பொங்கல் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படம் – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்! இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த வீடியோவிற்கு, இந்தியில் பங்கஜ் திரிபாதி, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் சௌபின் ஷாஹிர், கன்னடத்தில் கிச்சா சுதீப், தமிழில் இயக்குநர் பா. இரஞ்சித் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். அப்போகலிப்டிக் பின்னணியில் உருவாகியுள்ள…
Read Moreகதாப்பாத்திரங்கள் நிறைந்த மர்மமான போஸ்டர்… வெளியீட்டுத் தேதியுடன் களமிறங்கும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’!
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர், மர்மம் நிறைந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில், காவலர் சீருடையில் இருக்கும் அர்ஜுன் தாஸின் தோற்றம் மையமாக இடம்பெற்றுள்ளது. அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய தடயங்களை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கதாபாத்திரங்களின் முகபாவனைகளும், ஒன்றோடொன்று தொடர்புடையது போன்ற புகைப்படங்களின் தொகுப்பும் படத்தின் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ‘ஜான் டோ’ என்ற தலைப்புடன் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ள…
Read Moreநடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!
நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடலை லாஸ் ஏஞ்சல்ஸில் பார்த்ததன் மூலம், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஏழு வயதாகும் ஐரா மற்றும் இன்று (அக்டோபர் 30) தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடும் யதர்வ் ஆகியோருக்கு ‘ராமாயணா’ திரைப்படம் மறக்க முடியாத ஸ்பெஷல் நினைவாக எப்போதும் இருக்கும். இப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. அத்தோடு, ராவணன் கதாபாத்திரத்திலும் யஷ் நடித்துள்ளார். நடிகர் யஷ்ஷின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லான இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை அவரது குழந்தைகள் பார்த்திருப்பதும் நெகிழ்வான தருணமாக அமைந்துள்ளது. இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் ஐரா மற்றும் யதர்வ் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் காரணம்தான். ஐரா என்ற பெயர், மகாலட்சுமியின்…
Read Moreசிங்காரம் விமர்சனம்… 3.5/5..
கதை… எம் எஸ் பாஸ்கர் – தீபா இருவரும் தம்பதிகள்.. இவர்களின் மூத்த மகன் யோகி பாபு.. இவர்களுடன் ஜாவா சுந்தரேசன், கனேஷ்கர், கல்கி, மனோபாலா ஆகியோரும் உண்டு.. இவர்கள் குறவர் – குறத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள்.. ஆனைமலை என்ற பகுதியில் இவர்கள் கூடாரம் அமைத்து அங்கு வசித்து வருகின்றனர்.. இவர்களின் கூட்டத்தில் இருக்கும் பெண்கள் மீது காம ஆசை கொள்கிறார் எம்எல்ஏ தம்பி சென்ட்ராயன்.. ஒரு கட்டத்தில் இரவில் வந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதனால் அவர்களை கட்டி வைத்து அவமானப்படுத்துகிறார் யோகி பாபு.. இதனால் இருவருக்கும் பிரச்சனை வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.? எம்எல்ஏ தன் அதிகாரத்தால் இவர்களை என்ன செய்தார்.? ஏற்கனவே நிரந்தர இடம் இல்லாமல் வாழும் இவர்களின் நிலை என்ன ஆனது.? என்பதெல்லாம் நீதிக்கதை.. நடிகர்கள்… கதை நாயகனாக…
Read Moreதெய்வ அருள்மனத்தோடு ‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!
தென் தமிழகத்தின் திருவிழாக்களையும் மக்களின் பண்பாட்டையும் தன் காந்தக் குரலினாலும் வில்லுப்பாட்டு இசையினாலும் கட்டிப்போட்ட கிராமத்துக் கலைஞர் மாதவி, முதன்முறையாகத் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அடியெடுத்து வைத்துள்ளார்! ‘பம்பர்’ படப்புகழ் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ (அக்டோபர் 30) வெளியாகி, பக்தியையும் கிராமத்து உணர்வுகளையும் நேசிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வில்லுப்பாட்டு கலையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்பு பெற்ற வில்லிசைக் கலைஞர் மாதவி, முதன்முறையாகச் சினிமாவில் பாடியுள்ள இந்த ஆன்மீகப் பாடல், கிராமத்துக் கோவில் திருவிழாவின் மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக அதிர்வை அப்படியே உங்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும்! இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாரம்பரியமிக்க நாட்டுப்புற இசையில் உருவாகியுள்ள 7 பாடல்களில், இந்தப் பாடல் திருவிழா…
Read Moreஇந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்த ராக்ஸ்டார் டிஎஸ்பி!
‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வேணு எல்தண்டி இயக்கத்தில், தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ‘எல்லம்மா’ திரைப்படம் வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.
Read More‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து- தர்ஷிகா நடிக்கும் ‘தி லாஸ்ட் கேஸ்’ (The Last Case) திரைப்படத்தின் தொடக்க விழா!
அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘ . அந்தப் படத்தை பிக்பாஸ் புகழ் முகங்கள் சித்து, தர்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் பாலாஜி இயக்கியிருந்தார். அது ஒரு கிரைம் திரில்லராக உருவாகியிருந்தது. அதே இயக்குநர் பாலாஜி தனது அடுத்த முயற்சியாக ‘தி லாஸ்ட் கேஸ்’ என்கிற படத்தைத் தொடங்குகிறார். இப்படத்தையும் அதே ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்திலும் முந்தைய படத்தில் நடித்த சித்துவே நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தர்ஷிகா நடிக்கிறார் .மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்கள் நடிக்கிறார்கள் .இந்தப் படத்தின் பூஜை இன்று பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்தப் புதிய படத்தின் போஸ்டர்களைப் பார்க்கும்போது ‘ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும் .அது குற்றவியல்…
Read Moreவேட்டுவம்’ பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பொங்கல் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படம் – பா. இரஞ்சித்தின் பிரம்மாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்! இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தர்மன்’, ‘சேயோன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவற்றின் வெளியீட்டுத் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், பொங்கல் 2027 வெளியீட்டை முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ‘வேட்டுவம்’, பொங்கல் திரையரங்க வெளியீட்டுப் போட்டியில் களமிறங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.…
Read MoreENEMY OF THE SMUGGLER – விமர்சனம் 4/5..
கதை…. அப்பாவை இழந்த சரண் தன் தாய் ராதிகாவுடன் வசித்து வருகிறார்.. ஏற்கனவே குடும்பத்தில் கடன் பிரச்சினை அதிகமாக இருப்பதால் குறுக்குவழியில் அதிக பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.. இவருக்கு துணையாக இருக்கிறார் போலீஸ் இன்பார்மர் பால சரவணன்.. கடல் வழியாக இந்தியாவிற்கு வரும் ஹெராயன் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி அதன் மூலம் கோடி கணக்கில் சம்பாதிக்க திட்டமிடுகிறார் சரண்.. ஏற்கனவே இந்த தொழிலில் உலக அளவில் கொடிகட்டி பறக்கும் லால் மற்றும் ஜே.டி. சக்கரவர்த்தியிடம் இவர்களின் திட்டம் பலித்ததா.? இவர்களின் சதி திட்டத்தை அறிந்த போலீஸ் சமய முரளி அவர் ஒரு திட்டம் போடுகிறார்.. இறுதியில் என்ன ஆனது.? இந்த சதி திட்டத்தில் சிக்கியவர் யார்.? மீண்டது யார்..? என்பதெல்லாம் யூகிக்க முடியாத அதிரடியான சம்பவம்.. நடிகர்கள்… வடசென்னை படத்தில் ஐஸ்வர்யாவின் சகோதரனாக நடித்த சரண்…
Read Moreபனி விழும் இரவு விமர்சனம்… 3/5
கதை … கொடைக்கானலில் இருக்கும் தன் மனைவியின் பங்களாவுக்கு வருகிறார் நாயகன் அருண் கார்த்திக்.. அடுத்த நாளே தன் மனைவியை காணவில்லை.. சிலர் தன்னை அடித்து மனைவியை கடத்தி விட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்.. இதனையடுத்து அந்த பங்களா செக்யூரிட்டி அக்கம் பக்கத்தினர் என அனைவரிடம் விசாரிக்கிறார் போலீஸ் சேரன் ராஜ் மற்றும் கருப்பு நம்பியார்.. ஆனால் அந்த செக்யூரிட்டி உள்ளிட்ட அனைவரும் அவர் மட்டும்தான் வந்தார்.. அப்படி ஒரு பெண்ணை நாங்கள் பார்க்கவில்லை என்கின்றனர்.. அப்படி என்றால் அவர் சொல்லும் அந்த பெண் யார்.? அவர் எங்கு சென்றார் என்பதை எல்லாம் யூகிக்க முடியாதபடி கற்பனை கலந்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.. நடிகர்கள்… ஒரு நொடி படத்தில் முக்கிய கேரக்டர் நடித்த அருண் கார்த்திக் இந்த படத்தின் கதை நாயகன்.. அலட்டிக்…
Read More