தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான சேரன், ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘யானைமரம்’ படத்தின் டிரைலரை பார்த்து, பாராட்டியது மட்டுமல்லாமல், ‘யானைமரம்’ படத்தின் போஸ்டரையும் வெளியிட்டார். உரிமைக்காக போராடும் சிறுவனின் முயற்சி கண்கலங்க வைக்கும். பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம் ‘யானை மரம்’. படத்தின் இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் ஆர்.சசிகலா இருவரையும் பாராட்டினார் சேரன். மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், ஜெயிலர் சீனு, ராணி, மஞ்சு, லீலா ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இசை அரவிந்த் சித்தார்தா, கலை ஆர்.அபிராம், படத்தொகுப்பு கோபால், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சசிகலா தயாரித்துள்ளார். விரைவில் திரைக்கு வருகிறது ‘யானை மரம்’.
Read Moreஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்! – ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தும் பனோரமா ஸ்டுடியோஸ்!
ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா ஸ்டுடியோஸ் ( Panorama Studios ) தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ ( KOODU ) – விரைவில் திரைக்கு வருகிறது! குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையில் இயங்கி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் சார்பில் M. கணேஷ் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் சூனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோர் இணைந்து தனது புதிய தமிழ்த் திரைப்படமான ‘கூடு’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு வியப்பூட்டும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், மனிதநேயம், கருணை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட நெகிழ்ச்சியான கதையைச் சொல்ல வருகிறது. அறிமுக இயக்குநர்…
Read Moreடைட்டானிக் – விமர்சனம்…
கதை… கலையரசன் – காளி வெங்கட் – ராகவ் விஜய் மூவரும் ஒரே ரயிலில் பயணிக்கிறார்கள்.. இவர்கள் மூவருக்கும் குடும்பத்தில் பிரச்சனை.. ஒருவர் திருமணத்திற்காக பயணிக்கிறார்.. ஒருவர் பிரிந்து சென்ற மனைவியின் வீட்டுக்கு செல்கிறார் ஒருவர் விலகிச் சென்ற காதலியை தேடிச் செல்கிறார்.. ஏதோ ஒரு காரணத்தினால் இவர்கள் மூவரின் காதல் கதையும் பிரச்சனையில் இருக்கிறது.. டைட்டானிக் கப்பல் போல காதல் மூழ்கி கிடக்கிறது.. அதன் பிறகு என்ன ஆனது.? இவர்கள் காதலில் வென்றார்களா என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… ஒரே ரயிலில் பயணித்து காதல் கதையால் நண்பர்கள் ஆகிறார்கள் கலையரசன் – காளி வெங்கட் – ராகவ் விஜய்.. ஒவ்வொருவரும் அவரவர் காதல் கதையில் அதை சொல்லும் விதத்தில் நடிப்பில் கவர்கிறார்கள்.. தனது அப்பாவித்தனமான நடிப்பில் கவர்கிறார் கயல் ஆனந்தி.. பள்ளி கல்லூரி என இரண்டிலும்…
Read Moreகோந்தல் – விமர்சனம்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் திருமண சடங்குகளில் ஒன்றாகும் இந்த கோந்தல்.. கதை… ஹீரோயின் இஷிதா தேஷ்முக்.. இவருக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் சடங்குகள் ஏற்பாடுகள் நடக்கிறது.. இந்த சூழ்நிலையில் இவரின் மேல் ஆசைப்படுகிறார் ஊர் தலைவரின் மகன்.. இவளை அடைய நினைக்கிறார்.. அதே சமயத்தில் விருப்பமில்லாத திருமணத்தை விட்டு தன் காதலருடன் ஓடத் தயாராக நிற்கிறார் இஷிதா ள்.. இந்த சூழ்நிலையில் எதையும் அறியாத ஒரு அப்பாவி இளைஞன் இஷிதாவுக்கு தாலி கட்ட காத்திருக்கிறார்.. இப்படியான சூழ்நிலையில் அடுத்தது என்ன நடந்தது.? நாயகி நிலை என்ன என்பதை சுவாரசியமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் தேவகர்.. நடிகர்கள்… கதை நாயகனாக யோகேஷ் சோஹோனி.. உதவி செய்யும் மனப்பான்மை இரக்க குணம் அப்பாவி நடிப்பு என கவர்ந்து விடுகிறார்.. தன் மனைவி மீது சிலர் ஆசைப்படுகிறார்கள் என்பதை…
Read Moreபீப்பிள்’ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் இணைந்து காலத்தால் அழியாத இசைக் காவியமான ‘சங்கராபரணம்’ திரைப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர்
இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம், அதிநவீன தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இம்மாதம் மீண்டும் வெளியாகிறது. பீப்பிள்’ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மேம்படுத்தப்பட்ட 4கே அல்ட்ரா ஹெச்.டி காட்சித் தரம் மற்றும் 7.1 சரவுண்ட் ஒலி அமைப்புடன் புதுப்பொலிவுடன் வெளியிடுகின்றனர். இத்திரைப்படத்தின் புதிய டிஜிட்டல் பதிப்பை ஸ்ரீலால் தேவராஜ் உருவாக்கியுள்ளார். கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’, இந்தியப் பாரம்பரிய இசையின் மேன்மையையும், ஒரு கலைஞனின் வாழ்வையும், மனித உறவுகளின் ஆழத்தையும் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்த திரைப்படமாகும். ஜே.வி. சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜ்யலட்சுமி, துளசி, சந்திரமோகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல தசாப்தங்களைக் கடந்தும் இசை ரசிகர்களின் மனங்களில் நீங்கா…
Read Moreகண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வித்தியாசமான உருவாக்கத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கண்ணன் ரவி குழுமம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருவதுடன், புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். டைட்டில் போஸ்டரில், ரத்தம் தேய்ந்த வேல்கம்பு, அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள் மற்றும்…
Read Moreஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye)!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ (King) திரைப்படத்தின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்தப் பாடலின் ஹுக் ஸ்டெப்பை ரசிகர்கள் பலரும் ரீல்ஸ்களாக உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் கவனம் ஈர்த்து வருகிறது. ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள “து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல், இருவரின் அசத்தலான கெமிஸ்ட்ரி, மனதை வருடும் இசை மற்றும் கண்கவர் காட்சிகள் ஆகியவற்றால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இருவரும் மீண்டும்…
Read Moreராஜ் என்பவரை கரம் பிடித்த ப்ரியா!
அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி(இன்று), எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில், எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. இத்தனை ஆண்டுகளாக என் பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் விரும்புகிறோம். உங்கள் அன்பு என்றும் எங்களுடன் இருக்கட்டும். அன்புடன், ப்ரியா-ராஜ்
Read Moreகோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!
Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் கவனம் பெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘அறிவு’ பெற்றுள்ளது. சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் கூடிய கருத்துகளை விறுவிறுப்பான சினிமா…
Read Moreபிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புதிய பயணம்!
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் பயணித்து வரும் இளம் நடிகர் அஜித் விக்னேஷ், தற்போது வெளியாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அவர், கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறார். குறிப்பாக, திரையில் அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. மதுரையைச் சேர்ந்த அஜித் விக்னேஷுக்கு கல்லூரிப் பருவத்தில் இருந்தே சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர், தனது சினிமா கனவை நனவாக்குவதற்காகத் திரைத்துறையில் பயணிக்கத் தொடங்கினார். நடிப்புடன் சிலம்பம், பாக்ஸிங் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளிலும் பயிற்சி பெற்றதுடன், நடிப்புப் பயிற்சியையும்…
Read More