“பீட்சா பாய்ஸ்” படம் இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது!!

SEVEN HILLSS CINE CREATIONS நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் KN மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான “பீட்சா பாய்ஸ்”, இன்று எளிமையான மற்றும் கோலாகலமான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். இவர் இப்படத்திற்கு இசையையும் அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக நேகா நடிக்கின்றனர். பீசா ரெஸ்டாரண்டில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள், புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெற போராடுவது தான் இப்படத்தின் மையக்கரு. அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதனை எதிர்கொண்டு வெற்றி பெறும் பயணம் ஆகியவை காமெடி, செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் அம்சங்களுடன் கூடிய முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தில் ஜிம்மி கலி, சிவா, காக்கா முட்டை ரமேஷ், அருள், சோப்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.…

Read More

ருத்ரம் சினிமாஸ் மற்றும் SR பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படமான சிங்கா படத்தின் டீசர், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், அனைத்து வயதினரையும் கவரக்கூடிய உணர்ச்சி மிகுந்த கதையாக உருவாகியுள்ளது. ராஜ துரை சிங்கம் இயக்கியுள்ள இந்தப் படம், வசந்த் மற்றும் சற்குணம் போன்ற முன்னணி இயக்குநர்களிடம் பயிற்சி பெற்ற அனுபவத்தை பிரதிபலிக்கிறது. “பர்பெக்ட்” குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தின் டீசர், காதல், நட்பு மற்றும் உணர்ச்சி நிரம்பிய தருணங்களை அழகாக வெளிப்படுத்துகிறது. வேலாயுதம் ராஜேந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில், கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்து, கதையின் உணர்ச்சி மையமாகத் திகழ்கிறார். இவருடன் சிஜா ரோஸ், மீனாட்சி, ஆதித்யா கதிர் மற்றும் மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான ‘காதுக்குள்ளகுருவி’சமீபத்தில் வெளியாகி, அதன் இனிமையான மெலடி மற்றும் உணர்ச்சி ஆழம் காரணமாக…

Read More

அறிவுசார் சொத்துரிமை மற்றும் விளையாட்டு குறித்த 2026 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வை சென்னையில் கிரியா நடத்தியது!

*அறிவுசார் சொத்துரிமை மற்றும் விளையாட்டு குறித்த 2026 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வை சென்னையில் கிரியா நடத்தியது!* உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) கொண்டாடும் உலக அறிவுசார் சொத்து தினம் 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு, முழுமையான அறிவுசார் சொத்து மற்றும் வணிக சட்ட சேவைகளை வழங்கி வரும் கிரியா லா நிறுவனம், ‘ஐபி அண்ட் ஸ்போர்ட்ஸ்: ரெடி, செட், இன்னோவேட்’ தலைப்பின் கீழ் அரை நாள் நிகழ்வை சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடத்தியது. இந்த நிகழ்வில் நிறுவனங்கள், சட்ட நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் முனைவோர் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டு துறையில் அறிவுசார் சொத்து உரிமையின் (IP) அதிகரித்து வரும் முக்கியத்துவம் குறித்து நிகழ்வில் முக்கியமாக கலந்துரையாடினர். குறிப்பாக வீரர்களின் உரிமைகள்,…

Read More

தலைமுறைகளை கடக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்… அடுத்த ஹைலைட் சியான் 63!

தமிழ் திரைப்பட உலகில் பல தலைமுறைகளை கடந்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அதிரடியாக, விக்ரம் நடிக்கும் “சியான் 63” படத்தை அறிவித்துள்ளது. வீனஸ் பிக்சர்ஸ் திரு. டி. கோவிந்தராஜன், திரைக்கதைச் சித்தர் அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் சத்யா மூவிஸ் மரபையும், கலைவாணர் திரு. என். எஸ். கிருஷ்ணன், திரு. டி. ஜி. தியாகராஜன் போன்ற திரையுலக முன்னோடிகளின் 70 ஆண்டுகால திரையுலக பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் சத்யஜோதி பிலிம்ஸ், எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த், அஜித் குமார், கார்த்திக், முரளி, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல தலைமுறை முன்னணி நட்சத்திரங்களுடன் வெற்றிப்படங்களை வழங்கி, தமிழ் திரையுலகில் நீண்ட வரலாறும் உயர்ந்த மரியாதையும் பெற்ற…

