அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe) வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில்… *நடிகை அனுபமா பேசியதாவது:* “‘ஜான் டோ’ மிகவும் முக்கியமான, ஆழமான உளவியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குள் செல்லும்போது நீங்கள் ஒரு நபராக இருப்பீர்கள். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிச்சயமாக இன்னொரு நபராக மாறியிருப்பீர்கள். அந்த அளவுக்கு இப்படம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார். *நடிகர் படவா கோபி பேசியதாவது:* “இந்தப் படத்தில் என்னுடைய குரலைப் பற்றிப்…
Read Moreஇந்தியத் திரையுலகமே திரும்பிப் பார்த்த பிரம்மாண்டக் கொண்டாட்டம்! KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழாவில் குவிந்த முன்னணி நட்சத்திரங்கள்!
திரையுலக நட்சத்திரங்கள் திரள, பிரம்மாண்டமாக நடைபெற்ற KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழா! இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் சங்கமித்த KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமணம்! கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமண விழா! KRG Group of Companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி – KRD Hospitality நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபா ரவி தம்பதியினரின் மகனும், KRG Productions நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளருமான தீபக் ரவி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் D.M. கதிர் ஆனந்த் – கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கீதா கதிர் ஆனந்த் தம்பதியினரின் மகள் கே. செந்தாமரை ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் 31-ம் தேதியும், திருமணம் நவம்பர் 1-ம் தேதியும் சென்னையில் வெகு…
Read More‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!
4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமா நிகழ்வுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் வெளியீட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோற்றம் இந்தப் போஸ்டர்கள் மூலம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணி, மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதைக்களம்…
Read Moreதமிழ்த் திரையுலகிற்கு சமமான வாய்ப்பை ஏற்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி. – தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)
*தமிழ் திரைப்படங்களுக்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்த் திரையுலகிற்கு சமமான வாய்ப்பை ஏற்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி. தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதிகளில் தமிழ் திரைப்படங்களின் காட்சிகளை காலை 6 மணிக்குத் தொடங்கி, அதிகாலை 2.30 மணி வரை ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. 2023 ஜனவரி மாதத்தில் பிரபலமான ஒரு திரையரங்கில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலை 5 மணி மற்றும் 6 மணி காட்சிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா/தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தமிழ் திரைப்படங்கள் காலை 6 மணிக்கே…
Read Moreசிவகார்த்திகேயன் வழிகாட்டுதலில், பெசன்ட் நகர் உ.வே.சா. நூலகத்தில் சிறப்பு ஆய்வு சுற்றுலா!
தமிழின் தொன்மை, கலை மற்றும் இலக்கியப் பண்பாட்டின் மீது பேரார்வம் கொண்ட நடிகரும்,தயாரிப்பாளருமான திரு. சிவகார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட நற்பணி இயக்கத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ சார்பில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ் தாத்தா’ உ.வே.சா நூலகத்திற்கு சிறப்பு ஆய்வு சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது. நமது செம்மொழி தமிழின் மாண்பையும், பழம்பெரும் வரலாற்றையும் இன்றைய தலைமுறையினரும், நற்பணி இயக்கத்தை சார்ந்த தோழர்களும் ஆழமாக உணர்ந்து அறிந்து கொள்ளும் உயரிய நோக்கத்தோடு இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இப்பயணத்தின் போது, சங்க இலக்கியங்களையும் அரிய ஓலைச்சுவடிகளையும் தேடித்தேடி தொகுத்து தமிழுக்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் அரிய நூல்கள், பழங்கால சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முறைகளை நூலக நிர்வாகிகள் நற்பணி இயக்கத்தின் கலை இலக்கிய பண்பாட்டுப்…
Read Moreமூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இந்தச் சிறப்பு வழிபாட்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இவர்களுடன் இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி அவர்களும் கலந்துகொண்டார். திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு, படக்குழுவினரின் இறைநம்பிக்கையையும் பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. சுந்தர்.சி இயக்கத்தில்,…
Read Moreசூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யா – ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜெயஸ்ரீ தாமோதரன்- ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
Read More33 வருடம் கழித்து மீண்டும் திரைக்கு வரும் ‘ஜென்டில்மேன்’ ! மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனின் மெகா பிளான்!!
இந்திய திரைப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றான படம் ‘ஜென்டில்மேன்’. மீண்டும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர மெகா தயாரிப்பாளர் குஞ்சுமோன் பிரமாண்டமாக முடிவு செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 11- ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த மறு வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் வகையில், புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளனர். 1993-ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படம், S.ஷங்கர் இயக்குநராக அறிமுகமான படைப்பாகும்; இவரது திரைக்கதை, பிரமாண்ட காட்சி அமைப்பு, பாடல்களை உருவாக்கிய விதம் என்று இப்படம் ஷங்கருக்கு சினிமாவில் தனி இடத்தை கொடுத்தது. இதன் மூலம் தனது பாணியில் கலைஞர்களை உருவாக்க முடியும் என்று நிரூபுத்து காட்டியவர் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். 800க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்த அனுபவங்கள்…
Read Moreமெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் #RC17 # RC2Sukku திரைப்படம் இன்று தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கிளாப்ஸ் அடித்தார். மேலும், தில் ராஜுவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையைப் படக்குழுவினரிடம் வழங்கினார். டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற இயக்குநர்கள் முதல் காட்சியை இயக்கினர். ராம் சரண், சுகுமார் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் தெலுங்கில் பெரும் வெற்றி…
Read Moreஇசைக் கடவுள் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!
ஒரு பாடலுக்கு ஆறுமாதம் போராடுகிறவர்களுக்கு மத்தியில், தனது “கடவுள் தந்த பரிசு” திரைப்படத்திற்காக ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்து, அடுத்த ஆறு நாட்களில் அற்புதமான ஆறு பாடல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் பதிவு செய்து கொடுத்த இசைக் கடவுள் இளையராஜாவை, மக்கள் நாயகன் ராமராஜன், ‘கடவுள் தந்த பரிசு’ இயக்குநர் காசிமாயன், வசனகர்த்தா ராஜகோபால், தயாரிப்பு நிர்வாகி ராம் பிரபு ஆகிய படக்குழுவினருடன் சந்தித்து, தனது நன்றியைத் தெரிவித்து, தான் கடவுளாக மதிக்கும் இளையராஜாவிடம் ஆசி பெற்றார் ராமராஜன்! காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். விரைவில் படப்பிடிப்பை துவங்கவிருக்கும் படக்குழுவினர், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்! கூடுதல் சிறப்பு செய்தி – ———————————— ‘கரகாட்டக்காரன்’…
Read More