தமிழ்நாட்டு மக்கள் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள்! – ‘ஹவுஸ் மேட்ஸ்’ நாயகி அர்ஷா பைஜூ உற்சாகம்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ‘ஹவுஸ் மேட்ஸ்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதோடு, அர்ஷா சாந்தினி பைஜூவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறது. தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் விளம்பர நிகழச்சிகளுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து வரும் அர்ஷா சாந்தினி பைஜூ, தனது முதல் தமிழ்ப் படம் அனுபவம் மற்றும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார். மலையாள சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தாலும், தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எனது ஆசை தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. தமிழ்நாட்டு…

Read More

கல்யாணி (Kalyani) & நஸ்லென் (Naslen) இணைந்து நடிக்கும், “லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று திரைக்குவருகிறது

துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு, லோகா – சேப்டர் 1 : சந்திரா திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தத்திரைப்படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் ( Dominic Arun) எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து…

Read More

யோகி பாபு நடிக்கும் ‘சந்நிதானம் (P.O)’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘சந்நிதானம் (P.O)’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது. ‘Tootu Madike’ போன்ற படங்களை தயாரித்த கன்னடாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sarvata Cine Garage மற்றும் ‘Veerappan’, ‘Sooryavamsi’, ‘Vaanku’ (தயாரிப்பு), ‘Nalla Samayam’ (விநியோகம்), ‘Rudhiram’ (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) போன்ற வெற்றி படங்களை தந்த மலையாளத்தின் முன்னணி நிறுவனமான ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, அமுத சாரதி வசனம் எழுதி இயக்கியுள்ளார். நட்சத்திரப் பட்டாளத்தை கொண்ட இந்த படத்தில், 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

Read More

நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் பாடல் வெளியாகியுள்ளது!

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில் ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் சேர்த்து இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜானு சாந்தர். ‘மரியான்’ படத்தில் ‘எங்க போன ராசா…’ உள்ளிட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர் குட்டி ரேவதி உணர்வுப்பூர்வமான ஆழமான பாடல் வரிகளை இதில் கொடுத்துள்ளார். கூடுதல் பாடல் வரிகளை சிவம் மற்றும் தீபக் கார்த்திக் குமார் எழுதி, இந்தப் பாடலுக்கு மேலும் அழகூட்டியுள்ளனர். பிரதீப் குமார் மற்றும் என்கே பிரியங்காவின் உணர்ச்சிப்பூர்வமான குரல்கள் இந்தப் பாடலின் ஆன்மாவாக அமைந்துள்ளது. இவர்களின் மென்மையான குரலுக்கு துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் திரையில் ஜோடி…

Read More

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்களின் மூலம் ராகங்களை ரசிகர்களுக்கு எட்டச் செய்யும் புதிய முன்னெடுப்பு

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும் அவரது மகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்து சிறு வயதிலேயே பாராட்டுகளை வென்ற சாதனாவின் தந்தையான வெங்கடேஷ் சங்கர், இசை மீது கொண்ட தீராக்காதலின் விளைவாக முற்றிலும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார். பாரம்பரிய இசையின் ராகங்களையும் அவை திரைப்பட பாடல்களில் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்பதையும் பாமர ரசிகர்களுக்கும் சுவாரசியம் குன்றாமல் விளக்கும் வகையில் துபாயில் RRR (ரீல் ரியல் ராகா) என்ற இசை நிகழ்ச்சியை நடத்திய வெங்கடேஷ் சங்கர், அதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறார். உலகெங்கிலும் உள்ள திறமைகளைக் கண்டறிந்து கொண்டாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் தளமான தி சென்டர்ஸ்டேஜுடன் இணைந்து இதை அவர் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்காக…

Read More

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் ‘துள்ளுவதோ இளமை’ நடிகர் அபிநய் மருத்துவச் செலவிற்கு நடிகர் தக்‌ஷன் விஜய் உதவினார்!

துள்ளுவதோ இளமை, ஜங்ஷன், தாஸ் ஆகிய படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். இதை அறிந்த ‘கபளிஹரம்’ படத்தின் கதாநாயகன் தக்‌ஷன் விஜய் நேரில் சென்று, நலம் விசாரித்துவிட்டு, மருத்துவச் செலவிற்கு கணிசமான பணம் மற்றும் அவருக்கு தேவையான சில பொருட்கள் கொடுத்து ஆறுதல் கூறினார்! 20 கிலோ எடை குறைந்து பரிதாபமான நிலையில் இருக்கும் அபிநய்க்கு கல்லீரல் மாற்று ஆப்ரேஷன் நடக்கும் போது, மேலும் பொருளாதார உதவிகள் செய்கிறேன். தைரியமாக இருங்கள். நலமாகி மீண்டும் நடிப்பீர்கள் என தன்னம்பிக்கை கொடுத்தார்! தக்‌ஷன் விஜயிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, அபிநய் கண்ணீர் விட்டு அழுதார்! ‘எனக்கு இந்த நிலைமை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அம்மா, அப்பா, பொண்டாட்டி, பிள்ளை, உறவினர்கள் யாரும் இல்லை. நான் அனாதையாக…

Read More

நாளை நமதே – திரை விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்குள் அடங்கி ஒடுங்கி கிடக்கிறது ஒடுக்கப்பட்ட சமூகம். ஆதிக்க சாதி வைத்தது தான் அந்த ஊரின் எழுதப்படாத சட்டம். அவர்களில் ஒருவரே பஞ்சாயத்து தலைவராகவும் இருப்பார். இந்நிலையில் இந்த தொகுதியை தனித்தொகுதியாக அறிவிக்கிறது அரசு. அக்கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டால் நடப்பதே வேறு என மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருமான தாத்தாவை தேர்தலில் நிற்கும்படி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் கேட்டுக் கொள்கிறார்கள். அவரும் அதை ஏற்று வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் வழியில் ஆதிக்க சாதியினரால் கொல்லப்படுகிறார். அவருடன் சென்ற வர்களும் உயிர் இழக்கிறார்கள். அதோடு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவரையும் கொன்று எரித்து,…

Read More

”கொரில்லாவாக நடிக்க 3 மாதம் பயிற்சி எடுத்தேன்”- ‘குற்றம் புதிது’ சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது, “ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க கதைகள் கேட்டுக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. அவரை நேரில் சந்தித்து ’குற்றம் புதிது’ படத்தின் கதை சொன்னேன். கதை பிடித்ததும் முழு மனதோடு படத்தைத் தயாரிக்கவும் சம்மதித்தார். நடிப்பு, பயிற்சி, சண்டை…

Read More

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்.   கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக…

Read More

எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் “பிளாக் கோல்டு” திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது..!!

MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், “தீர்ப்புகள் விற்கப்படும்” புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் First லுக் வெளியானது. First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது. நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்கு கண்டைனரும் காட்சியின் வீரியத்தை காட்டுகிறது. இந்த First லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன்…

Read More