திரையரங்குகள் எதிர்பார்த்த சுல்தான் 600 திரைகளில்

தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியானசகுனி திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் டிரீம் வாரியர் நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியது அடுத்தடுத்து இந்நிறுவன தயாரிப்பில் வெளியான ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, என்.ஜி.கே, ராட்சசி, கைதி ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா தயாரிப்பு துறையில் தவிர்க்க முடியாத நிறுவினமானது டீரீம் வாரியர்  கார்த்தி,ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் டிரீம் வாரியர் தயாரிப்பில் தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரைகளில் இன்று வெளியாகியுள்ளது டிரீம் வாரியர் தயாரிப்பில் 2019ல் வெளியான “கைதி” படத்திலும் கார்த்திதான் காதாநாயகன் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெளியான என்று வெளியிடப்பட்ட கைதி தமிழ்சினிமாவில் வசூல், திரையிடல்,…

Read More

ரஜினிக்கு வாழ்த்து சொன்ன அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாடு அமைச்சரும், ராயபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ஜெயக்குமார் ரஜினிக்கு தாதாசாகேப் விருதி கிடைத்தமைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைத்துறையில்  நெடுங்காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும்  நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். எளிமையும், இனிமையும் கொண்ட அலட்டல் இல்லாத,குழந்தை மனம் கொண்ட குதூகலத்தோடு நிஜ வாழ்விலும் சரி,திரை வாழ்விலும் சரி உற்சாகத்தோடு வலம்வரும் நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழகம் தாண்டி உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டிருக்கும்  தலைசிறந்த நடிகர் அவர்.எது வந்தாலும் கலங்காத மனமும், நல்ல குணமும் அவருக்கு இந்த விருதை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். கடின உழைப்பு மிகப்பெரிய சாம்ராஜ்ய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு இந்த சாமானிய மனிதர் அடையாளமாய் நிற்கிறார். எனவே இவரை…

Read More

மாரிசெல்வராஜுக்கு ஐ லவ் யு சொன்னதனுஷ் அனுப்பிய கடிதம்

தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார் . தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இப்படத்திற்குசந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலைசென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது உளப்பூர்வமான, உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் இயக்குனர்மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி இருக்கும் இப்படம். அத்தனை வேலையகளையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி மாரி செல்வராஜ். பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் இல்லையே என்ற குறையை மாரி செல்வராஜ் போக்கி இருக்கிறார். வெற்றிமாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக்கிறோமோ அதேபோல் மாரிசெல்வராஜ் அவர்களையும் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்…

Read More

இரண்டாவது முறையாக அபராதம் செலுத்திய சன் பிக்சர்ஸ் படக்குழு

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரானா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களாகக் குறைந்த கொரானா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியஅளவில் நாள் ஒன்றுக்கு 60,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.  அதனால், கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மீண்டும் தீவிரமாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்.ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றிய பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. பழனியை அடுத்த காரமடைப் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு நடப்பதை அறிந்த மக்கள் அங்கு கூடினர். அதனால், காலை முதலே அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதற்கிடையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், ஊழியர்கள் உரிய விதிகளைப் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. அதனையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட…

Read More

இரட்டை அர்த்த பேச்சை தொடரும் ராதாரவி

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானவர் நடிகர் ராதாரவி. நடிகர் சங்க செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் உள்ளவர் திரைப்பட விழாக்களில் இவர் மைக் பிடித்தாலே நக்கல், நையாண்டி பேச்சுகளுக்கு குறையிருக்காது யாரை பற்றி பேசுகிறோம் அது சரியா தவறா என்பதை பற்றியெல்லாம் யோசிப்பது கிடையாது அந்த நேர கைதட்டலுக்கு பேசிவிட்டு கடந்து செல்வது இவரது வாடிக்கை இதுபோன்றுதான்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  திமுகவில் இருந்தபோது சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை குறிப்பிடும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவியின் சர்ச்சை பேச்சு குறித்து திரையுலக சங்கங்கள் மௌனம்…

Read More

ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் விருது

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆகிறது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது: “இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.” இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பழம்பெரும் பாலிவுட் நடிகர்கள்…

Read More

தமிழக கலைஞர்களின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஏப்ரல்1) மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதை அறிவித்திருக்கிறார். 2020 ஜூலை 17 ஆம் தேதி, தமிழ் சினிமாவில்இயக்குநர் இமயம் என்று புகழப்படும் மூத்தஇயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள்.அதையொட்டி தமிழ்த்திரை உலகத்திலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில்….. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல், ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் – தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கோரிக்கை. மாண்புமிகு திரு ஜவடேகர் அவர்களுக்கு, பெருமைமிகு…

Read More

தளபதி65 படப்பிடிப்புடன் இன்று தொடங்கியது

தமிழ் சினிமாவில் வசூலில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜய். படத்துக்கு படம் வசூலில் சாதனை படைத்துவருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் ரிலீஸான மாஸ்டரும் வசூலில் சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். விஜய் 65 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருக்கிறார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், தேர்தல் காரணமாக தள்ளிப் போய் மே 13ஆம் தேதி ரம்ஜானுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படம்…

Read More

அனுஷ்கா மீண்டு வருவாரா

நாயகன் முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களைப் போலவே, கதாநாயகி முக்கியத்துவமுள்ள படங்கள் இப்பொழுது அதிகமாக வெளியாகிவருகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே அப்படி வெளியாகும். ஆனால் இப்பொழுது அதிகமாக வெளியாக தொடங்கிவிட்டது. ஹீரோக்களுடன் டூயட் பாடவும், லூசு ஹீரோயினாகவும் தோன்றும் கதாபாத்திரங்கள் இல்லாமல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களை நம்ம ஹீரோயின்கள் தேர்ந்தெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நாயகிகளுக்கு முன்னுதாரணமாக, கதாநாயகி முக்கியத்துவமுள்ளப் படங்களை முதலில் தேர்ந்தெடுத்து, ஹிட்டும் கொடுத்தவர் அனுஷ்கா தான். அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் பெரியளவில் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இப்படத்துக்குப் பிறகுதான், நடிகைகள் பலரும் ஹீரோயின் முக்கியத்துவம் கொண்டப் படங்களில் நடிக்கத் துவங்கினார்கள். அப்படியான பெருமைக்குரிய அனுஷ்காவுக்கு இப்போது பெரிதளவில் படவாய்ப்பே இல்லை என்பதே சோகமான செய்தி. அனுஷ்கா நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் இஞ்சி இடுப்பழகி.…

Read More

நானே வருவேன் படப்பிடிப்பு எப்போது

தனுஷை நடிகராக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவும், கொண்டாடித் தீர்க்கவும் மிக முக்கியக் காரணம் செல்வராகவன். தனுஷ் – செல்வா கூட்டணியில் வெளியான படங்களே அதற்கு உதாரணம். காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய மூன்று படங்களைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் – செல்வராகவன் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாக இருக்கும் படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வைரலனது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக திரைக்கதை வசனத்தை எழுதிமுடிக்கும் வேலைகளில் இருந்தார் செல்வராகவன். தற்பொழுது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் செல்வராகவன். திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே படத்தை துவங்குகிறார்களாம். ஏனெனில், படத்தின் வேலைகள் வேகவேகமாக நடந்துமுடிகிறதாம். தற்பொழுது, ரூஸோ…

Read More