தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்தை திறந்துவைத்த இசைஞானி இளையராஜா !

மறைந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 2026 நவம்பர் 20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். மேலும், தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ‘Deva The Tribute’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர் ஸ்ரீநாத், அமைச்சர் வன்னி அரசு, திலீப் குமார் சென்னை மத்திய மாவட்ட தெற்கு செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன், நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குனர் சங்க தலைவர் ஆர். கே. செல்வமணி, மற்றும் இயக்குநர் பி. வாசு, ராதாரவி, பாண்டியராஜன், ஹிப் ஹாப்…

Read More

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார் தரணி ராசேந்திரன். இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த 1944 ஆம் ஆண்டில், ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டுள்ளது ‘டெத் இரயில்வே’. இந்தியா தனது சொந்த மண்ணில் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அதே வேளையில், இந்திய வீரர்கள் தொலைதூர எல்லைகளில் அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகம் அறியப்படாத இந்த வரலாற்றுப் பக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டெத் இரயில்வே’ திரைப்படம் போர்க்களத்தின் தீவிரத்துடன் உணர்வுப்பூர்வமான காதலையும் இதில் பேசுகிறது. இயக்குநர் தரணி ராசேந்திரன் பகிர்ந்து கொண்டதாவது, “இரண்டாம் உலகப்போர் தீவிரமடையும் பொழுது ஜப்பான் பர்மா, நாகலாந்தை…

Read More

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ (Gala Premiere Feature Film) பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ள ‘கூடு’ (KOODU)!

பனோரமா ஸ்டுடியோஸ் (Panorama Studios), ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் (Skymoon Entertainment) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படமான ‘கூடு’ (KOODU), கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) மதிப்புமிக்க ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்த் திரைப்படம் இதுவாகும். இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இவ்விழாவில், ‘கூடு’ திரைப்படம் இடம்பெற்றிருப்பது படக்குழுவினருக்கும் சமகாலத் தமிழ்த் திரைப்படத் துறைக்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இணைந்து நடித்துள்ள ‘கூடு’, உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான நாடகத் திரைப்படமாகும். உணர்ச்சிகரமான கதை சொல்லலையும்…

Read More

#RaPo23 படத்தின் ப்ரீ-லுக் வெளியீடு – விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ்!

தெலுங்குத் திரையுலகின் எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் தனது புதிய திரைப்படமான #RaPo23 படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக்கை சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ (The Story of a LONE WOLF) என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. இந்த ப்ரீ-லுக் போஸ்டரில், பிரம்மாண்டமான கட்டிட அமைப்பிற்குள் உள்ள படிக்கட்டுகளில் முதுகைக் காட்டியபடி நிற்கிறார் ராம் பொத்தினேனி. கருப்பு நிற உடையில், வித்தியாசமான V வடிவ ஹேர் ஸ்டைலுடன் காணப்படும் அவருடைய தலையின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள டாட்டூ கவனம் ஈர்க்கிறது. ஒரு கையில் துப்பாக்கியும், மறுகையில் டெடி பியரும் வைத்திருக்கும் அவரது தோற்றம் பல்வேறு கேள்விகளையும் மர்மங்களையும் உருவாக்கியுள்ளது. சாம்பல் நிறப் பின்னணியும் பிரம்மாண்டமான கட்டிட அமைப்பும்…

Read More

இயக்குநர் K.P. ஜெகன் நடிக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில், மறைந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இனிமையான குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடலான ‘வா சிவா’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயக்குநர் K.P. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தில் K.P. ஜெகன், விஜய் வர்மா, எம். எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ், இயக்குனர் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுக. செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை மணிகண்டன் சிவக்குமார் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வீரசமர் கவனித்திருக்கிறார். தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாகத் தயாராகியுள்ள…

Read More

சத்தியவான் சாவித்திரி விமர்சனம்

கதை.. சீனியர் வழக்கறிஞர் மிஷ்கினிடம் ஜூனியராக  பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஒரு கட்டத்தில் அவரையே எதிர்க்க வேண்டிய சூழ்நிலை.. காரணம் கீர்த்தியின் கணவர் மீது கொலை பழி விழுகிறது.. கீர்த்தியின் கணவர் சாருகேசிதான் ஒரு பெண்ணை கொலை செய்தார் என்று மிஸ்கின் வாதாட தன் கணவர் குற்றமற்றவர் என நிரூபிக்க எதிர்த்து போராடுகிறார் கீர்த்தி சுரேஷ்.. இறுதியில் வழக்கு என்ன ஆனது.. ஷில்பா மஞ்சுநாத்தை கொன்றவர் யார்? சாருகேசி கொலை செய்யவில்லை என்றால்  கொலையாளி யார்.? வாதாடி வழக்கில் ஜெயித்தது யார்.? என்பதெல்லாம் திரைக்கதை நடிகர்கள்… கதை நாயகி கீர்த்தி சுரேஷ்.. கணவனுக்காக வாதாடி வக்கீலை எதிர்த்து நிற்கும் துணிச்சல் பெற்ற கேரக்டரில் ஜொலிக்கிறார் கீர்த்தி.. அப்பாவி பெண் கேரக்டரில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் இல் அதிரடியான ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறார் கீர்த்தி.. தன்னிடம் பணிபுரிந்த ஜூனியர் தன்னையே…

Read More

அப்பா குட்டி விமர்சனம்..

