தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் தீவிர விசுவாசியும், சீடருமான தமிழருவி மணியன் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘பழகிய நாட்கள்’, ‘ மூன்றாம் மனிதன் ‘ என சமூக வலைதள உலகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கன்டென்டுகளை உருவாக்கும் படைப்பாளியான ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மக்கள் தலைவா’. இதில் ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில்…
Read Moreபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.
ஹிப்ஹாப் தமிழா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகல துறைகளிலும் கால் பதித்து வெளிவந்த திரைப்படம் “மீசைய முறுக்கு”. சுந்தர்.சி தயாரித்திருந்த இப்படம் 2017-இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , ‘ஆடுகளம்’ நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ்…
Read MoreIT சோதனைக்குபின் ஜாபர் சாதிக் விளக்கம் !!
பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் அவர்களின் , சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது குறித்தும் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் குறித்தும் திரு ஜாபர் சாதிக் பத்திரிக்கை நண்பர்களைச் சந்தித்து தனது தரப்பிலான விளக்கங்களை அளித்தார். இது குறித்து ஜாபர் சாதிக் கூறியதாவது.., என்னைச் சுற்றி பரவி வரும் பல தவறான தகவல்களுக்கு நேராக பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்தான். உங்கள் முன் வந்திருக்கிறேன். 6 ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் அதிகாரிகள் என்…
Read Moreஅட்லீயின் உலகளாவிய ஃபாண்டஸி-ஆக்ஷன் திரைப்பட அறிவிப்பு !!
இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது. “ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய முயற்சியாக…
Read Moreபிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது.., இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்தில் கிடைத்தன. அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது. இந்த படத்தின் கதை முதலில் விக்னேஷ் சிவன்…
Read Moreமுத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வினில்.. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது.., இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும்…
Read Moreஇயக்குநர் வ.கெளதமன் இல்ல நிச்சயதார்த்த நிகழ்வு
06.04.26: சென்னை – முட்டுக்காடு. கனவே கலையாதே திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா திரைப்படங்களில் நாயகனாக நடித்து இயக்கிய வ.கௌதமன் தனது மகள் கௌ.பரஞ்ஜோதி பிகாம்.,எம்.பிஏ அவர்களுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு தொழிலதிபர் கண்ணன் அவர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க் அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சென்னை எம்ஜிஎம் பீச் ரெசார்ட் அரங்கில் மன நெகிழ்வோடு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தேரியது. விழா நிகழ்வில் மூத்த திரைக்கலைஞர் சிவக்குமார், “கவிப்பேரரசு” வைரமுத்து, நீதியரசர் கலையரசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் அமைச்சர் ஏகே, மூர்த்தி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தொழிலதிபர்கள் டெல்டா செல்வம், ராம்ஜி, ஜெயராமன் ஐ.ஏ.எஸ், சந்தானம் ஐஏஎஸ், சகாயம் ஐஏஎஸ், ஜெயகாந்தன் ஐஏஎஸ், தட்சிணாமூர்த்தி ஐஏஎஸ், நடிகர்கள் சந்தானம், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, ஏகன், பிரிகடா, கராத்தே…
Read Moreசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!
விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது. இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகிலனர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் மனதை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கதைக்களம், உருவாக்கம் மற்றும் வலுவான கூட்டணி போன்ற காரணங்களால் ’இரண்டு…
Read Moreநடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!
டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்” படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார் பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது. இன்றைய விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு ஃபைவ் ஸ்டார் செந்தில் ஃபைவ் ஸ்டார் கல்யாண் கமல்போரா. SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ் சத்யா ஆதேஷ்பாலா, மோகன்லால், சந்தோஷ்பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி,…
Read Moreஇயக்குநர் வ.கெளதமன் இல்ல நிச்சயதார்த்த நிகழ்வு !!
கனவே கலையாதே திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா திரைப்படங்களில் நாயகனாக நடித்து இயக்கிய வ.கௌதமன் தனது மகள் கௌ.பரஞ்ஜோதி பிகாம்.,எம்.பிஏ அவர்களுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு தொழிலதிபர் கண்ணன் அவர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க் அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சென்னை எம்ஜிஎம் பீச் ரெசார்ட் அரங்கில் மன நெகிழ்வோடு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தேரியது. விழா நிகழ்வில் மூத்த திரைக்கலைஞர் சிவக்குமார், “கவிப்பேரரசு” வைரமுத்து, நீதியரசர் கலையரசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் அமைச்சர் ஏகே, மூர்த்தி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தொழிலதிபர்கள் டெல்டா செல்வம், ராம்ஜி, ஜெயராமன் ஐ.ஏ.எஸ், சந்தானம் ஐஏஎஸ், சகாயம் ஐஏஎஸ், ஜெயகாந்தன் ஐஏஎஸ், தட்சிணாமூர்த்தி ஐஏஎஸ், நடிகர்கள் சந்தானம், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, ஏகன், பிரிகடா, கராத்தே ராஜா, கிங்காங், இயக்குநர்கள் ஆர்வி.உதயகுமார்,…
Read More