இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழி நடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தில் செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா, மைம் கோபி, வை. ஜி. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், இலா பரத், சுதா, ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ கே பிரியன் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வயோம் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மற்றும் ஆர் எஸ் சதீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு…
Read More“வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால “திருமண வாழ்வை” மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ”நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின் இசையமைத்து, சுபலக்ஷினியுடன் இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை எழுதியுள்ளார். மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி…
Read MoreBIKER [பைக்கர்] – விமர்சனம்
கதை… ராஜசேகர்.. இவரின் மகன் சர்வானந்த்.. தன்னால் முடியாததை மகன் சாதிக்க வேண்டும் என நினைத்து அவருக்கு பைக் ரேஸில் பல பயிற்சிகளை கொடுக்கிறார்.. சிறு வயது முதலே மகனின் கவனம் எதிலும் சிதறி விடக்கூடாது என்பதற்காக கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்.. தன்மகன் உலக அளவில் பைக் ரேசர் சாம்பியன் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக பல போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார். ஒரு கட்டத்தில் சர்வானந்த் & மாளவிகா இருவரும் காதலிக்கின்றனர். அப்போது அவர்களின் நெருக்கமான உறவால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகிறார் மாளவிகா.. அந்த சமயத்தில் நடைபெறும் போட்டியில் ஒரு விபத்து ஏற்படவே இனி நீங்கள் பைக் ரேஸ் ஓட்டக்கூடாது என கட்டளை இடுகிறார் மனைவி.. இதன் பிறகு சர்வானந்த் என்ன செய்தார்.? தந்தையின் ஆசையை லட்சியத்தை காப்பாற்றினாரா அல்லது மனைவியின் ஆசைப்படி…
Read More’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் காந்தி கிருஷ்ணா, “நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால்,…
Read Moreமூணாறில் “அறிவு” பட படப்பிடிப்பு… மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார்!
Movietron Production சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் “அறிவு” திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, அந்த பள்ளியில் மாணவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாத நிலையை கண்டு படத்தின் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் புதிய பெயிண்டிங் வேலைகள் செய்யப்பட்டதுடன், மறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் படிக்கும்…
Read MoreTN 2026: “அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு அவர் சொன்னார்” – நட்டி நடராஜ்
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது.., நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை…
Read More*’ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!
‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் இல்லாதது’ ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ஆழமும் யதார்த்தமும் தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு விரும்பப்படும் தேர்வாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் தென்னிந்திய திரையுலகிலும் விரும்பப்படும் நடிகையாக அவர் உள்ளார். தற்போது, இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். அவரது கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “மாளவிகா மனோஜ் இந்தப் படத்தில் ‘நிலோஃபர்…
Read Moreலீடர் – விமர்சனம்
கதை… தாய் இல்லாத தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் லெஜென்ட் சரவணன்.. இவர் ஒரு கார் மெக்கானிக்.. ஹார்பரில் உள்ள கார்களுக்கு இவர்தான் மெயின் மெக்கானிக்.. எனவே இவருக்கு ஹார்பருக்குள் எளிதாக சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.. இந்த சூழ்நிலையில் அங்கு போதை மருந்து கடத்தல் நடைபெறுவதாக போலீஸ் ஷாம் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தெரிய வருகிறது.. ஆனால் அங்கு போலீஸ் நுழைய முடியாத சூழ்நிலையில் லெஜென்ட் சரவணன் இடம் சில உதவிகளை கேட்கின்றார் ஆண்ட்ரியா.. ஆனால் அது என்னுடைய வேலை இல்லை நான் என்னுடைய கஷ்டமருக்கு துரோகம் செய்ய முடியாது என்று மறுத்து விடுகிறார் லெஜென் சரவணன்.. இந்த சூழ்நிலையில் இவரின் குழந்தை கடத்தப்படுகிறது.. குழந்தை ஹார்பரில் உள்ள ஒரு கண்டெய்னரில் இருப்பதாக தெரிய வருகிறது.. இதன் பின்னர் சரவணன் என்ன…
Read More*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*
அதிரடியான முதல் பார்வை வெளியீடு மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் சமீபத்தில், படத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக்…
Read More*‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்*
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘பரீட்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ், இப்படத்திற்காக பாடிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் ஹாரூண் கூறும்போது,…
Read More