நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்வு !!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”. வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது , திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குனர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார் எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் திறமைசாலி, இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு தெரியும். இந்தப் படத்திற்கு அது சரியாக பொருந்தியுள்ளது. கூடிய விரைவில் என்னுடைய தயாரிப்பிலும் ஒரு…

Read More

‘மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’. இந்த மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன், “எப்போதும் இயக்குநர்களுக்கு பிடித்த நடிகர் கிச்சா. இந்தப் படத்திற்கு அவர் கொடுத்துள்ள உழைப்பு அசுரத்தனமானது. இந்த கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரசிகர்களுக்குப் பிடித்த ஆக்‌ஷன் படமாக ’மார்க்’ இருக்கும். மற்ற நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள். அஜனீஷூடைய இசை படத்திற்கு பெரும் பலம். அணியினருக்கு வாழ்த்துக்கள்!” தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி, “தலைமுறை தலைமுறையாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்த வரிசையில் நிச்சயம் ‘மார்க்’ படமும் இணையும். கிச்சா சுதீப்பும் மற்ற…

Read More

சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்…

Read More

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா பிரசாத் Lab அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, இயக்குநர் K பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, Gembrio pictures MD சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் K ராஜசேகரன், இயக்குநர் ராகவ் மிர்தாத், இயக்குநர் சுகுமார் அழகர்சாமி, இயக்குநர் பாலமுருகன், ஊடகவியலாளர் உமாபதி கிருஷ்ணன் ஆகியோர் விருது விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் நிகழ்வின் துவக்கத்தில் ” தமிழ் பிலிம் பேக்டரி ” திரைப்பட தயாரிப்பு & மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. Tamil film factory Logoவை திரு. கலைப்புலி S தாணு அவர்கள், இயக்குநர் k பாக்யராஜ் அவர்கள் வெளியிட இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுகொண்டனர். நிறுவனத்தின் இயக்குநர்கள் திருமதி கருணா விலாசினி, திருமதி சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவு…

Read More

கொலையில் முடிந்த பேஸ்புக் காதல்! “ரகசிய சினேகிதனே”

சென்னையில் கணவன் சந்தோஷ் உடன் வசிக்கும் சந்தியாவுக்கு பேஸ்புக்கில் பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கும் பல் டாக்டர் பரமேஷ் நட்பு கிடைக்கிறது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் மணிக்கணக்கில் சாட் செய்து, பொழுதை கழிக்கின்றனர். இவர்களது சாட் ஒரு வருடம் கழித்து சந்தோஷ்க்கு  தெரியவர, சந்தியாவை கண்டிக்கிறான். அவனிடம் சாட் செய்வதில்லை என்று பொய் சொல்லி, அவனுக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு, அவன் வேலைக்கு சென்றதும் பரமேஷ் உடன் சாட்டிங்கை தொடர்கிறார் சந்தியா. அதை கண்டு பிடித்து சந்தோஷ் அடித்து கண்டிக்க, ஒரு நாள் திடீரென்று மர்மமான முறையில் சந்தியா இறந்து போகிறாள். போலீஸ் சந்தோஷை அடித்து விசாரிக்க, இறுதியில் சந்தியாவை யார் எதற்காக கொன்றார்கள் என்ற விளக்கத்துடன் படம் நிறைவடைகிறது. வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை,…

