Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது. ‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகள் தலைவருக்கு நேரில் காண்பிக்கப்பட்டது. காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும், இப்படம் சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் S சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் துணை இயக்குநராக . தற்போது ‘ROOT – Running Out…
Read Moreதி பெட் – திரைப்பட விமர்சனம்
நாம் தூங்க பயன்படுத்தும் ஒரு பெட் ஒரு கதை சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பெட் கதை சொல்வது போல் படத்தை ஆரம்பிக்கிறார்கள். ஸ்ரீகாந்த்,அவரது நண்பர்கள் குழு வீக் எண்ட் கொண்டாட்டம் என்ற பெயரில் அந்த வார விடுமுறைக்கு ஊட்டிக்கு சென்று வர திட்டமிடுகிறார்கள். .அவர்களுடன் பாலியல் தொழிலாளி சிருஷ்டி டாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அறை எடுத்து தங்குகிறார்கள் மதுவருந்தி போதை தலைக்கேறிய நேரத்தில் சிருஷ்டி டாங்கே மீது நண்பர்கள் காமப் பார்வை வீச,நாயகன் ஸ்ரீகாந்த் மட்டும் காதல் பார்வை வீசுகிறார். அவரை அடைய நண்பர்கள் தவிக்க, ஸ்ரீகாந்த் யாரும் தொட முடியாதபடி அவர்களை போதையில் தூங்க போட்டு விடுகிறார். இந்நிலையில் திடீரென்று சிருஷ்டி காணாமல் போகிறார். உடன் வந்த நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போக… கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறை இந்த…
Read More’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!
’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம் தமிழ் சினிமாவில் அவரை அடுத்த பெரிய நட்சத்திரமாக உயர்த்தும். ‘மார்க்’ திரைப்படத்தில் தீப்ஷிகா வலிமையான வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘மார்க்’ படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததோடு பார்வையாளர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் அவரது நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளவர்கள் நிச்சயம் திறமையாக நடிகையாக அவர் வலம் வருவார் எனவும் தெரிவித்துள்ளனர். நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரைத்துறைக்குள் நுழைந்திருப்பவரான தீப்ஷிகா நடிப்புக்கு தீனி போடும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் அதிக விருப்பம் இருப்பதாக சொல்கிறார். அர்த்தமுள்ள கதைகள்தான் நடிகர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்கிறார்…
Read More‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது. படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை நேரில் சந்தித்து, படத்தின் முதல் பார்வை போஸ்டரையும், படத்திலிருந்து சில காட்சிகளையும் அவருக்கு காண்பித்தனர். காட்சிகளை பார்த்து படக்குழுவின் உழைப்பை பாராட்டினார். மேலும், இப்படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறனுக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ திரைப்படத்தை, சமூக கதைகள் உருவாக்குவதில் தீர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் K.V. சபரீஷ் தயாரிக்க, டி…
Read Moreபான் -இந்திய மொழிகளில் வெளியாகும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வவ்வால்’
இயக்குனர் ஷாமன் பி பரேலில் எழுதி இயக்கியிருக்கும் படம் வவ்வால். “வவ்வால் ” திரைப்படம் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் பிரபலமான நடிகர்களை ஒன்றிணைத்து, ‘ஆன்டிமாண்ட்ஸ்’ என்ற பதாகையின் கீழ் ஒரு காஸ்மிக் ஆக்ஷன் த்ரில்லராக தயாரிக்கப்படுகிறது. ஒரு திரில்லர் ஆக்ஷன் படமான இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக தயாராக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இந்தபடத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது , வவ்வால் இரவில்தான் அதிகம் இரை தேடி தனது இருப்பிடம் விட்டு வெளியே வரும். அதுபோல இந்த படத்திலும் இரவில் உலவும் மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை சுவாரஸ்யமாகவும் ஆக்சன் திரில்லராகவும் கலந்து எடுத்திருக்கிறார்கள். தமிழில் இருந்து நடிகர் முத்துக்குமார், இந்தியாவின் மிகப்பெரிய வில்லன் என்று அழைக்கப்படும் அபிமன்யு சிங், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மகரந்த் தேஷ்பாண்டே, மலையாளத்தில்…
Read Moreயாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது. தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோலோச்சி வரும் நயன்தாரா, டாக்ஸிக் படத்தில் இதுவரை தோன்றாத ஒரு புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இருள் நிறைந்த இந்த உலகத்தில், அவரது இருப்பே…
Read Moreஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘LBW- லவ் பியாண்ட் விக்கெட்’ இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LWB- லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற ஒரிஜினல் வெப் சீரிஸ் மூலமாக நடிகர் விக்ராந்த் ஓடிடியில் அறிமுகமாகிறார். இந்த இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. இதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றதுடன் நடிகர் விக்ராந்த் கரியரில் திருப்புமுனை ஏற்படுத்தும் கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட்பீட்’ (சீசன் 1 & 2), ‘உப்பு புளி காரம்’, ‘ஆஃபிஸ்’ மற்றும் ‘போலீஸ் போலீஸ்’ ஆகிய நூற்றுக்கும் அதிகமான லாங் ரன் எபிசோட் கொண்ட இணையத்தொடர்கள் ஹாட்ஸ்டாரில் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அதே பாணியில் ஆழமான கதை சொல்லலுடன் ரசிகர்களை கட்டிப்போட…
Read More‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது. “மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக இந்தப் படத்தில் தோன்றுகிறார் என்பதுதான். மேலும், இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் என்ற தன் வழக்கமான அடையாளத்தைத் தாண்டி, “ஒரு கோபமான இளம் திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும். இதுகுறித்து இயக்குநர் மனோஜ் NS கூறியதாவது.., “‘மயிலே’ பாடலின் படப்பிடிப்பு பிரபுதேவா சார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் சார் உடன்…
Read MoreRS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ – 2026 கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகவிருக்கிறது!
RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’, பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடிகர் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக ‘மண்டாடி’ படம் இருக்கும். இதுவரை அவர் நடித்த படங்களில் இதுவே பெரும் பொருட்செலவும், மிகுந்த சவால்களும் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கதைக்காக சூரி தனது உடல் தோற்றத்தாலும் மெனக்கெட்டு பல மாற்றங்களை செய்திருக்கிறார். நடிகர் சூரியை முற்றிலும் புதிய பரிமாணத்தில் இந்த படம் காட்டும். இந்த படத்தின் மிக முக்கியமான பலம் சூரியின் அபாரமான தோற்றம் தான். கதையாக கடல் சார்ந்த ஆக்ஷன் அதிரடி காட்சிகள், ஆபத்தான சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். குறிப்பாக, படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் படகுப்பந்தய (sailboat racing) காட்சிகளுக்காக, பல மாதங்கள்…
Read More‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!
‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !! “டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ் ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்…
Read More