Torque Entertainment Delivers a Landmark Musical Experience with the Grand Finale of Hip Hop Tamizha’s “Return of the Dragon Machi” World Tour

Chennai witnessed an electrifying and unforgettable musical spectacle as Torque Entertainment, one of the most reputed names in the live event industry, successfully hosted the grand finale of *Hip Hop Tamizha’s* “Return of the Dragon Machi” World Tour. The event has now been widely celebrated by fans and industry insiders as “The Concert of the Decade,” marking a historic moment in the city’s live entertainment landscape. With over 15 years of experience in the event industry, Torque Entertainment has established itself as a powerhouse in the world of live shows…

Read More

சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு படத்தின், படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் D.இமான்…

Read More

ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் வழங்கும் ஆதித்யா தரின் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் துரந்தர் பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் களமிறங்குகிறார் – டிரெய்லர் வெளியானது!

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது. இந்திய திரையுலகில் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக, எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாக திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண்ட் அஜய் சன்யாலாக மாதவன், மிரட்டும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் மற்றும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத் ஆகியோர் தங்களது பவர்ஃபுல்லான நடிப்பால் மிரட்டியுள்ளனர். தியேட்டர்களில்…

Read More

சர்வதேச மகளிர் தினத்தில் ‘மயிலா’ டீசர் வெளியீடு — IFFR Premiere மற்றும் NETPAC பரிந்துரைக்கு பிறகு புதிய கவனம்!

சென்னை, மார்ச் 8: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “மயிலா” திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண்களின் வலிமை, பொறுமை மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் காட்டும் துணிச்சலை பிரதிபலிக்கும் கதையை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. மயிலா படத்தை எழுதி இயக்கியவர் செம்மலர் அன்னம்.தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள “மயிலா”, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது. இந்தப் பார்வையின் மூலம், குடும்பங்களையும் சமூகங்களையும் அமைதியாக வடிவமைக்கும் பெண்களின் வாழ்வியலை இப்படம் வெளிப்படுத்துகிறது. “மயிலா” உலகத் திரையரங்கில் முதன்முதலாக International Film Festival Rotterdam (IFFR) திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு உலக சினிமாவில் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் Bright Future பிரிவில் இப்படம் இடம்பெற்றது.…

Read More

மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார்.  ‘பூவே உனக்காக’ புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் நடித்துள்ளனர். முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும்…

Read More

கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான், திருமதி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர்…

Read More

ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்.., ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…, பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த…

Read More

99 / 66 – விமர்சனம்

  கதை…   ஒரு அப்பார்ட்மெண்டில் 66 ஆவது எண் வீட்டில் தனது கணவருடன் குடியேறுகிறார் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி.. அதே அப்பார்ட்மெண்டில் 99 என்ற எண் கொண்ட வீட்டில் இருக்கும் ஸ்வேதாவிட நட்புக் கொள்கிறார்.   ஒரு கட்டத்தில் தனது தோழியை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறார் என்பதை அறிகிறார்.. அதனை தடுத்து நிறுத்தும் போதுதான் ஏற்கனவே ஸ்வேதா இறந்து விட்டார் என்ற அங்கு உள்ள குடியிருப்புவாசிகள் சொல்கின்றார்கள்.   அப்படியானால் இறந்து போனவர் தன் கண்களுக்கு மட்டும் தெரிவது ஏன் என்று குழப்பத்தில் இருக்கிறார் நாயகி.. அப்படியானால் இதற்கு பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் மீதிக்கதை..   நடிகர்கள்…   சின்னத்திரை உலகில் பிரபலமானவர் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி.. இதில் அழகான நடிப்பில் கவருகிறார் ஒரு கட்டத்தில் ஆவி புகுந்த பிறகு இவர் ஆட்டங்கள் வேற…

Read More

வடம் – விமர்சனம்

    கதை… அப்பா நரேன்.. மகன் விமல் இவர்கள் இருவரும் மாடுகளை வளர்ப்பதில் ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்வது என ஆர்வம் காட்டி வருகின்றனர்.. அப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் ஒரு கண் பார்வை இல்லாத பாண்டி முனி என்ற மாட்டை நட்டி வேண்டாம் என வெறுத்து விடுகிறார்.. இதனையடுத்து அந்த மாட்டை வாங்கி பாசமுடன் வளர்த்து வருகிறார் விமல்.. அது பல போட்டிகளில் பங்கேற்று விமலுக்கு பெயரை பெற்று தருகிறது.. இதனை அறியும் நட்டி பாண்டி முனி மாடு மீண்டும் வேண்டும் என கேட்கிறார்.. இதனால் இருவருக்கும் பிரச்சினை வருகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… விமல், நட்டி நடராஜ், சனக்ஷா ஸ்ரீ, முனிஷ்காந்த், நரேன், இந்துமதி, பால சரவணன், மது சூதனன், தீபா சங்கர்.. பெரும்பாலும் விமல்க்கு கிராமத்து…

Read More

‘லீடர்’ டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது. ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ்.…

Read More