Read More

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

‘இந்தக் கோபம் எல்லாம் ஒரு காலத்தில் அன்பாக இருந்தது’ என்று தொடங்கிய ஒன்று… இப்போது உங்களை சொல்ல வைக்கிறது – அதுதான் கர்ஜனை. நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குநர் சௌர்யுவ் இயக்கும் #VDxSHOURYUV படத்தில் நடிக்கிறார். அது பிரம்மாண்டத்தையும், இலட்சியத்தையும் உலகளாவிய சினிமாவை நோக்கிய ஒரு துணிச்சலான வீறு நடையையும் குறிக்கிறது. நீங்கள் அவரை அறிந்த விதத்தில் அல்ல… மாறாக நீங்கள் கற்பனை செய்திராத விதத்தில்… அந்த அறிவிப்பு போஸ்டரில் …விஜய் தேவரகொண்டா உலோக பட்டைகளால் நான்கு நாய்களை பிடித்தபடி முன்னோக்கி நடந்து செல்வது காட்சிப்பபடுத்தப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் ஆறு அல்லது ஏழு பேர் அவருடன் நடந்து செல்கின்றனர். இதுதான் ட்ரீம் கலெக்டிவ். உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களின் சக்தி வாய்ந்த குழு… ஒவ்வொருவரும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் … ஒவ்வொருவரும் முக்கியமானவர் ‌.. ஒவ்வொருவரும்…

Read More

சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 ஜனவரி 21 வெளியீடு !! ; இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்ட காதல் காவியம்!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027 குடியரசு தின வார இறுதியை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் 2027 ஜனவரி 21 வியாழக்கிழமை, அன்று வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த காதல் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடிக்கின்றனர். வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. https://www.instagram.com/p/DXOa43wCBeW/?igsh=MTFieDRjamRmczBtZA== பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஆழமான கதை சொல்லும் முறைப்படி, இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அனுபவத்தையும், ஆழமான உணர்ச்சியையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமான அளவில் உருவாகும் “லவ் & வார்”, சஞ்சய் லீலா பன்சாலியின் மிகபெரும் கனவுப்படைப்பாக உருவாகி வரும், பிரம்மாண்டமான காதல் படைப்பாகும். கதை அமைப்பும்,…

Read More

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது, “படத்தின் தலைப்பு ‘பிரேக்ஃபாஸ்ட்’ என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது” என தெரிவித்தார். நடிகை அமிதா, “காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை…

Read More

சீயான் விக்ரம் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படம் ஸ்டைலீஷ் புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்டது !!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இப்போதே ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் உயர்த்தியுள்ளது. தனித்துவமான கதைக்களம் மற்றும் ஸ்டைலிஷ் திரைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 ல் சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்கிய “இருமுகன்” படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த கூட்டணி…

Read More

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்…

கதை… அணு ஆயுத பேரழிவை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர் கௌதம் கார்த்திக் குழுவினர்… அதற்கு எதிராக இந்திய உளவாளிகள் மஞ்சு வாரியார் மற்றும் ஆர்யா எதிர்த்து போராடுகின்றனர். இறுதியில் வென்றது யார்.? மிஸ்டர் எக்ஸ் யார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… – Arya – Gautham – ⁠Gautham Ram Karthik – Amaran – ⁠Sarath Kumar – Parameshwar – ⁠Manju warrier – Indira Verma – ⁠Anagha – Keerthana – ⁠Athulya – Aditi – ⁠Raiza Wilson – Nirmala – ⁠Kali Venkat – Ponnuswamy – ⁠Jayaprakash – Vamanamoorthy நீருக்கு அடியில் இருந்து அறிமுகமாகிறார் ஆர்யா.. அந்த காட்சி அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளது.. அந்த கேரக்டருக்கு இவரது உடல் பக்காவாக பொருந்தி போகிறது.. ஆர்யாவுக்கும் அனகாவுக்கும் உள்ள…

Read More

இரட்டை முகத்தில் மர்ம மிரட்டல் – ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’ கவனம் கவரும் திகில் முயற்சி!

சூனியம், கருமம், மர்ம நம்பிக்கைகள் போன்ற அடிப்படையில் உருவாகும் திகில்–மர்ம திரைப்படமாக ‘சூனியம்’ உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகும் இந்த படம், ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களின் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. பல பரிமாணங்களில் தன்னை நிரூபித்துள்ள நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி, இந்த படத்தில் இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் தோன்றுகிறார். ஹீரோவும் வில்லனுமாக இரட்டை கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இந்த படத்தின் முக்கிய பலமாகும். இந்த ‘டுவல் ரோல்’ அணுகுமுறை, கதைக்கு கூடுதல் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. M3 மீடியா மற்றும் மஹா மூவீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை சூர்யாஸ் இயக்குகிறார். மகர்ஷி கொண்ட்லா வழங்கும் இப்படத்திற்கு மகேந்திர நாத் கொண்ட்லா தயாரிப்பாளராக உள்ளார். இசையமைப்பாளராக அச்சு ராஜாமணி பணியாற்ற, ஆஸ்கர் விருது பெற்ற சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுதுகிறார். தொழில்நுட்ப அணியிலும் வலுவான…

Read More