போட்டோகிராபர் – விமர்சனம்.. 3/5.. திரில்லர் போட்டோக்ராபர்

கதை… நரேன் – தேவி மகேஷ் இவர்களின் மகன் அஸ்ரப்.. தன் தந்தை தொழிலதிபராக இருந்தாலும் அவரை சார்ந்து வாழாமல் தனக்கு பிடித்த போட்டோகிராபி தொழிலில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறார் நாயகன் அஷ்ரப்.. இதுவரை யாரும் எடுத்திடாத ஒரு போட்டோ கிளிக் சரித்திரம் படைக்க வேண்டும் என விரும்புகிறார். அப்போதுதான் அவருக்கு மதிகெட்டான்சோலை என்ற அடர்ந்து காட்டுப்பகுதியில் ஒரு தங்க மரம் இருப்பதாக அறிகிறார்.. எனவே அதைத் தேடி அடர்ந்த காட்டுக்குள் தனியாக செல்கிறார்.. ஆனால் அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்புவதில்லை என அந்த கிராம மக்கள் சொல்கின்றனர்.. ஆனாலும் ரிஸ்க் எடுத்து செல்கிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அவர் உயிருடன் திரும்பி வந்தாரா? தங்க மரத்தை போட்டோ எடுத்தாரா.? அதன் பின்னர் நடந்தது என்ன என்பதெல்லாம் திரில்லர் கதை.. நடிகர்கள்… அஷ்ரஃப்…

Read More

‘செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.   இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது: “இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க…

Read More

GDN விமர்சனம் – GD Naidu

கதை… கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடுவின் இளம் வயது முதல் அவர் செய்த தொழில் புரட்சி வரை இந்த படத்தில் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர காலத்திற்கு முன் அவரின் கண்டுபிடிப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனால் அவருக்கு ஆங்கிலேயர்கள் எந்த வகையான தடைகள் போட்டார்கள் தொல்லை கொடுத்தார்கள்.. அதையெல்லாம் எப்படி கடந்து இந்தியாவின் மாபெரும் சாதனையாளர் ஆனார் என்பதுதான் சரித்திர கதை.. நடிகர்கள்… R. Madhavan Priyamani Jayaram Dushara Vijayan Sathyaraj Vinay Rai Aditi Balan Karunakaran Mohan Raman Thambi Ramaiah Tejeenthan Arunasalam Brigida Saga Sheela Rajkumar Shilpa Sreekumar ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து ஜிடி நாயுடு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மாதவன்.. 1930 அந்த காலகட்டத்திற்கு ஏற்ப உடல் மொழி.. அரசுக்கு…

Read More

டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் – மீண்டும் ஒன்றிணையும் ‘குப்பி’ டீம்

மலையாள திரையுலகில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அத்திரைப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இவர்களின் அடுத்தகட்ட பிரம்மாண்ட திரைப்படம் குறித்த அறிவிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது. திரையுலக வட்டாரங்களின்படி, இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படம், இருவரின் திரைப் பயணத்திலேயே மிக அதிக பொருட்செலவில் (High-budget) உருவாகும் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் எனத் தெரியவருகிறது. இவர்களுடன் ‘குப்பி’ படத்தில் நடித்த சேத்தன் ஜெயலாலும் இப்புதிய படத்தில் இணையவுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘குப்பி’, நடிகர் டொவினோ தாமஸின் திரைப் பாதையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் ‘தேஜஸ் வர்க்கி’ எனும் பொறியாளராக அவரது…

Read More

டார்க் ஹியூமர், அதிரடி, கற்பனை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் சர்வதேச அளவிலான கதைக்களத்தில் விரியும் ‘மூடர் கூடம் 2’

கல்ட் கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. காலப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் ‘மூடர் கூடம்’. 13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ‘மூடர் கூடம்’, தற்போது புதிய பரிமாணத்துடன் மீண்டும் திரும்பி வருகிறது. படத்தின் தலைப்பும், முதல் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறுமனே சீக்வல் படமாக இல்லாமல், முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்கவைத்துக்கொண்டு, அதிரடி,…

Read More

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான, சமூக வேர்களைக் கொண்ட, தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது. குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டனின் அடுத்த படமாகவும் மக்கள் காவலன் அமைகிறது. மேலும், தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார். இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்”,…

Read More

உள்ளடக்க உருவாக்கம் முதல் வணிகமயமாக்கல் வரை இந்திய திரைப்படத் துறைக்கான தேசிய B2B சந்தையை உருவாக்கும் புதிய முயற்சி

இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கங்களை வணிகமயமாக்கும் நோக்கில், Producer Bazaar முன்னெடுக்கும் Discovery Film Market (DFM), ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF)-வின் முக்கிய அங்கமாக இந்த ஆண்டு அறிமுகமாகிறது. படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், OTT தளங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்களை ஒரே தொழில்முறை வணிகச் சூழலில் இணைக்கும் தேசிய அளவிலான B2B திரைப்பட சந்தையாக இது உருவாகியுள்ளது. BISFF மேடையில் Producer Bazaar-ன் தேசிய முன்னெடுப்பு: ஆகஸ்ட் 15 மற்றும் 16 (சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் Producer Bazaar Discovery Film Market, இந்திய திரைப்படத் துறையின் படைப்பாற்றலுக்கும் வணிகத்திற்கும் இடையிலான…

Read More

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘ஷம்பாலா’ திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான ‘கரிகாலா’ மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ‘கரிகாலா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களை ஒரு பிரம்மாண்டமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. அடர்ந்த மர்மக் காட்டில், கையில் வாளை உயர்த்தியபடி வீரராக குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து…

Read More

‘யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது

யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா, இன்று (04.08.2026) சென்னையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் முத்துக்குமார், புகழ், சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ், பவேல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மதன் துரை இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர் விஜய் டிவியில், அது இது எது, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், சிக்ஸர், சட்டம் என் கையில் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஒளிப்பதிவை பி.ஜி. முத்தையா மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், கலை இயக்குநராக தினேஷ் குமார் பணியாற்றுகின்றனர். ஸ்டண்ட் இயக்குனராக கணேஷ் பணியாற்ற, தயாரிப்பு நிர்வாக பணியை இரா.குமரேசன் மேற்கொள்கிறார்.…

Read More

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ இன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நடிகர்கள் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகிறது. நடிகர் முரளி, “இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான படம் இது. இதில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வரும் ஏழாம் தேதி திரையரங்குகளில் சென்று கண்டிப்பாக படம் பாருங்கள். தயாரிப்பாளர்கள், மேடி சார், இயக்குநர் கிருஷ்ணகுமார் என அனைவருக்கும் நன்றி”. ஜி.டி. ராஜ்குமார், “இது சினிமாவாக விதை போட்டவர் அரவிந்த்தான். அவர்தான் எனக்கு கிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார். கதையய் பாட்காஸ்ட்டாக கிருஷ்ணா கொண்டு வந்தார். ஏற்கனவே சிலர்…

Read More