மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ படம்.. இப்படம் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டின் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம்தான் இந்த ஏ படம் இப்படத்தில் ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார் கதாநாயகியாக மேகா ஸ்ரீ இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குனர் கேஷ்லெஸ் ஷிவாகோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது… இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் ராஜ கணபதி கூறுகையில் நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம் ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கான சுமார் 45க்கும் மேற்பட்ட காட்சியில் வெட்டுகொடுத்தார்கள்.. இதனால் நாங்கள்…
Read Moreரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’
இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரை அனுபவமாக அமையும். 1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தற்போது மீண்டும் இணைவது இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு அபாரமான கலைப் பயணங்கள், இத்திரைப்படத்தின் மூலம் ஒன்றாக சங்கமிக்கின்றன. இந்த மாபெரும் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த வரலாற்றுச் சந்திப்பை சாத்தியமாக்கியதில் பெருமை கொள்கின்ற தயாரிப்பு நிறுவனம், இந்தப்…
Read Moreஎம்.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். “எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஒரு இளைஞனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விசயம், எப்படி உலக அளவிலான வணிகமாக மாறியது என்பதை இதுவரை கண்டிராத புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் நாயகனாக வெற்றி நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.…
Read Moreமை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் – தயாரிப்பாளர் எம்.ஜே.சிவராமகிருஷ்ணா அறிவிப்பு
வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மை டியர் டாலி”. அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தப் படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மை டியர் டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக…
Read More‘GS (Gods and Soldiers)’ படப்பிடிப்பு நிறைவு – Post Production பணிகளில் நுழைந்தது படக்குழு!
ரஃப் நோட் புரொடக்ஷனின் (Rough Note Production) தயாரிப்பில், புகழ்பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய (தமிழ்–தெலுங்கு) இருமொழித் திரைப்படமான ‘Gods and Soldiers’ திரைப்படத்தின் படப்பிடிப்பை, படக்குழு அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளது. பல இடங்களில் விறுவிறுவென படப்பிடிப்பு நடைபெற்ற பிறகு, படக்குழு தற்போது விரிவான Post-Production பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, வலுவான உணர்ச்சி மையத்தைத் தழுவி உருவாகும் Gods and Soldiers படம், கலாச்சார வேர்களோடு இணைந்த கதை சொல்லலையும், மக்களைக் கவரும் வணிக ரீதியான அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு திரை அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது—இவை அனைத்தும் விஜய் மில்டனின் திரைப்பட பாணியின் அடையாளங்களாகும். இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். ஆரி அர்ஜுணன் இதுவரை இல்லாத ஒரு…
Read Moreஅதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி “ராயா அறிமுகம்” வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது. டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணிக்கு நகரும் இந்தக் கதை, இருண்ட, பரபரப்பான சூழலுடன்…
Read Moreதயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றியை நோக்கி விடியல் ராஜு!!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால் 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் இப்போது துணைத்தலைவராக இருக்கும் ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையில் ஒரு அணியும்,தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தலைமையில் ஒருஅணியும் போட்டியிடுகின்றனர். சுயேச்சையாக தலைவர் பதவிக்கு கடந்த முறை போட்டியிட்ட மன்னனும், பொருளாளர் பதவிக்கு விடியல் ராஜ், செயலாளர் பதவிக்கு கதிரேசன் துணை தலைவர் பதவிக்கு சதீஷ்குமார், நடிகர் உதயா, இணை செயலாளர் பதவிக்கு விஜயசேகரன் ஆகியோர்போட்டியிடுகிறார்கள். இரண்டு அணிகளும் கரன்சி, அன்பளிப்புகள் என வாரி வழங்கி வாக்கு கேட்டு வரும் தேர்தல் களத்தில் சுயேச்சையாக போட்டியிடும் விடியல் ராஜுஎந்தவித அன்பளிப்புகளும் கொடுக்காமல் தனது கடந்த கால செயல்பாடு, தேர்தல் களத்தில் களப்பணி, வாக்கு…
Read Moreஇசைஞானி இளையராஜா ஆசீர்வதித்துள்ள படம் ‘அந்தோனி’ : இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு!
இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன். தயாரிப்பு : கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது, ” இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட…
Read Moreஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!
மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார். குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக…
Read Moreவன்முறையும் மர்மமும் நிறைந்த உலகம் ‘டாக்ஸிக்’ டீசர் பிப்ரவரி 20 முதல்!!
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தனித்துவமான போஸ்டர், படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் வன்முறையும் இருண்மையும் நிறைந்த உலகத்தை காட்டுகிறது. ரத்தம் கசிந்த பனிப்புயல் போன்ற சூழலில், நடுவில் ராயாவாக யாஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முகம் தெளிவாக தெரியாத நிலையில், நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் அவர், இரத்தம் தோய்ந்த தரையில், கண்களுக்கு எட்டாத வன்முறையின் சிதைவுகளால் சூழப்பட்ட நிலையில், ஆபத்தான ஒரு பிரபஞ்சத்தில் நிற்பதாக அந்த போஸ்டர் காட்டுகிறது. இந்த டீசர் அறிவிப்பு, “டாக்ஸிக்” திரைப்படம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக தொடர்ந்து இருப்பதற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் உத்தியும், திட்டமிட்ட மார்க்கெட்டிங் உத்திகளும், ரசிகர்களின்…
Read More