யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் சந்தானம். படம் பிடிக்காவிட்டால் வெளுத்து வாங்கி விடுவார். இதனாலேயே படம் ஓடாது. இந்நிலையில் ஒரு திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு சந்தானத்தை தேடி வர… அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் புதிய படம் பார்க்கும் ஆர்வத்தில் அந்த திரையரங்கத்திற்கு செல்ல… அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களை காப்பாற்ற சந்தானமும் செல்கிறார். அப்போது அவரும், அவரது குடும்பமும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள். சைக்கோ கிரைம் திரில்லர் படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து அதிர்ந்து போகும் சந்தானம், அந்த சிக்கலில் இருந்து தன் குடும்பத்தை எப்படி மீட்கிறார் என்பதை காமெடி பாதி, களேபரம் மீதி என சொல்லி இருக்கிறார்கள்.…
Read Moreமாமன் – திரை விமர்சனம்
அக்கா-தம்பியின் அளவு கடந்த பாசம் தம்பியின் இல்லற வாழ்க்கையையே பாதிக்க நேர்ந்தால்….அதுதான் இந்த மாமன் கதை. கிராமங்களில் தாய் மாமன் உறவு உன்னதமானது. அப்படி ஒரு மாமனை திரைக்கு தந்து இருக்கிறார்கள். 10 வருடமாக குழந்தை இல்லாமல் அவமானத்தை மட்டுமே வெகு மானமாக பெற்றுக் கொண்டிருந்த தனது அக்காவுக்கு இப்போது மகன் பிறக்கிறான். பிறக்கும் மகன் அந்த தாய் மாமனுக்கு முழு நேர சந்தோஷமாகிறான். தூங்கும்போது கூட மாமனை கட்டிப் பிடித்துக் கொண்டே தூங்கும் அந்த சிறுவன், அதே மாமனுக்கு திருமணம் ஆகும்போது மாமன் குடும்பம் பிரிய காரணமாகிறான் பிரிந்த அக்கா தம்பி குடும்பம் மீண்டும் இணைந்ததா என்பது பாசமும் நேசமுமான திரைக்கதை. சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு தம்பி என்றால் உயிர். அதே மாதிரி தம்பியும் அக்காவை உயிருக்கும் மேலாக நேசிக்கிறான். இந்த அக்காவுக்கு பத்து வருடத்திற்கு…
Read Moreஜோரா கைய தட்டுங்க – திரைவிமர்சனம்
யோகி பாபு படம் என்றால் காமெடிக்கு உத்தரவாதம் இருக்கும். சில படங்களில் குணச்சித்திரவேடங்களிலும் கலக்குவார். இந்த இரு வேறு நிலைகளையும் தவிர்த்து இந்த படத்தில் யோகி பாபு ஏற்று இருப்பது பழிவாங்கும் கேரக்டர் என்பது தான் படத்தின் ஸ்பெஷல். கதை இதுதான். தான் உண்டு தன் மேஜிக் உண்டு என்று வாழ்ந்து வருபவர் யோகி பாபு. மேஜிக் மேன் என்பதால் ஆங்காங்கே இருந்து வரும் சில அழைப்புகளை ஏற்று அதில் வரும் வருமானம் மூலம் ஜீவனம் நடத்துபவர். ஆனால் அவர் மீதும் போட்டி பொறாமை கொண்ட ஆட்கள் ஏதேனும் காரணம் சொல்லி அவர் நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்து வந்தார்கள். ஒருமுறை யோகி பாபுவின் மேஜிக்கால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி சீரியஸ் நிலைமைக்கு போக, நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அடித்து துவைத்தது போக, காவல் நிலையத்திலும் தொடர்ச்சியாக அடி உதை.…
Read Moreபிக்பாஸ் அர்ச்சனா : “வலுவான புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்!”
