நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராமாயணா’ படக்குழு ராமராக ரன்பீரின் சிறப்பு BTS காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்திய புராணங்களில் மிகவும் போற்றப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றான ராமர் கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட தயாரிப்பையும், தன்னை அந்தக் கதாபாத்திரமாக மாற்றிக்கொண்ட விதத்தையும் பார்வையாளர்கள் நெருக்கமாகக் காணும் வாய்ப்பை இந்த BTS வழங்குகிறது. இந்த BTS வீடியோவில், ‘ராமாயணா’ போன்ற திரைப்படத்திற்கு சரியான நடிகரைத் தேர்வு செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை இயக்குநர் நிதேஷ் திவாரி பேசுகிறார். இந்த இதிகாசத்தின் மீது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆழமான நம்பிக்கையும் உணர்வுப்பூர்வமான தொடர்பும் இருப்பதால், கதாபாத்திரத்திற்கான நடிகரைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரன்பீர், ராமருக்கு உரிய மரியாதையுடன், தான் ஏற்றிருக்கும் இந்தப் பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வுடன் நடித்ததாகவும் அவர் பகிர்ந்து…
Read Moreலெனின் பாண்டியன் – விமர்சனம்..
கதை… கங்கை அம்மன் ரோஜா தம்பதியினர் இவர்களுக்கு விவசாயம் தொழில்.. அந்தப் பகுதியில் நடக்கும் மணல் கொள்ளைக்கு எதிராக போராடுகிறார் விவசாயி கங்கை அமரன்.. ஒரு கட்டத்தில் இவருக்கு ஆதரவாக அரசு அதிகாரியும் செயல்பட அவர் கொல்லப்படுகிறார்.. இந்த விவகாரம் காவல்துறை நீதித்துறைக்கு செல்ல.. விவசாயி கங்கை அமரனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது அதன்படி தர்ஷன் விவசாயி பாதுகாக்க அவருடன் தங்கி இருக்கிறார்.. ஆனாலும் மீண்டும் மணல் கொள்ளையர்கள் கங்கை அமரனை கொல்லத் திட்டமிடுகின்றனர்.. ஏற்கனவே குடும்ப சூழ்நிலையால் பிரச்சினை சிக்கி தவிக்கும் தர்ஷனை மணல் கொள்ளையர்கள் விலை கொடுத்து வாங்க நினைக்கின்றனர். இறுதியில் என்ன ஆனது தர்ஷன்? விவசாயியை காப்பாற்றினாரா? என்பதுதான் மீதி திரைக்கதை.. நடிகர்கள்… சிவாஜி கணேசன் மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் இந்த படத்தின் கதாநாயகன்.. எதார்த்த போலீசாக தன் பணியை கம்பீரமாக…
Read Moreடோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தில் நடிக்க இது தான் காரணம் : பஹத் பாசில்!!
அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி (sakthi film factory) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா, ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய…
Read More‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 3rd Look மற்றும் டீசர் வெளியீட்டு விழா!
மகிழ் Productions சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. முன்னதாக இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பார்வையை (Second Look) புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, கோவையில் உள்ள பிரபல ரத்தினம் கல்லூரியில் இப்படத்தின் பிரம்மாண்ட ப்ரொமோஷன் விழா நடைபெற்றது. சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதன் மத்தியில் 3rd look போஸ்டரை வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் படக்குழுவைச் சேர்ந்த நடிகர் தக்க்ஷன் விஜய் மற்றும் வாழை ஜானகி அம்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர்.…
Read More25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!
அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரசிகர்களை சந்தித்த திரு. சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார். திரு. சூர்யா அவர்களின் இந்த எளிமையான அணுகுமுறையும், ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்ட விதமும் அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. நன்றி
Read Moreடோரதி – விமர்சனம்..
