‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா!!

 ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான # பிரபாஸ் ஹனு –  பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ என அடுத்தடுத்து வெற்றி பெற்ற படங்களில் நடித்த பிரபாஸ் அடுத்ததாக இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிக்கிறார். கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக ‘# பிரபாஸ் ஹனு’ எனும் இந்த படத்தில் இணைகிறார்கள். இந்த கூட்டணியின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுவதால்.. இந்த படைப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் பிரம்மாண்டமான பங்களிப்புடன்…

Read More

ஹாஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன் @ 2.22’!

எளிமையான, புது சிந்தைனைகளுடன் வரும் கதைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க திரை ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர். அதுபோன்ற கதைகள் வரும்போது நிச்சயம் அது பெரும் வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோன்ற பல கதைகள் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘டோபமைன் @ 2.22′ படத்தில் இணைந்துள்ளனர். திரவ் இந்தப் படத்தை இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர், நடிகர் திரவ் பகிர்ந்துகொண்டதாவது, “’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாதல் பற்றிய கதையாக இது நகரும்.…

Read More

வேதா ஹிந்தி திரைப்பட விமர்சனம்…!!

கதை… வடமாநிலத்தில் கீழ் ஜாதியில் பிறந்த நாயகி குத்துச்சண்டையில் சாதிக்க வேண்டும் நினைக்கிறாள். ஆனால் இவர் ஒரு பெண் என்பதால் இவரது உறவினர்கள் அதற்கு எதிராக நிற்கின்றனர். ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட ஜான் ஆபிரகாம் உதவியுடன் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் ஷர்வாரி வாக்.. இறுதியில் என்ன ஆனது.? நினைத்ததை சாதித்தாரா ஷர்வாரி வாக்..? ஜான் ஆபிரகாம் எப்படி உதவினார்.? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… படம் முழுக்க சீரியஸான தோற்றத்தில் வருகிறார் நாயகன் ஜான் ஆபிரகாம்.. ஆனால் தமன்னாவுடன் நடிக்கும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் புன்னகை பூக்கிறார்.. அதே சமயம் ராணுவத்தில் இருக்கும்போது முறுக்கேரிய உடம்பு கட்டுக்கோப்பான உடலுடன் அசத்தலான தோற்றத்தில் வருகிறார்.. நாயகி ஷர்வாரி வாக்.. இவரது கேரக்டர் பெயர் தான் வேதா.. அதை உணர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.. தன்னுடைய சிகை…

Read More

‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு 2 விருதுகள்; சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நித்யா மேனன்!

  கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம். சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அயன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன், சர்கார், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர்கள் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கூலி’ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் ஆகும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன்…

Read More

காமெடி நடிகர் தெனாலி மகனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி கல்வி கட்டணம் முழுவதும் செலுத்தினார்!

விவேக் உடன் அதிக படங்களில் காமெடியில் நடித்தவர் தெனாலி. இவரது மகன் வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று நிலமையை கூற, உடனடியாக 76′ ஆயிரம் ரூபாய் கல்லூரியில் கட்டி, வருங்கால பிசியோதெரபி டாக்டரை உருவாக்கி உள்ளார் விஜய் சேதுபதி! என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது என நன்றியோடு தெரிவித்தார் நடிகர் தெனாலி!

Read More

இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்ற இயக்குநர் நித்திலன் சாமிநாதன்!!

மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார்! நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival) இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ‘சிறந்த இயக்குநர்’ விருதை வென்றுள்ளார். இந்த விஷயம், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய திரையுலகில் மதிப்பு மிக்க இயக்குநர்களான கரண் ஜோஹர் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி), விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்), இம்தியாஸ் அலி (அமர் சிங் சம்கிலா), கபீர் கான் (சந்து சாம்பியன்), ராஜ்குமார் ஹிரானி (டன்கி), மற்றும் ராகுல் சதாசிவன் (பிரமயுகம்) ஆகியோரின் படங்களும் இந்தப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக நித்திலன் சாமிநாதன் பேசியிருப்பதாவது, “மகிழ்ச்சியில் எனக்குப் பேச…

Read More

‘அந்தகன்’ திரைப்படம் – வெற்றி விழா!!!

ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.‌ இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில், ”’அந்தகன்’ படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் ‘கரிஸ்மா’…

Read More

விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது!!

  ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியா திரைப்படம் நாடு முழுவதும் பலத்தை எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது. திரைப்படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, “ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திருக்கிறது. தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி அற்புதங்களை செய்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. இதன் ஒரு சிறு பகுதியான டிரைலர்…

Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ பத்திரிகையாளர் சந்திப்பு!!

 ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா ஆகியோர்…

Read More

டிமான்டி காலனி 2 விமர்சனம் 3.75/5.. திகில் விருந்து

  கதை… டிமான்டி காலனி 2015 ஆம் ஆண்டு வந்தது.. அந்தப் படத்தில் நாயகன் அருள்நிதி இறப்பதாக கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.. அப்படி இருக்கையில் இந்த படம் எப்படி தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இருக்கும்.. அதை அழகாகவே திரைக்கதை அமைத்து ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு திகில் விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆறு வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்த தன் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைத்து அவரது ஆவியுடன் பேச முற்படுகிறார் பிரியா.. முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அப்பா அருண் பாண்டியன் வேறு வழியின்றி மகளுக்காக ஒத்துக் கொள்கிறார்.. அதன்படி ஆவிகளுடன் பேசுவதற்காக ஆவிகள் உலகில் நுழைந்த பிரியா அவர்கள் அருள்நிதி ஆவியை நிஜ உலகிற்கு அழைத்து வருகிறார். நிஜ உலகில் அருள்நிதியின் (இரட்டை பிறவி)…

Read More