லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு !!

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது. ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ்.…

Read More

தொடர்ச்சியாக அன்பு, ஊக்கத்தை பொழிந்து வரும் ரசிகர்களுக்கு நன்றி – சாய் அபயங்கர்

திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய இந்தப் பாடல், வளர்ந்து வரும் இன்டிபென்டென்ட் இசை உலகத்திற்கு மற்றொரு உயிரோட்டமான சேர்க்கையாக அமைந்துள்ளது. அதன் தனித்துவமான இசை ரசனை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகிறது. வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சாய் அபயங்கர், “எனக்கு இந்த தளத்தை வழங்கிய சந்தோஷ் அண்ணா மற்றும் மகேஷ் அண்ணாவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் எனது தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் வலுவான தூண்களாக இருந்துள்ளனர். அவர்களின் ஆதரவு எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, என்மீது தொடர்ச்சியாக அன்பு மற்றும் ஊக்கத்தை பொழிந்து வரும் ரசிகர்களுக்கு…

Read More

”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!

‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடலில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பான வரவேற்பு காரணமாக, பார்வையாளர்கள் மத்தியிலும் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகிறது. தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி…

Read More

செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு “மனிதன் தெய்வமாகலாம்” படக்குழு அதிரடி டீசரை வெளியிட்டது.

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான திரைப் பங்களிப்புக்காக அறியப்பட்டவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கான சிறப்பு விருந்தாக, அவரது வரவிருக்கும் திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.அது உடனடியாக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 70 விநாடிகள் நீளமான இந்த டீசர், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களின் திறமையான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துகிறது. சிறுமி, ஆசிரியர் மற்றும் செல்வராகவன் இடையேயான குரல் உரையாடலுடன், படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வலுவான காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு ஈர்க்கும் திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் இந்த டீசர், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து உடனடியாக நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது. மனிதன் தெய்வமாகலாம் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி…

Read More

நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும்…

Read More

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி” பட டைட்டில் டீசர் வெளியானது !!

புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் டைட்டில் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் தரும் காட்சிகளால் அதிர வைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின், பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என கண்கள் விரிய ஒரு புதுமையான கதைக்களத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறது. உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த டைட்டில் டீசர் காமெடி டிராக்கில் மாறி, வெகு சுவாரஸ்யமாக நிறைவு பெறுகிறது. இந்த படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜூன் தாஸ்,…

Read More

நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி” – சாய் அபயங்கர் உருவாக்கத்தில், கலாச்சாரமும் நவீன இசையும் கலந்த இசை அனுபவம்!!

நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “பவழ மல்லி” பாடல் பாரம்பரியத்தின் மணமும், நவீன இசையின் அதிரடியும் ஒன்றாக கலந்த தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசைமைத்துள்ளார். இந்த பாடலின் மிகப்பெரிய சிறப்பாக அமைந்துள்ளது ஸ்ருதிஹாசனின் குரல். அவரது குரல் பாடலுக்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியையும் ஆழமான உணர்ச்சியையும் அளிக்கிறது. மணமகன்–மணமகள் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான ஊடலை மையமாகக் கொண்டு, கேள்வி–பதில் பாணியில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மணமகளின் பதில்கள் ஸ்ருதிஹாசனின் குரலில் இனிமையாக ஒலித்து பாடலுக்கு…

Read More

“ஹேப்பி ராஜ்” மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெளியீடு!

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் feel-good திரைப்படமான Happy Raj வரும் மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேர்மறை உணர்வுகள், இளமை, உற்சாகம் மற்றும் மனதை வருடும் உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு முழுமையான திரை அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஜெயவரதன் தயாரிக்கும் இந்தப் படம் Beyond Pictures நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். மேலும் ஜெயகாந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார். இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ள இந்தப் படம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் சுவாரஸ்யமான எளிய கதை சொல்லும் முறையால் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்புக்கேற்ப Happy Raj ஆக G. V. பிரகாஷ் குமார் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பின் மூலம் அவர் இந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார்;…

Read More

ஓ பட்டர்பிளை – விமர்சனம்

கதை… ஒரு மலைப்பகுதிக்கு தன் கணவரோடு செல்கிறார் நாயகி நிவேதா சதீஷ்.. இவர்கள் அங்கு தங்குகின்றனர்.. அப்போது கணவர் அங்கே தன் பள்ளி நண்பர் ஒருவரை சந்திக்கிறார். அவரை அழைத்துக் கொண்டு தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வருகின்றனர். அப்போது நிவேதா அதிர்ச்சி ஆகிறார்.. ஏனென்றால் தன் கணவர் அழைத்து வந்த நண்பர் இவரின் முன்னாள் காதலன். அதன் பின்னர் அந்த வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப்பட மீதிக்கதை.. நடிகர்கள்… நிவேதா சதீஷ் கதையின் நாயகியாக இவரை சுற்றியே கதைக்களம் பின்னப்பட்டிருக்கிறது ஒரு பக்கம் கணவர் அடுத்த பக்கம் தனது முன்னாள் காதலன் இருவருக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் முகபாவனைகளை உணர்ச்சிபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார். முன்னாள் காதலனாக சிபி.. ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.. முன்னாள் காதலியை பார்த்து ஏங்கும் கேரக்டர்.. நாயகியின் கணவராக அதுல்.. குடிகார கொஞ்சம்…

Read More

முஸ்தபா முஸ்தபா – விமர்சனம்…

கதை… சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி இருவரும் பள்ளிப் பருவம் முதல் நண்பர்கள்.. ஒரு கட்டத்தில் சதீஷ் & மோனிக்கவும் காதலிக்கிறார்கள்.. இவர்களின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் திடீரென இணையத்தில் சதீஷ் நடித்த ஒரு பிட்டு படம் வெளியாகிறது.. அது ஏற்கனவே சதீஷ் நடித்த ஒரு ஷூட்டிங் பிட்டு படம் என்றாலும் அதை இணையத்தில் பதிவேற்றியது யார் என்று தெரியாமல் நண்பர்கள் தடுமாறுகின்றனர்.. இந்த பிட்டு படம் வைரலானால் தனது திருமணம் நின்று விடுமோ என்ற பயத்தில் அந்த வீடியோவை தடுக்க நினைக்கிறார். அவரால் அது முடிந்ததா இறுதியில் என்ன ஆனது என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் சதீஷ் தனக்கு ஏற்ற வகையில் கதையை தேர்வு செய்து இருக்கிறார் பிட்டு படம் நாயகன் என்ற போர்வையில் காமெடியில் கை கொடுத்திருக்கிறார்.. நாயகி…

Read More