கதை… மதுரை கதைகளம்… 1990 காலகட்டம்.. அப்பா முத்துக்குமார்.. மூத்த அண்ணன் சௌந்தரராஜா… அவரது தம்பி சனந்த்.. சிறுவயதிலேயே அம்மா மற்றும் அக்காவை இழந்தவர்.. சொல்ல முடியாத வேதனையில் இருக்கும் சனந்த்க்கு ஆறுதலாக நண்பனாக வருகிறார் ரிஷிகாந்த்.. ஒரு கட்டத்தில் நண்பர்கள் பிரிந்து விடுகின்றனர்.. அப்போது தான் பெற்ற மகனையே கொலை செய்ய சொல்லி ரிஷிகாந்துக்கு தந்தை சொல்கிறார்.. இதனால் அதிர்ச்சி அடையும் ரிஷி என்ன செய்தார்? நண்பனை கொலை செய்தாரா என்பதெல்லாம் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை.. நடிகர்கள்.. ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.. இருவரும் நடிப்பில் போட்டி போட்டு செய்துள்ளனர்.. இதில் ஒரு படி மேலாக சனத் வித்தியாசமான தோற்றத்தில் நம்மை நடிப்பால் மெய்சிலிர்க்க வைக்கிறார்.. டோரதி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்.. மலையாள பெண் குட்டி ஆக…
Read Moreநயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன் வரும் சிக்கல்களைப் பேசுகிறது
இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் பாராட்டப்பட்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு வரும் தமிழ் ZEE5, தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள Hi திரைப்படத்தைத் திரையிடத் தயாராகியுள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட வகையில், நவீன உறவுகள் குறித்த புதிய பார்வையை வழங்கும் அதே நேரத்தில், இதமான உணர்வுகளைத் தரும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. நயன்தாரா மற்றும் கவின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள Hi, நவீன கால உறவுகளை இதமான மற்றும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் அணுகுகிறது. எதிர்பாராத வகையில் இணையும் இந்த இரு திறமையான நடிகர்களின் திரை இணைவு, கதைக்கு தனித்துவமான ஈர்ப்பைச் சேர்க்கிறது. நயன்தாரா, வலிமையான, சுயாதீனமான பெண்ணாகவும், தனது கொள்கைகளில் உறுதியுடன்…
Read Moreபிரம்மாண்டத்தின் உச்சத்தில் யஷ் – ராவணனாக கம்பீரம், பார்வையில் அனல்!
இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ராமாயணம் திரைப்படத்தின் அடுத்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராவணனாக நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்கக் கிரீடம், முத்து மாலைகள், பிரம்மாண்டமான தங்க ஆபரணங்கள் என ராஜ கம்பீரத்தில் காட்சியளிக்கும் யஷ், தனது தீவிரமான பார்வையால் போஸ்டரையே ஆக்கிரமிக்கிறார். டிரெய்லர் வெளியானது முதலே யஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. வலிமை, அறிவு, அதிகாரம் மற்றும் கம்பீரம் என ராவணனின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் யஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ராமாயணம் திரைப்படம் உருவாகி வரும் பிரம்மாண்டத்தின் ஒரு சிறு முன்னோட்டமாகவே…
Read More“எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று!” – சஞ்சய் லீலா பன்சாலியுடன் முதல் முறையாக இணைந்த விக்கி கௌஷல், ‘Love & War’ படத்தின் இரண்டாவது போஸ்டரில் அசத்தல்!
சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இந்திய சினிமாவில் புதியதொரு மைல்கல்லை உருவாக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான சஞ்சய் லீலா பன்சாலி படைப்பு, ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக்…
Read Moreநானி நடித்த தி பாரடைஸ் விமர்சனம்
கதை… இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டாலும் சவாரி என்ற இனத்தினருக்கு இந்தியர்கள் என்று அங்கீகாரம் கிடைக்கவில்லை.. ஒரு தனிப்பட்ட முதலாளித்துவத்தால் இவர்களுக்கான அங்கீகாரம் தடைப்படுகிறது.. இந்த சவாரி இனத்தில் பிறந்த நாயகன் நானி தன் இன மக்களுக்காக போராடி அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தாரா என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… நானி பிறக்கும்போதே இரட்டையராக தன் தங்கையுடன் பிறக்கிறார்.. ஆனால் தங்கை இறந்து விடுகிறார்.. எனவே அம்மா இவருக்கு பெண் போல நீண்ட தலை முடி வளர்த்து சடை போட்டு விடுகிறார்.. அன்று முதல் இவரை எல்லோரும் சடையன் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.. நானி ரசிகர்களுக்காகவே பல ஆக்சன் மற்றும் பாடல் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.. ஆக்சன் காட்சி முடிந்து பாடல் வருகிறது… பாடல் முடிந்து ஆக்சன் வருகிறது.. இதற்கு இடையில் சில வசனங்கள் இடம் பெறுகிறது… படம்…
Read More
