கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்”  ஜனவரி 30 திரையில் !!

Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர். படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த கொண்டாட்டம் படக்குழுவை பெரிதும் உற்சாகப்படுத்தியது. பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர்…

Read More

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஜனவரி 16ஆம் தேதி ஜப்பானில் படம் வெளியாகவுள்ள நிலையில், குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜூன் தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார். டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைலைன் இடம்பெற்ற புகைப்படத்தை தனது…

Read More

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,* எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன்,  என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியைப் பார்த்த போது…

Read More

கவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொங்கல் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞரும் இயக்குனருமான சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள நிலத்தவள் என்னும் கவிதை நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. நூலை கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே‌.ச. வெளியிட, கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. பெற்றுக் கொண்டார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டோம்னிக், அலுவலக சங்கத் தலைவர் திரு இளங்கோ சேவியர் ஜோதி, முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் ஜான் கென்னடி, மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Read More

’திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த…

Read More

எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு & அறிமுக விழா

‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் முருகன், ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற  தொடர்.. தற்போது’ சங்காரம்’ எனும் நூலாக தயாராகி இருக்கிறது.‌ வன்முறையும், பேரன்பும் கொண்ட கதை மாந்தர்களால் நிரம்பிய இந்த நாவலின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் தங்களது…

Read More

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இணை தயாரிப்பாளர் தீபக் ரவி தயாரித்திருக்கிறார்கள். ஜனவரி 15 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு ஜாக்கி, நடிகர்கள்…

Read More

தி ராஜாசாப்- விமர்சனம்

ஒரு ஆக்சன் திரில்லரில் ஹாரரைச் சேர்த்து படமாக்கியுள்ளார் இயக்குநர் மாருதி. படத்தின் கதைப்படி ஹீரோ பிரபாஸின் தாத்தாவான சஞ்சய் தத் காணாமல் போகிறார். அதனால் அவரின் பாட்டி மிகுந்த சோர்விலிருக்கிறார். பெரும் சமஸ்தானத்தின் வாரிசாக வாழ்ந்த தனது பாட்டியின் சோகத்தைப் போக்க பிரபாஸ் தாத்தாவைத் தேடிச் செல்கிறார். செல்லும் இடத்தில் நிதி அகர்வாலைச் சந்திக்கிறார்..அவர் மேல் காதல் கொள்கிறார். அடுத்த ட்விஸ்டாக தாத்தா சஞ்சய் தத் நல்லவர் இல்லை என்றும் அவர் பேயாக இருந்து தொல்லைகள் கொடுப்பதாகவும் அறிகிறார் பிரபாஸ். அதன்பின் தாத்தா பேரன் சண்டை துவங்குகிறது. தாத்தாவான சஞ்சய் தத் என்னென்ன பிரச்சனைகள் செய்தார் என்பதும், அதை பிரபாஸ் எப்படிச் சமாளித்தார் என்பதுமே படத்தின் கதை ஆஜானுபாகுவான தோற்றத்தோடு வழக்கம் போல் வசீகரிக்கிறார் பிரபாஸ். சண்டைக்காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார். மூன்று ஹீரோயின்களோடு ஆடும் நடனத்திலும்…

Read More

பராசக்தி- விமர்சனம்!

1964 கால கட்டத்தில் உச்சத்திலிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் மையக்கதை என்றாலும் சினிமாவிற்காக அந்தக் கதையை கமர்சியலாக கையாண்டுள்ளார் இயக்குநர். கதைப்படி சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் புறநானுற்றுப் படையின் முக்கியஸ்தர். அவரை ஒடுக்கும் அதிகாரியாக ரவிமோகன் வருகிறார். பர்சனலாக சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். அந்த இழப்பின் காரணமாக சிவகார்த்திகேயன் போராட்டக்களத்திலிருந்து பின் வாங்குகிறார். அதன்பின் அவரது தம்பி போராட்டத்தை கையிலெடுத்து இறந்து போகிறார். அதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் வெகுண்டெழுகிறார். போராட்டத்தில் வெற்றியடைந்தாரா? என்பதே பரபரப்பான பராசக்தி இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கும் போராளியை சிவகார்த்திகேயன் கண்முன் நிறுத்துகிறார். அவரின் அபார நடிப்பு படத்திற்கு யானை பலம். ரவிமோகன் வில்லனத்தில் புதிய மைல்கல்லை…

Read More

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்! நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறது. Million Dollar Studios மற்றும் Neo Castle Creations நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர் ‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் முக்கிய…

Read More