செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

இயக்குநர் உல்லாஸ் செம்பனின் அடுத்த பிரமாண்டம் – டிஸ்கோ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் ‘டிஸ்கோ’ – ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட்!* ‘அஞ்சக்கள்ளகோக்கன்’ (Anchakkallakokkan) படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் உல்லாஸ் செம்பன் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘டிஸ்கோ’ (Disco) படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘அங்கமாலி டைரீஸ்’ வெற்றிக்குப் பிறகு, பிரபல நடிகர்-எழுத்தாளர் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் மீண்டும் இணையும் இப்படத்திற்கு செம்பன் வினோத் ஜோஸ் திரைக்கதை எழுதியுள்ளார். செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன. ஆண்டனி வர்கீஸுடன் இணைந்து தேவ் மோகன், லுக்மேன் அவ்ரான், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத்…

Read More

‘ஹலோ மிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’.  இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ், KPY சரத், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் சண்டைக் காட்சிகளை S.R. ஹரி முருகன் கவனிக்கிறார். பிருந்தா மற்றும் தினேஷ் நடன இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். பாடல்களுக்கு யுகபாரதி, விவேக், தாமரை, விவேகா ஆகியோர் பாடல்வரிகள் எழுதுகின்றனர். ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், பிரின்ஸ் ஜார்ஜ், சத்ய பிரகாஷ், கபில் கபிலன், அந்தோணி தாசன், ஸ்வேதா அசோக் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்கிறார். இசையை பிரின்ஸ்…

Read More

ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் ‘நய்யி நவெல்லி’, இந்த வருடம் அக்டோபர் 16ஆம் தேதி தசரா பண்டிகைக்கு நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ தயாரிப்பில், யாமி கெளதம் தர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் ஃபேன்டஸி குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ’நய்யி நவெல்லி’ உருவாகியுள்ளது. பண்டிகைக் காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழும் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹிமான்ஷு ஷர்மா மற்றும் திவ்ய நிதி ஷர்மா கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அசாதாரணமான சம்பவங்கள், குடும்பத்தில் வரும் குழப்பங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் ஏராளமான நகைச்சுவை நிறைந்த உலகத்திற்குள் பார்வையாளர்களை இப்படம் அழைத்துச் செல்லும். ‘நய்யி நவெல்லி’ 2026 அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குழப்பங்கள் நிறைந்த மீரட் குடும்பத்தை மகிழ்ச்சியான இடமாக மாற்றுகிறாள் கதாநாயகி. ஆனால், அவளது கணவரின் தம்பிக்கு மட்டும் அனைத்திலும் சிறப்பாகத் தோன்றும் அண்ணி உண்மையில் ஒரு…

Read More

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனை மாறியுள்ளது என்பதற்கு சான்றாக இந்த வருடம் வெளியான நல்ல கதைக்களங்களைக் கொண்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. உதாரணமாக ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களை சொல்லலாம். பான் இந்திய அளவில் பிரம்மாண்டமான திரைப்படங்களையும், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதைகளையும் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ரசிகர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ப ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ரவி தேஜா நடிக்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு தமிழ் திரைப்படமான ‘மொத ராத்திரி’ நாளை (ஆகஸ்ட் 21) அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தின்…

Read More

கௌரி கிஷனைச் சுற்றி பயணிக்கும் பல பெண்கள்… ‘தாரகை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் தயாரிப்பு எண் 1-ஆக உருவாகி வரும் திரைப்படம் ‘தாரகை’. இப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். கதையின் நாயகியாக கௌரி கிஷன் நடிக்கிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. கௌரி கிஷனின் முகத்தை மையமாகக் கொண்டு, அவரைச் சுற்றிலும் வெவ்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த பல பெண்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தாரகை’ படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, அலன் பி. ஜான் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். அருண்சங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு…

Read More

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco), தனது நான்காவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை இன்று சென்னையின் பூந்தமல்லியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை இன்னும் அருகில் கொண்டு சேர்க்கும் தனது முயற்சியை ஜஸ்’ ஆன்கோ மேலும் வலுப்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, லக்ஷ்மணஞ்சாவடி, JKJ Towers-ல் அமைந்துள்ள இந்த புதிய மையத்தின் திறப்பு விழா, KM Health Care Hospitals நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கே. பாலசுப்ரமணியன், நடிகரும் இயக்குநருமான திரு. சந்திரா லட்சுமணன், மற்றும் Sun News சிறப்பு செய்தியாளர் திரு. ராஜா திருவேங்கடம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக புற்றுநோயை…

Read More

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு.

ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்பு ஒன்றிணைக்கிறது தமிழ் உள்ளடக்கம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது தமிழ் கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்கள் திரையைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பகிரப்பட்ட அனுபவங்கள், உரையாடல்கள் மற்றும் கலாச்சார அடையாளமாக மாறுகின்றன. தமிழ் ZEE5-ஐ பொறுத்தவரை, இந்த உறவின் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய பொறுப்புடன் கூடியதாகும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அர்த்தமுள்ள, உயர்தரமான கதைசொல்லல் மூலம் அவற்றை தொடர்ந்து உயர்த்துவதும் எங்கள் பொறுப்பாகும். இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்புக்கு இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ஜனநாயகன் முன்னிலை…

Read More

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

      சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், ” கடந்த 23…

Read More

கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில், விஷ்ணு டாக்கீஸ் (Vishnu Talkies) வழங்கும் ‘CUSTOMER’ குறும்படம் இன்று (ஆகஸ்ட் 18) மாலை 6:00 மணிக்கு விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

டி. விக்னேஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம், நவீன விளம்பர உலகமும் மார்க்கெட்டிங் தந்திரங்களும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “ஒரு பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது” (You don’t buy a product, product buys you) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கதைச் சுருக்கம்: தேவி — கணவர் மற்றும் மகனுடன் வாழும் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பப் பெண். தினமும் வேலை, குடும்பப் பொறுப்பு என ஓடிக்கொண்டிருக்கும் அவளுக்கு, தன் தோற்றத்தைப் பற்றி பெரிதாக கவலை இல்லை. ஆனால் தொடர்ந்து அவள் கண்முன்னே தோன்றும்…

Read More

மொத ராத்திரி’ திரைப்படத்தில் அன்பும் பல உணர்வுகளும் நிறைந்தது எனது கதாபாத்திரம்”…நடிகை அனிஷ்மா அனில்குமார்!

‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்படும் குழப்பங்கள் என கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து நடிகை அனிஷ்மா அனில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைதான் என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய கதாபாத்திரம் தனக்குள் நிறைய எண்ணங்களையும் உணர்வுகளையும் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு பெண் அல்ல. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதில் அழகு இருப்பதாக நான்…

Read More