மே 4, 2026 சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள் – நடிகர் உதயா

வணக்கம், நான் நடிகர் உதயா. மே 4, 2026 சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள். மக்கள் தீர்ப்பில் மிகுந்த எழுச்சியை காண முடிகிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கட்டாயம் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்து, தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டுப் போட்டு இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். மக்கள் சக்தியை விட பெரிய சக்தி எதுவுமே இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகி உள்ளது. முழு முடிவுகள் இன்னும் வர வேண்டி இருந்தாலும், விஜய் அண்ணாவுக்கு இப்போதே வாழ்த்து சொல்வது என்னுடைய கடமை. ஒரு மனிதர் எவ்வளவோ பிரச்சனைகள், எவ்வளவோ அவமானங்கள், எவ்வளவோ எதிர்ப்பு என அத்தனையையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நடிகராக ஒரு மிகப்பெரிய இடத்தை தியாகம்…

Read More

கேன்ஸ் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு

*கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’* இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ் புகழ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம் புகழ்) கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பாலன் த பாய்’. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் (Marché du Film) வருகிற மே 14-ஆம் தேதி இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நடைபெறவுள்ளது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கும் படம் இது. KVN புரொடக்ஷன்ஸ் (வெங்கட் கே. நாராயணா) மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் (சைலஜா தேசாய் ஃபென்) இணைந்து இப்படத்தை வழங்குகின்றன. அடையாளம், உயிர்வாழ்வதற்கான போராட்டம் மற்றும் தாய்-சேய்…

Read More

பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் வழங்கும் வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ முதல் ஆல்பம் – லோகோ & தலைப்பு வெளியீடு!

எழுத்தாளர் மற்றும் பாடகர் வாகீசன் ராசையாவுடன் இணைந்து, பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் அவரது முதல் ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ லோகோ மற்றும் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இது அவரது கலைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும். இந்த ஆல்பத்தின் லோகோ மற்றும் தலைப்பு, இன்று யூடியூப் தளத்தில் பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன், டிரெய்லர் வடிவில் இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கதையைப் பேசும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த டிரெய்லர், ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகிறது. கிரிபாகர்ஜெய் ஜெ இயக்கத்தில், டின்சா எடிட்டிங்கில் காட்சிகள் சீரான ஓட்டத்துடன் அழகாக நகர்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான காட்சியமைப்புகள், எதிர்காலத் தோற்றங்களையும் உணர்வுப்பூர்வமான தருணங்களையும் இணைத்து,…

Read More

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு…

Read More

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி. கே. எம். தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்பொரு அறிக்கை !!

அறிக்கை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி. கே. எம். தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்பொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த 26.4.26 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் இனி வரும் காலங்களில் வருவாய் பகிர்வு ( Revenue Sharing) முறையில் நடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நமது அண்டை மாநிலமான ஆந்திராவில், தயாரிப்பாளர்கள் நடிகர்களால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு திரைப்படம் தோல்வி அடையும்போது, அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் உடனடியாக தயாரிப்பாளருக்கு அடுத்த திரைப்படம் நடித்து கொடுக்க உறுதி அளிக்கிறார். அதே போல அந்த படத்தின் இயக்குநர் தயாரிப்பாளரை அணுகி அடுத்த படம் இயக்கி தர உறுதி அளிக்கிறார். தயாரிப்பாளரின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்கிறார்கள்.…

Read More

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும். கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும் திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன விலை’ திரைப்படம் சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான தருணங்களுடனும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த படம் முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம்…

Read More

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது!

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் ‘சிறை’ மற்றும் ‘யூத்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார். வழக்கத்திற்கு மாறான ஒரு…

Read More

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி” டாக்டர் சிஎம்கே ரெட்டி, “பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவ துறையும், சினிமாத்துறையும்…

Read More

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த…

Read More

ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் & ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் முதல் படம் ‘பிரௌன் மணி’ – டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும், நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ளார். இந்த First Look, ஒரு உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பிரவுன் மணி படத்தில் ராம் நிஷாந்த் மற்றும் JS கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல முக்கிய படங்களில் நடித்த அனுபவம் கொண்ட இவர்களின் நடிப்பு, இந்தப் படத்திற்கு கூடுதல் வலுவைத் தருகிறது. இந்தப் படத்தை கதிரவன் சம்பத் இயக்கியுள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகும் இந்தப் படத்திற்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சக்தி சுப்ரமணியன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங்கை சுந்தர் S கவனித்துள்ள நிலையில், கலை இயக்கத்தை அபர் மேற்கொண்டுள்ளார். மேலும், “சிங்-சவுண்ட்” (Sync Sound)…

Read More