Read More

ஹார்டிலே பேட்டரி – திரை விமர்சனம்

காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையை தவிர வேறு ஏதும் இல்லை என்று நம்புகிற விஞ்ஞான ஆர்வலர் சோபியா, தனது கல்வி அனுபவத்தில் ஒரு காதல் மீட்டரை கண்டுபிடிக்கிறார். உருகி உருகி காதலிக்கிறோம் என்று சொல்லும் காதல் ஜோடிகள் கூட இந்தக் காதல் மீட்டரில் கை வைத்து பரிசோதிக்க பயப்படுகிறார்கள். அவர்களே பலரது காதல் உண்மையாக இல்லாது இருப்பதே இதற்கு காரணம். இந்நிலையில் விஞ்ஞானமும் உணர்வுகளும் வேறு வேறு. இயற்கையான காதலை கண்டுபிடிக்க செயற்கையான மெஷின் எதற்கு என்கிறான், வழிப்போக்கனில் தொடங்கி தற்போது நண்பன் வரை வந்துவிட்ட நாயகன். நாயகி சோபியாவுக்கு இதில் நம்பிக்கை இல்லை. நேசித்து மணந்த பெற்றோர் தற்போது பிரிந்து போனதில் அம்மாவை ஒரேடியாக இழந்தவள் அவள். அதனால் காதலை சொல்ல வரும் நாயகனுக்கும் அவள் சில டெஸ்ட் வைக்கிறாள். அந்தத் தேர்வில்…

Read More

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறி உள்ளது மகா சேனா.

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், நடிகர் விமலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான மகா சேனா திரைப்படம் 12.12.2025 அன்று உலகெங்கும் வெளியானது. இயற்கையையும் தெய்வத்தையும் வணங்கும் ஒரு மனித குலம், அதை அழிக்க நினைக்கும் இன்னொரு கூட்டம் என்று ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் காடு சார்ந்த ஆக்சன் திரில்லர் படமான மகாசேனா திரைப்படம், திரையிட்ட திரையரங்குகளி லெல்லாம் குடும்பங்களின் பேராதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 264 திரையரங்குகளில் மகா சேனா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விமல் நடித்து வெளியான ஒரு படம், இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை. மேலும் குலதெய்வ வழிபாடு, சமத்துவம், மனிதம் ஆகிய பல கருத்துக்களை முனைப்பில் வைத்து திரைக்கதையாக தொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஸ்ருஸ்டி…

Read More

பார்வதி நாயரின்  ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் நேரடியாக ஸ்ட்ரீமிங் ஆகிறது !

தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணை பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்…

Read More

மாண்புமிகு பறை – திரை விமர்சனம்

மாண்புமிகு பறை   — திரை விமர்சனம்   பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும், ஆதிபறை என்ற பெயரில் இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதோடு மற்றவர்களுக்கு அந்த கலையை கற்றுக்கொடுத்தும் வருகிறார்கள்.   அதே சமயம், பறை இசைக் கலைஞர்களை இழிவாகப் பார்க்கும் சிலரால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து மீண்டு அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா ? இல்லையா ?, என்பதை சொல்வதே ‘மாண்புமிகு பறை’. நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் வெற்றி என்ற கேரக்டரில் வருகிறார். பேதம் பார்க்கும் மேல் தீட்டு மக்களிடமிருந்து வரும் இன்னல்களை பொருட்படுத்தாமல் அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டி இருக்கிறார். கோவில் திருவிழாவுக்கு சென்ற தனது நண்பன் மிஸ்சிங் என தெரிய வந்ததும் அவரது துடிப்பும் துயரமும் தேர்ந்த நடிகருக்கான முத்திரையை அவருக்குப் பெற்றுத் தருகின்றன.…

Read More

மகா சேனா — திரை விமர்சனம்

குரங்கணி மலைப்பகுதியில் வாழும் யாழி கிராம மக்களுக்கும் மலையடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டு கால பகை இருந்து வருகிறது. குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள். யாழி கிராமத்து மக்களின் தலைவன் செங்குட்டுவன் கிராம மக்களுக்கும் சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார். யாழி கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். அதே நாளில் அடிவார பகுதி மக்கள் சாமி சிலையை திருட நினைக்கிறார்கள். அதே சமயம் மற்றொரு கும்பல் சாமி சிலையை வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் மூலம் திருட திட்டமிடுகிறார்கள். யாழி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றதா? சாமி சிலையை எதிரிகளிடம் இருந்து செங்குட்டுவன் பாதுகாத்தாரா? என்பது படத்தின் மீதிக் கதை.…

Read More