கதை… உறவினர் மற்றும் மனைவி என யாரும் இல்லாத நிலையில் குழந்தையை வளர்த்து வருகிறார் விஜய் ஆண்டனி.. குழந்தை படிக்கும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார் ப்ரீத்திஅஸ்ராணி.. விஜய் ஆண்டனியின் கேரக்டர் பிடித்துப் போனதால் அவரிடம் தன் காதலை சொல்கிறார் பிரீத்தி.. ஆனால் காதலை ஏற்க மறுக்கிறார் விஜய் ஆண்டனி.. தன் மனைவி இறந்து விட்டதாக விஜய் ஆண்டனி சொன்னதை நம்பும் பிரீத்தி ஒரு கட்டத்தில் அவரை ஊட்டியில் சந்திக்கிறார்.. அப்படி என்றால் மனைவி இறந்து விட்டதாக விஜய் ஆண்டனி சொல்ல என்ன காரணம்.? குழந்தையை இவர் தானாக வளர்க்க என்ன காரணம்.? நடந்தது என்ன நடக்கப் போவது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… விஜய் ஆண்டனி நடிப்பில் வந்திருக்கும் மற்றொரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் இந்த அப்பா குட்டி.. தன் அப்பாவை அப்பா குட்டி என்று அழைக்கிறார்…

Read More

ஆகாயத்தில் ஒரு தாரகை விமர்சனம் 4.5/5

கதை… அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் சாத்விகாவை அவரது 16 வயதினிலே திருமணம் செய்து கொள்கிறார் துல்கர் சல்மான்.. முதலிரவு அன்றுதான் தன் மனைவி சாத்வீகாவுக்கு ஒரு லட்சியம் இருப்பதை அறிகிறார்.. விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் அதற்காக படிக்க வேண்டும் என்கிறார் மனைவி.. மனைவியின் விண்வெளி ஆசையை நிறைவேற்றினாரா கணவன்.? என்ன நடந்தது.? அந்த கிராமத்தில் இருந்து அவர்களால் தங்களுடைய லட்சியக் கனவு எட்ட முடிந்ததா.? என்பதெல்லாம் சிறப்பான திரைக்கதை.. நடிகர்கள்… நாயகன் – துல்கர் சல்மான்.. நாயகி – சாத்விகா வீரவல்லி (அறிமுகம்) பஞ்சு வசனங்கள் பேசி பறந்து பறந்து ஃபைட் செய்து என எந்த ஹீரோயிசம் இல்லாமல் மனைவிக்காக போராடும் கணவன் கேரக்டர்.. அதில் தூள் கிளப்பி இருக்கிறார் துல்கர் சல்மான்.. பல கணவர்களுக்கு துல்கர் கேரக்டர் பொறாமையை ஏற்படுத்தும்…

Read More

ஓம் – திரை விமர்சனம் 4.5/5

கதை… ஆந்திராவில் இருந்து விலைமதிப்பு மிக்க செம்மரங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் மம்முட்டி.. இவரின் கூட்டத்தை அடியோடு ஒழிக்க திட்டமிடுகிறார் போலீஸ் சாய் பல்லவி.. OM ஆப்ரேஷன் மோல் என்ற திட்டத்தின் மூலம் செயல்படும் சாய்பல்லவிக்கு உதவியாக தனுஷ் இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் மம்மூட்டியின் ரகசிய திட்டங்களை அறிந்து கொள்ள அவரிடம் தனுஷை சேர சொல்லி அதன் மூலம் கடத்தல் ரகசியங்களை அறிந்து கொள்கிறார்.. மம்மூட்டியின் கூட்டத்திற்குள் செல்லும் தனுஷ்.. அந்தக் கூட்டத்தின் திட்டங்களை அறிந்து கொண்டாரா.? ஆந்திர போலீஸ் சாய்பல்லவிக்கு அவர் எப்படி உதவினார்.? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… தனுஷ் மம்மூட்டி சாய் பல்லவி மூவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர் ஆனால் இரண்டு நடிகர்களை காட்டிலும் சாய் பல்லவி சபாஷ் பெறுகிறார்.. தனுஷ் வழக்கம் போல ஆட்டம் பாட்டம்…

Read More

‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து HAVEN PICTURES, RK கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத் தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’!

ஏ.வி.எல்.டி புரொடக்‌ஷன் (AVLT PRODUCTION) சார்பில் | ஜெகன் ஜான் பீட்டர் (Jegen John Peter) தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’. புலனாய்வு க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த தமிழ்ப்படம் விரைவில் தமிழகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. ‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் HAVEN PICTURES   RK. கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத்  தமிழ்ப்படம் இது. நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘கோட்’ திரைப்படங்களின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்ற இர்ஃபான் ஜைனி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும்  லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ். வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி G , கலைமாமணி கே. எஸ் மணியம், நிஷா மற்றும்…

Read More