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா தற்போது சினிமா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளார். சினிமாவில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு மற்றும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறார். பிக்பாஸ் அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது”. மேலும், ” இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய…
Read Moreபவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற அவதாரத்தில் திரையில் தோன்றுகிறார். இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரையும் வெளியிட தயாராகி வருகிறது. ட்ரெய்லர் வெளிவரும் தருணத்தில், எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு உயரும் எனத் தெரிகிறது. மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஹரி ஹர வீர மல்லு தற்போது இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடைபெறுகின்றன. VFX, Sound Design மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. தாமதங்கள், தடைகள் பல இருந்தாலும்,…
Read Moreலெவன் – திரை விமர்சனம்
சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதுவும் ஒரே சாயலில். இறந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடலை எரித்து அதை பொது வெளியில் போடும் முறையை கையாளும் சைக்கோ ஒவ்வொரு முறையும் எந்த தடயமும் இல்லாமல் தப்பி விடுகிறான். இதனால் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார். இதற்கிடையே கொலைகளும் தொடர்கிறது. இந்நிலையில் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதன் பிறகு வழக்கு காவல்துறை அதிகாரி நவீன் சந்திராவிடம் போகிறது. ஆனால் அவர் பொறுப்பேற்ற பிறகும் கொலைகள் தொடரவே செய்கிறது. காவல்துறை மீது மண்ணை தூவி விட்டு கொலைகளை தொடரும் அந்த கொலையாளி பிடி பட்டானா? தொடர் கொலைக்கான அவன் மோட்டிவ் என்ன என்பது கொஞ்சமும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ். இருக்கட்டும். இந்த படத்துக்கும் லெமன் என்ற தலைப்புக்கும்…
Read MoreHIT 3′ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!
பல வகையான கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கோமலி பிரசாத். அவரது சமீபத்திய ஹிட் படம் ‘HIT 3’. இதில் அவரது ASP வர்ஷா கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது. இந்தப் பயணம் இனிமையானதாகவும் அதே சமயம் அட்வென்சராகவும் இருந்ததாக சொல்கிறார் கோமலி. “இந்த பவர்ஃபுல்லான ஆக்ஷன் பேக்ட் கதாபாத்திரம் பார்த்து ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை கண்கலங்க வைத்து விட்டது. இதேபோன்று இன்னும் பல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகி இருக்கிறது” என்றார். நானியுடன் இணைந்து நடித்திருப்பது மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம். அவர் ஒரு திறந்த புத்தகம் என்கிறார். “அவர் நடிகர் மட்டுமல்ல. எல்லாத் துறைகள் பற்றியும் அவருக்குத் தெரியும். சில ஆக்ஷன் மூவ்ஸூம் எனக்கு சொல்லித் தந்தார். பெரிய இன்ஸ்பிரேஷன்”. நேஷனல் லெவல் பாக்ஸர்…
Read Moreவிஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது – மாறாத மர்மங்கள் காத்திருக்கின்றன!
விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னணி எடிட்டராக வலம் வந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக இருக்கப் போகிறது. முன்னதாக வெளியான முதல் லுக் போஸ்டர் மற்றும் “சொல்லிடுமா” என்ற சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது, திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது. மர்மம் மிக்க கதையம்சம் மற்றும் ஆழமான கதாபாத்திரங்களால், படம் பரபரப்பான திரை அனுபவத்தை தர உள்ளது. மேலும், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் இந்த படத்தின் முக்கிய வில்லனாக அறிமுகமாகிறார். தன் நடிப்பால் தமிழ் திரை உலகில் புதிய வில்லனாக முன்னிறைவார்…
Read Moreராமின் ‘பறந்து போ’ ஜூலை 4-ல் ரிலீஸ்!
தனித்துவமான கதைச் சொல்லல் மூலம் சினிமாத் துறையில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம். அவரது அறிமுகப் படமான ‘கற்றது தமிழ்’ உண்மையான அன்புக்கும் சமூகத்தின் அழுத்தத்திற்கும் இடையில் இருக்கும் ஒருவனின் கதையை பேசியது. அடுத்ததாக தந்தையின் உன்னதமான அன்பை ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘பேரன்பு’ திரைப்படங்களும், சமூகத்தின் உண்மை முகத்தை உரக்க பேசிய ‘தரமணி’ படமும் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாரட்டுக்களை குவித்த அவரது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது ஃபீல் குட் திரைப்படமான ‘பறந்து போ’ ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது. பல உணர்வுப்பூர்வமான தருணங்களை இந்தப் படம் ரசிகர்களுக்குக் நிச்சயமாக கொடுக்கும். நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல்…
Read Moreபான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ‘அழகிய அசுரா’ படத்தில் கதாநாயகியான ரெஜினா கசாண்ட்ராவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்தன. இதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். ரெஜினா கசாண்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில்…
Read More