“‘சிக்மா’ திரைப்படம் தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது”- நடிகர் ஷிவ் பண்டிட்!

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட். விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த ஷிவ் பண்டிட், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியான ‘சிக்மா’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வின்சென்ட் என்ற கிரே ஷேட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிவ் பண்டிட், ஆக்‌ஷன்–அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் த்ரில்லருக்கு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஷிவ் பண்டிட் பகிர்ந்து கொண்டதாவது, “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். 2002 ஆம் ஆண்டு முதன்முதலில் கேமரா முன்பு நின்றேன். ஆனால் நடிப்பு மீதான எனது பயணம் உண்மையில் நான் ஒன்பது வயதாக இருந்தபோதே…

Read More

ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் – விஷால் வெங்கட் இயக்கத்தில்

நாசர்- ரெஜினா கஸாண்ட்ரா- ரமேஷ் திலக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும்….. தொடர்ந்து வெற்றி படங்களை தமிழிலும் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.‌ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ‘பாம்- Bomb’ படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நாசர்- ரெஜினா கசாண்ட்ரா – ரமேஷ் திலக்- ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். ஹரிஹரன் ராஜூ கதை எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு…

Read More

சென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு – DHE PUTTU’ எனும் பெயரில் புதிய கேரள கலாச்சார பாணியிலான உணவகத்தை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான திலீப் மற்றும் காவ்யா மாதவன் தம்பதியினர் தொடங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உணவகங்களுக்கு சென்று ருசித்து சாப்பிடுவது தற்போது கொண்டாடப்பட்டு வரும் உணவு கலாச்சாரமாகும். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வகைகளை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து வழங்குவதில் நட்சத்திர தம்பதிகளான திலீப் – காவ்யா மாதவன் அவர்களுக்கு சொந்தமான ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மலையாளிகளுக்கும், கேரள உணவுகளை விரும்பி சாப்பிடும் மற்றவர்களுக்கும் கேரளாவின் பாரம்பரிய சுவையை வழங்கும் வகையில், சென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில்…

Read More

பத்தா விமர்சனம் 4/5.. கெத்தா ஒரு படம்..

கதை… 1980 கால கட்டங்களில் நடக்கும் கதை இது.. பக்தவச்சலம் என்ற பெயரின் சுருக்கம் தான் பத்தா.. நாயகன் விஜய்சேதுபதி அந்த ஏரியாவில் கெத்தான கேங்ஸ்டர்.. இவரின் மனைவி லிஜோ மோல்.. கோடை விடுமுறை சமயத்தில் ஒரு பள்ளிக்கு சென்ற இவர் அங்கு பாத்ரூமில் சிக்கிக் கொள்கிறார்.. அந்த சமயத்தில் அந்த பள்ளிக்கு வேறொரு காரணமாக வந்த மாணவன் ( சாய் பிரித்திவிராஜ் ) இவரை பாத்ரூமில் வைத்து அடைத்து விட்டு சென்று விடுகிறான்.. கோடை விடுமுறை என்பதால் அந்த பள்ளிக்கு யாரும் வரவில்லை.. அங்கேயே அடைப்பட்டு கிடக்கிறார் கெத்து நாயகன் விஜய் சேதுபதி.. அதன் பிறகு என்ன நடந்தது.? அவரை யாராவது காப்பாற்றினார்களா.? அவரால் வெளியே வர முடிந்ததா.? என்ன நடந்தது என்பதெல்லாம் வித்தியாசமான சுவாரசியமான மீதிக்கதை.. நடிகர்கள்… விஜய் சேதுபதி @ பத்தா லிஜோமோல்…

Read More

சிக்மா விமர்சனம்… முதல் படத்திலேயே இயக்குனராக சிக்சர் அடித்த சஞ்சய்

கதை… முதல்வர் விஜய்யின் மகன் சஞ்சய் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.. அவரின் முதல் படமே கேங்ஸ்டர் கதை சூதாட்ட கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.. பல கோடி ரூபாய் பணம் ஒரு கண்டெய்னர் லாரியில் இருக்கிறது.. அதனை திறக்கும் ஒரு சாவி தவறுதலாக வேறு ஒரு கும்பலிடம் சிக்கிக் கொள்கிறது.. இப்படியாக ஒரு கட்டத்தில் சாவி ஹீரோ கைக்கு வந்து விடுகிறது.. தன் அப்பா வாங்கிய பணத்திற்காக ஏற்கனவே கடனில் சிக்கி தவிக்கும் நாயகனுக்கு இந்த சாவி கிடைத்தவுடன் இதனை வைத்து தனக்கு வேண்டிய பணத்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்.. ஆனால் இவருக்கு இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகிறது.. அதனையடுத்து அவர் என்ன செய்தார்.? வில்லனிடம் சாவியை ஒப்படைத்து விட்டாரா அல்லது அதை வைத்து சதுரங்க வேட்டை ஆடினாரா என்பதெல்லாம் மீதி திரைக்கதை.. நடிகர்கள்… Sundeep…

Read More

நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர்!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். படக்குழுவினரின் ஏற்பாட்டில் நடுக்கடலுக்குச் சென்ற மீனவர்கள், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். கடலின் நடுவே மீனவர்களின் கைகளில் படத்தின் போஸ்டர் வெளியான இந்த நிகழ்வு,வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது. இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, அமுதவாணன், அப்புகுட்டி, திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.…

Read More

இயக்கமா…நடிப்பா…இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. நடிகை மகாலக்‌ஷ்மி, ” இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”. கலை இயக்குநர் பெஞ்சமின், “சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ அதை தான் படமாக்கியிருக்கிறார். நானும் என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய அணியினருக்கு நன்றி”. நடிகர் அன்புதாசன், ” இந்தப் படத்தில் கேஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”. நடிகர் ஷிவ் பண்டிட், “கடந்த ஒன்றரை வருடமாக எங்களுடைய…

Read More

மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் எதிர்பார்ப்புக்குரிய பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உரிய இடமும் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். சிரிப்பு, மகிழ்ச்சி என நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை…

Read More

என் கணவர் திரு. செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய “காகிதமலர்” என்னும் திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் “Asian Future” பிரிவில் ‘World Premiere’ ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

World Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். இந்தச் செய்தி மூலம் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் பெருமையுடனும், நன்றியுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசை தபஸ் நாயக் அவர்களுக்கும் செழியன் சாரின் உதவியாளர்கள் மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், R.P. ராஜா, பேச்சியப்பன் அவர்களுக்கும், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன், அறிமுக நடிகை ஜனனி செண்பகா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படத்தை அனுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், தமது பிஸியான நேரத்திலும் செய்து கொடுத்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும், எப்போது…

Read More

நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து ஜேசன் சஞ்சய் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜேசன் சஞ்சய பகிர்ந்து கொண்டதாவது, ”’சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு குழுவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அறிமுக இயக்குநராக என் மீது…

Read More