீது அப்படியொரு பிரியம்சினிமாவில் பைட்டராக இருந்த காலகட்டத்தில் அவரது குருநாதராக இருந்த பாரதிராஜா தான் இந்த காரை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியவர்.கார் மெக்கானிக் செட்டில் இருக்கும் நேரம் பார்த்து குரு இறந்து விட்டார் என்று தகவல் வர,சென்னை போகிறார். திரும்பி வருவதற்குள் ஒர்க்ஷாப்பில் வேலைக்காக விடப்பட்டிருந்த அவரது டாக்ஸி இப்போது போலீஸ் நிலையத்தில் இருக்கிறது. கார் மெக்கானிக் காரில் கஞ்சா கடத்தினான்…

Read More

சைவ உணவு பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! – திருப்பதி பீமாஸ் சைவ உணவகம் சென்னையில் திறப்பு

திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோவிலுக்குப் பிறகு திருப்பதி என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது ‘திருப்பதி பீமாஸ்’ தான். உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் என 1954 ஆம் ஆண்டு முதல், சுமார் 70 ஆண்டுகளை கடந்து இத்தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் திருப்பதி பீமாஸ் தற்போது தமிழகத்தில் தனது முதல் கிளையை சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர்ஸ் பிளாசா மாலில் திறந்துள்ளது. இன்று (மே 11) நடைபெற்ற திருப்பதி பீமாஸ் சைவ உணவகத்தின் திறப்பு விழாவில், பிரபல திரைப்பட நடிகை தேவயானி மற்றும் இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள். இவர்களுடன் தொழில் முனைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய திருப்பதி பீமாஸ் உணவகத்தின்…

Read More

நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் ‘Dude’ படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு தற்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்தியன் படமான ‘Dude’-ல் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இருந்து பிரதீப் ரங்கநாதனின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து இன்று படக்குழு மமிதாவின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘பிரேமலு’ படத்தில் தனது எனர்ஜிடிக்கான கதாபாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்த மமிதா இந்த போஸ்டரில் பிரதீப்புக்கு சிறந்த ஜோடியாக இருக்கிறார். டிரெண்டிங் உடையில் பிரதீப்புடன் இருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர்…

Read More